arulmigu thaaumana swami thirukovil malaikottai trichy

Описание к видео arulmigu thaaumana swami thirukovil malaikottai trichy

Blessed Mother Swami temple malaikottai trichy



தேவாரம் பாடல் பெற்ற
திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்

பெயர்
புராண பெயர்(கள்): சிரபுரம், மலைக்கோட்டை
அமைவிடம்
ஊர்: திரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: மாத்ருபூதேஸ்வரா்
தாயுமானவர் (தாயுமானேஸ்வரா்)
சந்திரசேகரா்
சுந்தரேஸ்வரா்
உற்சவர்: தாயுமானவர் (தாயுமானேஸ்வரா்).
தாயார்: மட்டுவார்குழலி
சுகந்தகுந்தளாம்பிகை
ஆனந்தவள்ளி
மீனாட்சி
உற்சவர் தாயார்: சுகந்தகுந்தளாம்பிகை.
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்
ஆகமம்: காரணம், காமீகம்
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: சம்பந்தர்
அப்பர்
சுந்தரா்
அருணகிரிநாதா்
தாயுமானவடிகளாா்
ஆதிசங்கரா்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: தமிழர் கட்டிடக்கலை
வரலாறு
அமைத்தவர்: சோழர்கள்


திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஆறாவது சிவத்தலமாகும்.


தாயுமானப் பெருமானைக் காண 258 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
சந்நிதியில் சம்பந்தரின் பதிகம் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
தாயுமானவர் இத்தலத்தில் வாழ்ந்தார். இவருடைய குருவே, மௌனகுரு சுவாமிகள்.
சைவ எல்லப்ப நாவலர் இத்தலத்திற்குத் தல புராணம் (செவ்வந்திப் பிராணம்) பாடியுள்ளார்.
கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது. சிவனுக்கு, பூஜையின்போது சன்னதிக்குப் பின்புறத்தில்தான் (கிழக்கு திசையில்) மேளதாளம் வாசித்து, தேவாரம் பாடுகின்றனர்.

Комментарии

Информация по комментариям в разработке