நவராத்ரி கொலு பாடல் | Navarathri Kolu Song Tamil | Nithyasree Mahadevan | Vijay Musicals

Описание к видео நவராத்ரி கொலு பாடல் | Navarathri Kolu Song Tamil | Nithyasree Mahadevan | Vijay Musicals

Song : Navarathri Kolu Song | Lyrical Video
Singer : Nithyasree Mahadevan
Lyrics : K V Sridharan
Music : Sivapuranam D V Ramani
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#navaratri #amman #navarathri
#vijaymusicals #tamildevotionalsongs

பாடல் : நவராத்ரி கொலு பாடல் | பாடல்வரிகள்
குரலிசை : நித்யஸ்ரீ மஹாதேவன்
கவியாக்கம் : K V ஸ்ரீதரன்
இசை : சிவபுராணம் D V ரமணி
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

வாணி சரஸ்வதியே துர்கா ஆதி மஹாலக்ஷ்மி
பாவையர் வீட்டினில் பூஜைக்கு அழைத்தோம்
ஸ்ரீ நவராத்திரியே ஒம்பது நாள் சுபராத்திரியே

படிகள் அமைத்து புதுமைகள் வைத்து
புதுமனை போட்டிடுவோம்
தலைவாழை அரிசி கலசம் வைத்து
பொன்மணி விளக்கு வைப்போம்
கன்யா பெண்களை அழைத்திடுவோம்

முதல்நாள் பூஜை இருவயது குழந்தை
பாலையென அலங்கரிப்போம்
மஹிசாசுரவத கதைதான் படித்து
மங்கலையை வணங்கிடுவோம்
வந்தவர்க்கு தாம்பூலம் வழங்கிடுவோம்

இரண்டாம் நாளில் மூன்று
வயதுடைய குமாரிக்காக்கோலம்
ஜெண்டாசுரவத கதைதான் படித்து
சுண்டல் விநியோகம் செய்வோம்
சுபமாய் வரும் யோகம்

மூன்றாம் நாளில் நான்கு
வயதுடைய கல்யாணித் திருக்கோலம்
தூம்ரலோச்சனன் வதைதான் படித்து
தூபம் காட்டிடுவோம்
ஆரத்தி தீபம் ஏற்றிடுவோம்

நான்காம் நாளில் ஐந்து
வயதுடைய ரோஹிணி அலங்காரம்
மதுகைத்தவரின் வதகதை படித்து
மல்லிகை சூட்டிடுவோம்
கனகவல்லியை வாழ்த்திடுவோம்

ஐந்தாம் நாளில் ஆறு
வயதுடைய காளிகை அவதாரம்
வண்டாசுரவதை கதைதான் படித்து
பாயசம் நிவேதனம் இதுவே
பார்கவி ஆராதனம்

ஆறாம் நாளில் ஏழு
வயதுடைய சண்டிகைத் திருக்கோலம்
ரத்தபீஜவத கதைதான் படித்து
சக்கரை பொங்கல் வைப்போம்
அஷ்ட லஷ்மியே உனையழைப்போம்

ஏழாம் நாளில் எட்டு
வயதுடைய சரஸ்வதி அலங்காரம்
சும்பநிசுபவதை கதைதான் படித்து
வெண்கமலம் சூட்டிடுவோம்
வாணியின் கீர்த்தனைகள் பாடிடுவோம்

எட்டாம் நாளில் ஒன்பது
வயது ஷ்யாமலை அலங்காரம்
திரிசிரண்சுரவதை கதைதான் படித்து
தயிரன்னம் ஊட்டிடுவோம்
தலையில் கொடிமுல்லை சூட்டிடுவோம்

ஒன்பதாம் நாளில் பத்து
வயதுடைய சுபத்திரை அலங்காரம்
ஒம்பது கோள்கள் கும்பிடும் நாயகி
அங்கயற்கங்குமையாள்
அலர்மேல் மங்கையே வந்து எமையாள்


To get more updates follow us on :

Instagram -   / vijaymusicals  
Facebook -   / vijaymusical  

Комментарии

Информация по комментариям в разработке