Kuwait Tamil News | Tamil || JAFFNA TAMIL TV || 14.05.2024

Описание к видео Kuwait Tamil News | Tamil || JAFFNA TAMIL TV || 14.05.2024

குவைத்
குவைத் செய்தி
குவைத் தமிழ் செய்தி
குவைத் பொதுமன்னிப்பு 2024
kuwait to colombo tiket price srilanka airline
குவைத் பொதுமன்னிப்பு கண்டுகொள்ளாத மக்கள்
குவைத் வீசா
குவைத்தில் இலங்கையர்களின் outpass விபரம்
பொதுமன்னிப்பில் நாடு திரும்ப தம்மை பதிவு செய்து
0033783588287
https://chat.whatsapp.com/FLM8jCu958a...
வாட்ஸ் அப்
குவைத் அமீரின் அதிரடி
கம்பெனி விசா என்று வீட்டு விசா எடுத்து கொடுத்த போலி ஏஜண்ட்..!

குவைத்தில் பரிதவித்த தமிழர்..!

007 ஜேம்ஸ் பாண்ட் போன்று அதிரடி நடவடிக்கையில்
இறங்கிய இந்திய தூதரகம்
மூன்றே நாளில் தாயகம் சென்ற தமிழர்..! நேசக்கரம் நீட்டிய வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை&நலச் சங்கம்..!

தமிழ்நாட்டை சேர்ந்த அப்துல்லாஹ் என்பவர் குவைத் நாட்டிற்கு ஓட்டுனர் பணிக்காக ஒன்னறை இலட்சம் கொடுத்து வந்துள்ளார்

விசா எடுத்து கொடுத்தவர் கம்பெனி விசா என சொல்லி உள்ளார் வந்த இடத்தில் வீட்டு பணி வேலை கொடுக்க செய்வதறியாது திகைக்க
இரண்டு மாதம் கடந்த நிலையில்

வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கத்தின் சவுதி ரியாத்தில் உறுப்பினராக இருந்த இம்ரான் அவர்கள் மூலம்

குவைத் நாட்டிற்கு வீட்டு ஓட்டுனர் பணிக்காக வந்த சூழலில் இவரது பிரச்சினை குறித்து சொல்லி சங்கத்திற்கு தகவல் கொடுத்து உதவிட கோரிக்கை வைத்தார்

இதனடிப்படையில் இந்திய தூதரகம் சென்ற தமிழர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தூதரகத்தில் முறையிட சிறிதும் தாமத படுத்தாமல் அதிரடியாக களம் இறங்கி தமிழரின் முதலாளியை அழைத்து ஊருக்கு அனுப்பிட கோரிக்கை வைத்துள்ளனர்

அதுமட்டுமின்றி விசா எடுத்து கொடுத்த நபரை அழைத்து விசாவிற்காக வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் இல்லை எனில் வழக்கு பதியப்படும் என சொல்லி உள்ளனர் மேலும் தனி நபர் விசா எடுப்பது குற்றம் அதிலும் விசாவை தூதரகத்தில் பதிவிடாமல் அனுப்பியது குற்றம் என சொல்ல்லி அடையாள அட்டையை தூதரகம் பெற்றுக் கொண்டது இது குறித்து விசா கொடுத்த முதலாளிக்கு தெரிய வர நேரடியாக இந்திய தூதரகம் வந்து ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் ஒரு மாத சம்பளம் கொடுத்து விட்டு இது தனது தவறல்ல என சொல்லி சென்றார்

இதில் பாஸ்போர்ட் கொடுக்க பட்ட அன்றோடு விசா தேதி முடிகிறது
அதனால் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை&நலச் சங்கம் . குவைத் மண்டல நிர்வாகிகள் அதிரடியாக விமான டிக்கெட் எடுத்து அன்றே தாயகம் அனுப்பி வைத்தனர்

பாதிக்கப்பட்ட தமிழர் என்னால் நம்ப முடிய வில்லை மூன்றே நாளில் தாயகம் செல்வேன் என்று என சொல்லி அதிரடியாக உதவிய இந்திய தூதரகத்தின் செயல்பாடுகள் வாழ் நாளில் மறக்க மாட்டேன் எனவும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார் மேலும் அனைத்து விதத்திலும் பக்க பலமாக இருந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கத்தின் நிர்வாகிகள் நூர் முகம்மது, நபீல், நவ்சாத், அஸ்பர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொண்டார் இம்ரான் அவர்களும் நன்றியை தெரிவித்தார்

செய்தி
நெல்லை மரைக்காயர்
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்
வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் அறக்கட்டளை

Комментарии

Информация по комментариям в разработке