Annamalai-க்கு எதிராக Tamil Nadu BJP-ல் கலகக்குரல்கள்; Amit Shah Tamizhisai Video-ஆல் விவாதம் ஏன்?

Описание к видео Annamalai-க்கு எதிராக Tamil Nadu BJP-ல் கலகக்குரல்கள்; Amit Shah Tamizhisai Video-ஆல் விவாதம் ஏன்?

Annamalai Vs Tamizhisai: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்ட அமித் ஷா,  தமிழிசை சௌந்தரராஜனிடம் கடுமையாக பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது தமிழ்நாடு பாஜகவின் தற்போதைய உட்கட்சி பூசலுடன் இந்த வீடியோ தொடர்புப்படுத்தப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வென்றது குறித்து பேசப்பட்டதை விட, பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது தான் அதிகம் விவாதிக்கப்படுகிறது. பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்திருந்தால் சில இடங்களில் வென்றிருக்கக் கூடும் என அரசியல் விமர்சகர்கள் மட்டுமின்றி அக்கட்சிகளை சேர்ந்தவர்களே கூறத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், தனியாக போட்டியிட்டது தங்களுக்கு சாதகமாக தான் அமைந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். குறிப்பாக, “தமிழ்நாட்டில் பாஜகவுக்கான வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது” என அவர் கூறுகிறார்.

அதேநேரம் அண்ணாமலைக்கு எதிராக அவரது கட்சிக்குள்ளேயே கலகக்குரல்கள் எழுந்துள்ளன. தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைந்திருந்தால் 25 முதல் 35 இடங்கள் கிடைத்திருக்கும்” எனக் கூறியிருந்தார். பாஜகவைச் சேர்ந்த கல்யாண்ராமனும், தோல்விக்கு அண்ணாமலையின் முடிவுகள் தான் காரணம் என தனது எக்ஸ் தள பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

தமிழ்நாடு பாஜகவில் அப்படி என்ன பிரச்னை நிலவுகிறது. இதன் பின்னணி என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#TamilisaiSoundararajan #Amitshah #Annamalai #BJP

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке