புணர்ச்சி - இயல்புணர்ச்சி , விகாரபுணர்ச்சி

Описание к видео புணர்ச்சி - இயல்புணர்ச்சி , விகாரபுணர்ச்சி

புணர்ச்சி என்றால் என்ன?

புணர்ச்சி puṇarcci , n. id. 1. Combination; association, union; சேர்க்கை. (பிங்.) 2. Co-residence; ஒரு தேசத்தவரா யிருக்கை. புணர்ச்சி பழகுதல் வேண்டா (குறள், 785). 3. Coition; கலவி. (பிங்.) தகைமிக்க புணர்ச்சியார் (கலித். 118). 4. (Gram.) Coalescence of letters or words in canti; எழுத்து முதலியவற்றின் சந்தி.

நிலைமொழியும், வருமொழியும் ஒருங்கிணைந்து வருவது புணர்ச்சி ஆகும். அது இயல்புணர்ச்சி விகாரப் புணர்ச்சி என இருவகை உண்டு.

நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலும், நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நடைபெறும் நிகழ்வுகளை நன்றாக உற்று நோக்குதல் வேண்டும்; உற்று நோக்கித் தெரிந்துகொள்வது தான் கல்வி. நிகழ்வுகளையும் செயல்களையும் பற்றி ஏன், எப்படி, எவ்வாறு, எதனால் என நமக்கு நாமே வினாக்களை எழுப்பி சிந்தித்தல் வேண்டும். விடை கிடைக்காத போது பெரியவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.


நாம் அன்றாடம் செல்லும் திருமண வீட்டின் முன் வாழைமரம் கட்டுவார்கள். இறைவனுக்கு வாழைப்பழம் படைப்பார்கள். இதில் வரும் சொற்களை கவனித்தால், வாழைமரம் மற்றும் வாழைப்பழம் ஆகும். இவ்விரு சொற்களையும் கூர்ந்து நோக்கினால் முதலில் வாழை மரம் என்பது வாழை + மரம் என்ன இணைந்து எத்தகைய மாற்றமும் இல்லாமல் அப்படியே சேர்ந்துள்ளன.


ஆனால் இரண்டாவது சொல்லில் வாழை + பழம் என்பது வாழைப்பழம் என இரு சொற்கள் இணையும் பொழுது வல்லின மெய் (ப்) சேர்ந்து வந்துள்ளது. இவ்வாறு இரு சொற்கள் இணைவதற்கு புணர்ச்சி என்பது பெயர்.

மேலே கூறிய உதாரணங்களை பார்த்தோமென்றால் இரு தொடர்களிலும் புணர்ச்சி ஒன்றுபோல் இல்லை. ஏனெனில் முதல் தொடரில் இயல் புணர்ச்சியும் இரண்டாவது தொடரில் விகாரப் புணர்ச்சியும் இடம்பெற்றுள்ளன.

நிலைமொழியும், வருமொழியும் சேரும்பொழுது எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றால் அது இயல்புணர்ச்சி ஆகும்.

உதாரணங்கள்


பொன் + வளையல் = பொன்வளையல்
மலர் + மாலை = மலர்மாலை
பனை + மரம் = பனைமரம்

மேலே கூறிய உதாரணங்களில் நிலைமொழியும் வருமொழியும் இணைந்து உள்ளது. இருப்பினும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதுவே இயல்புணர்ச்சி உதாரணங்கள்.

மெய்யீறு என்றால் என்ன?


புணர்ச்சியில் வரும் நிலைமொழியின் இறுதி, புள்ளி எழுத்தாக இருந்தால் அதாவது மெய்யாக இருந்தால், அதற்கு மெய்யீறு எனச் சொல்லுதல் வேண்டும்.

உயிரீறு என்றால் என்ன?


உணர்ச்சியில் வரும் நிலைமொழியின் இறுதி, உயிர் மெய்யாக இருந்தால் உயிரீறு எனச் சொல்லுதல் வேண்டும்.

குறிப்பு:


ஓரெழுத்துச் சொல்லில் மட்டும் உயிரீறு வெளிப்படையாகத் தெரியும். உதாரணம் தீ + பிடித்தது = தீப்பிடித்தது.

ஓரெழுத்து சொல்லாக உயிர்மெய் எழுத்து வரும் பொழுது, (ப் + ஊ) எனப் பிரித்து உயிர் ஈற்றை காணுதல் வேண்டும். உதாரணம் பூ (ப் + ஊ) + பூத்தது = பூப்பூத்தது.

இப்பொழுது வருமொழிக்கு வருவோம். வருமொழியின் முதலெழுத்து உயிர் மெய்யாக இருந்தால் மெய்முதல் என சொல்லுதல் வேண்டும். உயிராக இருந்தால் உயிர்முதல் எனக் கூறுதல் அறிவு.

உதாரணம்:


பொன் + வளையல் = பொன்வளையல் (வ் + அ)

இங்கு வ் மெய் முதல்.

கண் + அழகு = கண்ணழகு

இங்கு அ உயிர்முதல்.

விகாரப் புணர்ச்சி என்றால் என்ன?


நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது மாற்றங்கள் ஏற்படுமாயின் அதனை விகாரப் புணர்ச்சி என்பர்.

உதாரணங்கள்


பலா + சுளை = பலாச்சுளை - இங்கு மெய் தோன்றியது. ஆதலால் இது தோன்றல் விகாரம் புணர்ச்சி ஆகும்.

படம் + காட்சி = படக்காட்சி - நிலைமொழி ஈறுகெட்டு மெய் தோன்றியது. அதாவது ம் எழுத்து மறைந்து க் தோன்றுகிறது. இது கெடுதல் விகாரப்புணர்ச்சி ஆகும்.

பொன் + சிலை = பொற்சிலை - நிலைமொழி ஈறு திரிந்தது. அதாவது ன் போய் ற் ஆனது. இது திரிதல் விகாரப்புணர்ச்சி ஆகும்.

Комментарии

Информация по комментариям в разработке