Inspire to Achieve | சிகரம் தொடு | A.Manikandan IAS | UPSC Exam in Tamil | Sharing Success Strategy

Описание к видео Inspire to Achieve | சிகரம் தொடு | A.Manikandan IAS | UPSC Exam in Tamil | Sharing Success Strategy

கீதாசாமி பப்ளிஷேர்ஸ் பெருமையுடன் வழங்கும் “Inspire to Achieve” அதாவது “சிகரம் தொடு” என்ற இந்தப் பதிவில் பங்கு பெருபவர் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ரா மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியர் திரு A.மணிகண்டன் IAS அவர்கள்.

திரு மணிகண்டன் கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த வடக்கு மேலூர் கிராமத்தில் பிறந்தவர். தனது பள்ளி படிப்பு முழுவதையும் தமிழ் வழியில் படித்துள்ளார். மருந்தியல் ஆளுநர் இளைஞர் பட்டத்தை கோவையில் உள்ள PSG College of Pharmacy லும், மருந்தியல் ஆளுநர் மேற்படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசில் Drug Inspector அதாவது மருந்து ஆய்வாளராக சேர்ந்துள்ளார். பின்பு இரண்டு ஆண்டுகள் Tamil Nadu Medical Corporation ல் பணிபுரிந்துள்ளார். UPSC குடிமைப் பணித் தேர்வை 2013ஆம் ஆண்டு தொடங்கி 2014ஆம் ஆண்டில் ஆங்கில வழியில் எழுதி Indian Railways Account Service என்ற இந்திய ரயில்வே கணக்குப் பணியில் சேர்ந்த இவர், இந்திய வருவாய் பணியை சேர்ந்த மூத்த அதிகாரி மருத்துவர் விவேகானந்தனின் அறிவுரையின் படி, பணியில் இருந்துகொண்டே படித்து தமிழ் வழியில் குடிமைப்பணி தேர்வை மீண்டும் எழுதி 2016ஆம் ஆண்டு தேர்வில் வெற்றிபெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.

நிறைய கவிதைகள் எழுதுபவர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிறைய விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். இதுவரை மூன்று நூல்கள் எழுதி, எழுதிய கவிதைகளுக்கு பாரதி என்ற பட்டத்தையும் செம்புல கவிஞர் என்ற பட்டத்தையும் தனதாக்கிக் கொண்டவர். அவர் தமது அனுபவத்தை இளைஞர்கள் எப்படி இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் வெற்றி பெற முடியும் என்ற வழிமுறைகளை அருமையாக விளக்கியுள்ளார் வாருங்கள் கேட்போம்.

#InspiretoAchieve #ManikandanIAS #IndianAdministrativeService #IASExaminTamil #CivilServiceExaminTamil #SharingSuccessStrategy #21StepsforIASExam

In the "Inspire to Achieve" series, we have Mr.A.Manikandan, IAS, Additional Collector, Agra District, Uttar Pradesh. Mr.Manikandan belongs to a small village called Vadakku Melur near Neyveli, Cuddalore District, Tamil Nadu. He has a special quality of achieving success/getting service in the Civil Services in writing the Exam both in English medium for the first time and got Indian Railway Accounts Service and Tamil medium next time and got Indian Administrative Service. He shares his success strategy for the Civil Services.

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers

Комментарии

Информация по комментариям в разработке