Arulmighu Pagampiriyal / Thiruvetriyur ☆

Описание к видео Arulmighu Pagampiriyal / Thiruvetriyur ☆

அருள்மிகு பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர்  திருக்கோயில்
             ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ளது திருவெற்றியூர்.இவ்வூரில் மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு பகம்பிரியாள் அம்மன் சமேத வன்மீகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

        இக்கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கானோரும் வியாழன்-வெள்ளி கிழமைகளில் ஆயிரக் கணக்கானோரும் வருகைபுரிந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
தென் தமிழகத்தில் மிக பிரபலமான கோயில்களில் இத்தலமும் ஒன்று.

        சிவ தலமாக இருந்தாலும் அம்மனின் புகழால் பாகம்பிரியாள் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.மேலும் இவ்வூர் பெயரை குறிப்பிட்டால் கூட பலருக்கு தெரியாது.ஆனால் அம்மனின் திருப்பெயரை உச்சரித்தால் அனைவர்க்கும் அறிந்த ஒன்றாக இருக்கும்.


நிர்வாகம்:
       இக்கோயில் சிவகங்கை தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்டது.முன்னொரு நாளில் இது ராமநாதபுரம் சமஸ்தானதால் சிவகங்கை சமஸ்தானத்திற்கு திருமண சீதனமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கோயில் அமைப்பு:
1)சிவன்(வல்மீகநாதர்) சன்னதி
2)அம்மன்(பாகம்பிரியாள்) சன்னதி
3)வில்வமர அடியில் விநாயகர்
4)அகஸ்திய விநாயகர் சன்னதி
5)தட்சிணாமூர்த்தி
6)முருகன் சன்னதி
7)சண்டிகேஸ்வரர்
8)பைரவர் சன்னதி
9)நவ கிரகம்
10)சனீஸ்வரர் சன்னதி
12)கொடிமரம்
13)நந்தி மண்டபம்
14)வாசுகி தீர்த்த தெப்பக்குளம்

கோயில் திறப்பு:
      காலை 6.00-பகல் 12.00
      மாலை 4.00-இரவு 8.00

திருவிழாக்கள்:
       - சித்திரை திருவிழா(10 நாட்கள்)
       -ஆடி பூச்சொரிதல்(கடைசி திங்கள்)

Комментарии

Информация по комментариям в разработке