Iraiva Un Arulal - Tamil Qaseeda (Vocals Only - No Music) by Ahmad Salih Faheemi

Описание к видео Iraiva Un Arulal - Tamil Qaseeda (Vocals Only - No Music) by Ahmad Salih Faheemi

மதியாளர் மடியினில் மரணிக்க வேண்டும்
(புனிதப் பயணத்திற்கு முன் ஒரு ஒத்திகைப் பயணம்)

Lyrics & Voice: Hafiz B.S. Ahmad Salih Faheemi

Audio Mixing: Sajid Khan

Visuals & Effects: Hameed Nagori

Recording: Pilot Simple Software, Hong Kong

Released by:
Rumi International Sufi Council
Faheemiya Publishers (Chennai)

Supported by: V United, Hong Kong

==============
ஷுக்ர் – நன்றி

இறைவா உன் அருளால்
திரு வீடு காணும்
பெரும் பேறு தந்த
உனக்கே எம் நன்றி

மலரான நபியின்
மணமான ரவ்ழா
அகமாறக் காண
அழைத்தாயே நன்றி

படி மீதில் நாளும்
பதி தன்னைக் காண
பணிந்தேனே வேண்டி
ஏற்றாயே நன்றி

ஆனந்தம்

காணாத காட்சி
கண் முன்னே கண்டு
அதிலேயே ஆழ்ந்து
ஆனந்தம் கொள்வேன்

புரியாத இன்பம்
புகுந்தே என் நெஞ்சில்
நினைவென்னும் கடலில்
நிலை மாறிச் செல்வேன்

கம்பீரக் கஃபா
கண் முன்னே தோன்ற
பாவி என் நெஞ்சில்
பயம் தீர்ந்து போகும்

பயகம்பர் நபியின்
பசு மன்றத் தோற்றம்
பயல் என்னை தேற்றும்
பாவங்கள் மாற்றும்

பயமும் ஆதரவும் (கவ்ஃப் வர் ரஜா)

பயணத்தின் நாட்கள்
அருகே அணைக்க
இதயத்தின் வேகம்
பலதாகிக் கண்டேன்

சில நேரம் நடுக்கம்
பல நேரம் ஏக்கம்
கவ்ஃபும் ரஜாவும்
கலந்திட்டத் தாக்கம்

(qh)கஹ்ஹாரின் நாமம்
கலக்கத்தில் ஆழ்த்த
(gh)கஃப்ஃபாரின் குணம் வந்து
கனிவாக தேற்றும்

ரஹ்மத்தின் ராஜர்
பொருட்டாலே என்றும்
நாட்டங்கள் யாவும்
நிறைவேற வேண்டும்

முதல் பார்வை

உடல் அங்கு வரும் முன்
உயிர் வந்து சேர
அகக் கண்ணில் பலவும்
அலை பாயக் கண்டேன்

ஹரமென்னும் எல்கை
அருகில் நெருங்க
இறைக் காதல் மீறி
இன்பத்தை கூட்டும்

அதரம் நடுங்கி
உதிரம் உதற
துடிக்கும் என்னிதயம்
நின்றது போல் உணர்வு

சட்டென்று ஓரத்தில்
திரை மெல்லத் தெரிய
இதயத்தின் கறை நீங்கி
விழி நீரை சிந்தும்

வியப்பு

ஆதியின் இல்லம்
அழகான கஃபா
முழுதாகக் காண
கண் கோடி வேண்டும்

உணர்வினை பகர
ஒரு கோடி வாய்கள்
இருந்தாலும் போதாது
வர்ணனை சொல்ல

கஃபனாடை பூண்ட
நேசர்கள் வெள்ளம்
மஹ்ஷர் வெளியோ
எனக் கூற தோன்றும்

மஹ்மூது நபியை
குறிப்பில் நிறுத்தி
கண்ணுறும் யாவும்
பேரின்பமாகும்

ஞாபகம்

கஃபாவின் கறுப்பு
திரை பற்றும் நேரம்
ஹபஷி பிலாலின்
தியாகங்கள் தோன்றும்

குன்றுகள் ஊடே
தொங்கோட்டம் ஓட
மழழையின் அழு ஓசை
மனதை பிழியும்

சுவனத்தின் கல்லை
முத்தி முகர
வாலிபர் அஹ்மதின்
வாசம் நுகர்வேன்

புனிதத்தின் நகரின்
சின்னங்கள் யாவும்
பெருமானின் மாண்பை
பறை சாற்றி பேசும்

பிரம்மை

மக்காவின் தெருவில்
மனம் ஒன்றிப் போக
ஒவ்வொன்றும் பேசுவதாய்
பிரம்மை தோன்றும்

அர்க்கத்தின் இல்லம்
நெருக்கத்தில் கடக்க
கன்னல் மொழிகள்
காதோரம் கேட்கும்

அதிகாலைப் பொழுதின்
அமைதியை களைத்து
ஸுமையாவின் அலறல்
இடி போலிறங்கும்

குடல் தன்னை நீக்க
ஓடோடி வந்த
Zஜஹ்ராவின் தடங்கள்
தைரியமூட்டும்

உணர்வு

கத்தாபு மகளார்
ஃபாத்திமா வீட்டில்
ஸூரத்து தாஹாவின்
வசனம் மணக்கும்

வீரர் உமரின்
கூரான வாட்கள்
பெருமானின் பதத்தில்
மலராகி கிடக்கும்

ஹானியின் தாயார்
இல்லத்தின் உள்ளே
மிஃராஜின் சூடு
தணியாது நிற்கும்

வம்பர்கள் சூழ்ந்தும்
பயமேதுமில்லா
அலியாரின் துயிலில்
கனவாக வேண்டும்

பிரிவும் பரிவும்

கஃபாவின் பிரிவால்
நெஞ்சம் கலங்க
கஃபாவின் கஃபா
பரிவாக தேற்றும்

மதினாவின் காற்று
மேனியை தீண்ட
மெய் தன்னை மறந்தே
புதிதாதிப் போவேன்

காதலர் நேரில்
வரவேற்கும் காட்சி
கற்பனை செய்தே
களிப்பினில் ஆழ்வேன்

வாழ் நாளின் ஏக்கம்
மஹ்மூதர் மன்றில்
மலராகும் தேட்டம்
நிறைவேறும் நாட்டம்

பயணம்

பாதைகள் தோறும்
பயகம்பர் நினைவு
கற்பனை பயணம்
கலையாமல் தொடரும்

பேரீச்ச மரங்கள்
வழி தனில் காண
விழியினில் பூமானின்
முதுகின் வடுக்கள்

ஒட்டகக் கூட்டம்
கடந்தேகிச் செல்ல
கஸ்வாவின் அதிபர்
நடுவாகத் தோற்றம்

மதினாவின் மலர்கள்
குறுநகை ஒலியில்
உணர்வுகள் மீண்டே
புதுமைகள் புரிவேன்

உவகை

பசு மன்ற குப்பாவின்
எழிலார்ந்த அழகு
விழி மீதில் படர
மொழி நான் இழப்பேன்

கவர்ந்தீர்க்கும் காதல்
தளம் தன்னை நெருங்க
நாணத்தில் கண்கள்
தாழ்வாகிப் பணியும்

வார்த்தைகள் மரித்தே
சிலையாகிப் போவேன்
உயிரையும் துறந்திடும்
பேராவல் கொள்வேன்

பெரும் பேறு பெறவே
நான் செய்த தென்ன
என எண்ணி திகைத்தே
ஷுக்ரில் கரைவேன்

உருக்கம்

பூலோக சொர்க்கம்
பூமானின் ரவ்ழா
முன் நின்று முகமன்
பணிவாகச் சொல்ல

இதயத்தின் வேந்தர்
இரஸுல் எம் நாதர்
பதில் கூறி அருகில்
அமர்த்திடும் ஆசை

பொன்னான பதத்தில்
கண் மடை திறக்க
பரிதாபம் கொண்டே
எனை தேற்ற வேண்டும்

பரிவான பார்வை
பயகம்பர் பூக்க
மலை போன்ற பிழைகள்
கரைந்தோடிப் போகும்

பேரின்பம்

நாட்டத்தின் தேக்கம்
திறந்திட வந்தே
ஒரு பார்வை தன்னில்
முழுதாய் மறப்பேன்

பரவசம் மீறி
எம்மானைத் தழுவ
அம்பரின் நறுமணம்
ஆன்மாவில் கரையும்

கண்ணாளர் அணைப்பில்
இழந்து இழந்து
பேரின்ப ஒளியில்
கலந்திடும் ஆசை

வேறென்ன வேண்டும்
இகமீதில் இன்னும்
மதியாளர் மடியில்
மரணிக்க வேண்டும்

மதீனாவின் மலர்கள் கண்டே
நிதி யாவும் பெற்றேன் என்றே
எனை இழந்திழந்தே மீண்டும்
நிறை கண்டே நினைவில் மகிழ்வேன்

மஹ்மூது நபிகள் இல்ல
மதில் வாயில் முத்தி மகிழ்வேன்
மண்ணில் கால் வைக்க மறுத்தென்
தலை கொண்டு நடந்து திரிவேன்

மஹ்பூபை கண்டணைத்தே
மறுபடியும் மீண்டும் கரைவேன்
மண் மாந்தர் எவரும் காணா
மனத் துயரம் துறந்து சிரிப்பேன்


#AhmadSalihFaheemi

Комментарии

Информация по комментариям в разработке