திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் தாயுமானவர் கோயில் திருச்சிராப்பள்ளி Rockfort Thayumanavar siva

Описание к видео திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் தாயுமானவர் கோயில் திருச்சிராப்பள்ளி Rockfort Thayumanavar siva

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஆறாவது சிவத்தலமாகும்

முதல் திருமுறை பாடல் :    • திருச்சிராப்பள்ளி பதிகம் 98 நன்றுடையா...  

திருஞானசம்பந்த பெருமான் அருளிய வரலாற்று முறையில் 116 வது திருப்பதிகம் திருச்சிராப்பள்ளி 1 ம் திருமுறை 98 வது திருப்பதிகம் விளக்க உரை..

   • திருச்சிராப்பள்ளி பதிகம் நன்றுடையானைத...  

காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், "தாயுமானவர்' என்று பெயர் பெற்றார்.

ராவணனின் சகோதரனான மூன்று தலை கொண்ட திரிசிரன், இங்குள்ள ஈசனைப் பூஜித்து பேறு பெற்றதால், 'சிராப்பள்ளி’ என்று பெயர் கொண்டதாம். திரிசிரன் தங்கிய இடம் என்பதால் சிராப்பள்ளி என்றானதாக புராணம் கூறுகிறது. இல்லை இல்லை, சமணர்களின் வாழ்விடமாக திருச்சி மலையின் குகைகளும் படுகைகளும் இருந்ததாலும், சமணர்களின் தலைவரான சிரா என்பவர் இங்கு வசித்ததாலும் இது சிராப்பள்ளி என்றானது என்று வரலாறு கூறுகின்றது. சீராப்பள்ளி என்றால் பெருமை கொண்டவர்களின் தங்குமிடம் என்பதால் அது மருவி சிராப்பள்ளி என்றானதாகவும் ஒரு கருத்து உண்டு. ஏழாம் நூற்றாண்டு வரை முதலாம் மகேந்திரவர்மனின் விருதுப் பெயர்களுள் ஒன்றான லலிதாங்குரன் பெருமையை சொல்லும் வகையில் இந்தப் பகுதி 'லலிதாங்குர பல்லவேச்சர கிருகம்’ என்றே அழைக்கப்பட்டது.

10-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசரான நாராயண வேம்பையர் கோன் காலத்து கல்வெட்டு 'சிராமலை’ என்றும், ஸ்ரீராஜராஜனின் கல்வெட்டு 'சிற்றம்பர்’ என்றும், அருணகிரிநாதரும் தாயுமான சுவாமியும் இவ்வூரை 'சிரகிரி’ அதாவது தலையான மலை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக 16 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் 'திரிசிரபுரம்’ என்றே இவ்வூரை அழைக்கின்றது. இதுவே மெல்ல சுருங்கி 'திருச்சி' என்றானது. திருச்சியின் கம்பீர அடையாளமான மலையைப் பற்றி அநேக அருளாளர்கள் பாடிப் பரவியுள்ளனர். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர், தாயுமான அடிகள், சைவ எல்லப்ப நாவலர் (செவ்வந்திப் புராணம்), வேம்பையர் கோன் நாராயணன் (சிராமலை அந்தாதி), மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (யமக அந்தாதி) ஆகியோர் இந்நகரின் தொன்மை மற்றும் பெருமைகள் குறித்து பலவாறு பாடி உள்ளார்கள்.



The Thayumanavar Temple is a temple situated in the Rockfort complex (Malaikottai மலைக்கோட்டை) in the city of Tiruchirappalli, India. Shiva is worshipped as Thayumanavar, and is represented by the lingam and his consort Parvati is depicted as Mattuvar Kuzhalammai. The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical work, the Tevaram, written by Tamil saint poets known as the nayanars and classified as Paadal Petra Sthalam.

திருக்கயிலை மலையில் சிவபெருமானும் உமையம்மையும் வீற்றிருப்பதைப் போல அருள்மிகு தாயுமான சுவாமியும் மட்டுவார்குழலம்மையும் இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பதுடன், முழு முதலாகிய விநாயகப்பெருமான் மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகராகவும், மலை உச்சியில் உச்சி விநாயகராகவும் அருள்பாலித்து வருகின்றனர்.
பழமையான சிவாலயமான இத்திருத்தலம், 274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்ற தலம். தென் கயிலாயம் என்றும், தட்சிண கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்மனால் மலையின் மேலும், கீழும் குடையப் பெற்ற இரு குகைக் கோயில்களும் மேல்குகையில் உள்ள கங்காதரரின் சிற்பமும் மற்றும் தமிழிலும், கிரந்தத்திலும் உள்ள பல கல்வெட்டுகளும் சான்றாக உள்ளது.
கோயில் நடை திறக்கும் நேரம்: காலை 6.00 - 12.30  மாலை 4.00 - 8.30

முகவரி

அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில்,
மலைக்கோட்டை, என்.எஸ்.பி. சாலை,  
திருச்சிராப்பள்ளி - 620002.


திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் உள்ள உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை என மொத்தம் 150 கிலோ #கொழுக்கட்டை #UcchiPillayarTemple
#விநாயகர்சதுர்த்தி #Rockfort  #Malaikottai #Tiruchirappalli #Trichy #உச்சிப்பிள்ளையார் #ராக்ஃபோர்ட் #தாயுமானசுவாமிகோவில் #Trichykovil #HistoryofThayumanavarTemple #சுகப்பிரசவம்அருளும்தாயுமானசுவாமி #திருச்சி #தாயுமானவர் #தாயுமானேஸ்வரா் #SriThayumanavarTemple #தேவாரம்பாடல்பெற்றகோவில்
#திருச்சிராப்பள்ளி #தாயுமானவர்கோயில் #சிரபுரம் #மலைக்கோட்டை #திரிசிராப்பள்ளி #திருச்சிராப்பள்ளிதாயுமானவர் #தாயுமானேஸ்வரா் #மட்டுவார்குழலி #Thayumanavar #தாயுமானசுவாமி #சாம்பிராணிவாசனை #சாம்பிராணி #வாசனைசாம்பிராணி #வாசனை #சம்பந்தர் #தேவாரம் #திருப்புகழ்
#அப்பர்
#சுந்தரா்
#அருணகிரிநாதா்
#தாயுமானவடிகளாா்

Комментарии

Информация по комментариям в разработке