மார்கழி 02 திருப்பாவை & திருவெம்பாவை | MARGAZHI 02 THIRUPPAVAI & THIRUVEMPAVAI |Desa Mangaiyarkarasi

Описание к видео மார்கழி 02 திருப்பாவை & திருவெம்பாவை | MARGAZHI 02 THIRUPPAVAI & THIRUVEMPAVAI |Desa Mangaiyarkarasi

#thirupavai #thiruvempavai #thiruvembavai #திருப்பாவை #திருவெம்பாவை
திருவெம்பாவை - 2
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போதும் இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்.


திருப்பாவை - 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்


மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை ஆத்ம ஞான மையம் வழங்குகிறது. தொடர்ந்து அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.

ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке