நமசிவாய பஞ்சாக்கரம் (பஞ்சாட்சரம்) - பொருள் – நமசிவாய ஐந்தெழுத்தின் ஒவ்வொரு எழுத்துக்கு உண்டான பொருள்

Описание к видео நமசிவாய பஞ்சாக்கரம் (பஞ்சாட்சரம்) - பொருள் – நமசிவாய ஐந்தெழுத்தின் ஒவ்வொரு எழுத்துக்கு உண்டான பொருள்

சைவ சிவ தேன்
திருச்சிற்றம்பலம்…

நமச்சிவாயப் பதிகம் | திருமுறை 4 – 11 வது பதிகம்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சி வாயவே
   • நமசிவாய –பஞ்சாட்சரம்– மந்திரத்தின் ஐந...  
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே
   • நாவுக்கு சிறந்தது எது? என்பதை அப்பர் ...  
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே
   • விண்ணளவு செய்த பாவம் கூட போய்விடும்… ...  
இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரான்என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கிற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாம்உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே
   • நம் வாழ்வில் நடுக்கத்தை எப்படிப் போக்...  
வெந்த நீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழு நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே
   • நமக்கெல்லாம் எது சிறந்தது என்று நமது ...  
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாள்தொறும் நல்கு வான்நலன்
குலமில ராகிலும் குலத்திற்கு ஏற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
   • நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே | பற...  
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே
   • நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே | இறைவ...  
இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
   • வீட்டின் புற இருளை போக்குவது எது? | ம...  
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்று அங்கு அடைந்தவர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே
   • எங்கு சென்று அடைந்தவர்க்கு நன்னெறியாக...  
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து
ஏத்தவல் லார்தமக்கு இடுக்கண் இல்லையே
   • கந்த சஷ்டி கவசம் நன்மை | நமச்சிவாயப் ...  
– திருநாவுக்கரசு சுவாமிகள் | மருள்நீக்கியார் | தாண்டகவேந்தர் | ஆளுடை அரசர் | அப்பர்

திருவைந்தெழுத்தினுள் ஒவ்வொன்றும் ஒவ்வொருபொருளைக் குறிக்கும்.
நமசிவாய என்பதன் பொருள் என்ன?

நமசிவாய
ந-நகரம்-திருவடி ம-மகரம்-உதரம் சி-சிகரம்-தோள் வா-வா-முகம் ய-ய-முடி

ந-திரோதன சக்தி ம-மலம் சி-சிவன் வா-சக்தி ய-ஆன்மா

ந-மாயை (கன்மம்) ம-ஆவணம் சி-தோன்றாத் துணை வா-மலைமகள் ய-அப்பர்

நமசிவாய
ந-நிலம்
ம-நீர் சி-நெருப்பு வா-காற்று ய-வானம் (ஆகாயம்)

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி

நமசிவாய மந்திரம் 5 முறையில் சொல்லலாம். அவை :

அஞ்செழுத்து - பஞ்சாக்கரம் – பஞ்சாட்சரம்

1. தூல பஞ்சாக்கரம் – நமசிவாய
2. சூக்கும பஞ்சாக்கரம் – சிவாயநம
3. அதிசூக்கும பஞ்சாக்கரம் (காரண, ஆதி , முத்திப் பஞ்சாக்கரம்) – சிவாய சிவசிவ
4. மாகாகாரண பஞ்சாக்கரம் – சிவசிவ
5. மகாமனு பஞ்சாக்கரம் – சி
தில்லையம்பலம்…

நமசிவாய மந்திரத்தில் ந-ம-சி-வா-ய எழுத்துக்களின் பொருள் என்ன?
#நமசிவாய #சொற்றுணை #நமச்சிவாயப்பதிகம் #திருநாவுக்கரசு #பஞ்சாட்சரம்பொருள் #நமசிவாயபொருள் #சைவசிவதேன் #அருள்உதய்சிவம் #சைவம் #ஓம்நமசிவாய #ஓம்நமசிவாயபோற்றி #shaivashivathaen #aruludhaishivam #NAMACHIVAYA #namachivayameaning #shaivism #bhakti

Комментарии

Информация по комментариям в разработке