ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் கொடியலூர்
மூலவர்: அகத்தீஸ்வரர்
அம்பாள்: ஆனந்தவல்லி
ஊர்: கொடியலூர்
மாவட்டம்: திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ளது திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மக்கள் வழிபடும் விதத்தில் இந்த பூமியில் எத்தனையோ புண்ணியத் தலங்கள், பரிகாரத் தலங்கள், புண்ணிய நதிகள் இருக்கின்றன. இவையெல்லாம் மனித குலத்துக்கு தெய்வத்தால் வழங்கப்பட்ட வரப்பிரசாதமாகும். நாம் அனைவரும் ‘எனக்கு இது வேண்டும்’ என ஒரு ஆலயத்தை தேடிச் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுகிறோம். வேண்டியது கிடைத்தவுடன் ஆனந்த கூத்தாடுகிறோம். அதே வேளையில் எதிர்பாராத விதமாக நாம் ஒரு திருத்தலத்துக்கு சென்று வந்த பிறகு, நமது வாழ்வில் பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் பெறுகிறோம் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம். அப்படியொரு பாக்கியம் கிடைக்கும் தலம்தான் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ள திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்.
இத்தலம் எமதர்மனும், சனீஸ்வரனும் பிறந்த தலம் என்று சொல்லப் படுகிறது. ஒருவருக்கு சனி தோஷம் பிடித்தாலும், எமன் பிடிக்க வந்தாலும் அது வாழ்வில் கஷ்டமான காலம்தான். ஆனால் இவர்கள் பிறந்த இத்தலத்தில் குழந்தையாய், அனைவருக்கும் அருள்தரும் வல்லுநராய், பக்தர்கள் கேட்ட வரத்தைத் தருபவர்களாகவே விளங்குகிறார்கள். அதனால்தான் இந்த தலத்தில் கால் வைத்த உடனேயே நமக்கு அனைத்தும் கிடைக்கிறது.
அதன்படியே சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் திருமீயச்சூர் வந்து சூரிய புஷ்கரணியில் நீராடி பூஜை செய்தனர். இதைஅடுத்து சூரியனுக்கும், உஷாதேவிக்கும் எமதர்மன் பிறந்தார். அதே போல் சூரியனுக்கும், சாயா தேவிக்கும் சனீஸ்வரர் பிறந்தார். சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் கூடிய இடம், திருமீயச்சூர் தலத்திற்கு மேற்கே தற்போது இக்கோவில் உள்ள ஊரில்தான். இவர்கள் கூடிய காரணத்தினால் இவ்வூர் ‘கூடியலூர்’ என்று அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் மருவி ‘கொடியலூர்’ ஆயிற்று என்கிறார்கள். ஹயக்ரீவர் கூறியபடி திருமீயச்சூர் வருகை தந்த அகத்தியர், லலிதாம்பிகையை தரிசித்தார். அங்கு அன்னையை மனதுருக வேண்டி லலிதா நவரத்தின மாலை பாடினார். இதனால் அவருக்கு அம்பாளின் பேரருள் கிடைத்தது. அதன்பின் அவர் சிவபூஜை செய்ய வேண்டும் என்று எண்ணினார். அதற்காக அவ்விடத்தில் இருந்து சற்று மேற்கே உள்ள கூடியலூர் என்ற கொடியலூருக்கு வந்தார். இத்தலத்தில் அவர் சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். இங்குள்ள லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் ‘அகத்தீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். தாயார் லலிதாம்பிகையை நினைத்து அவரையும் இங்கு அகத்தியர் பிரதிஷ்டை செய்தார். தேடிவந்து வணங்கும் பக்தர்களுக்கு அருள் தரும் அம்மைக்கு ‘ஆனந்தவல்லி’ என பெயரிட்டார்.
தொடர்ந்து இறைவனையும், இறைவியையும் நினைத்து தவம் இருந்தார். எமதர்மனும், சனீஸ்வரனும் பிறந்த இந்த திருத்தலத்திற்கு வந்து வழிபடுவோருக்கு, எம வதையும், சனி உபாதையும் நீங்க வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்தார். அதன்படியே அருள்வதாக இறைவனும், அகத்தியருக்கு அருளாசி வழங்கினார்.
திருமீயச்சூர் ஆலயத்தில் லலிதா பரமேஸ்வரி தவக்கோலத்தில், மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். கொடியலூரில் லலிதா பரமேஸ்வரி ஆனந்தவல்லியாக பரிபூரணமாக காட்சி தந்து அருளாசி வழங்குகிறாள். அன்னை ஒரே எல்லையில் திருமீயச்சூரில் அமர்ந்த கோலமாகவும், கொடியலூரில் நின்ற கோலமாகவும் இருந்து அருள் செய்வது மற்றொரு சிறப்பு.
எமதர்மன், சனீஸ்வரர், அகத்தீஸ்வரர்
இக்கோவிலில் தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத சிறப்பு. இருவரும் ஒருங்கே அவதரித்த தலம் என்பதால், இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி. இரு சகோதரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும், கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும், மரண பயத்தையும் நீக்கி அருள்கிறார்கள்.
பிராத்தனை
இங்குள்ள எமதர்மன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், இழந்த பொருட்களையும், இன்பத்தையும் திரும்ப பெறலாம் என்பது நம்பிக்கை. ஏழரைச் சனியின் பாதிப்பால் ஏற்படும் சகல தடைகளையும் இத்தலம் களைகிறது. எனவே இங்கு வந்து இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம், ஆராதனை செய்தால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும் சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணத்தால், இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்பு தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.
நடை திறப்பு
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரளம் என்ற ஊர். இங்கிருந்து மேற்கே 2 கிலோமீட்டரில் திருமீயச்சூர் திருத்தலமும், அதன் அருகிலேயே கொடியலூர் திருத்தலமும் அமைந்திருக்கிறது. பேரளத்தில் இருந்து மினி பஸ் வசதி, ஆட்டோ வசதி உண்டு.
கொடியலூர் அகஸ்த்தீஸ்வரர் கோயில் தரிசனம்
• சனி எமன் பிறந்த தலம் கொடியலூர் | சனி தோஷம...
கோயில் Google Map link
https://maps.app.goo.gl/CTkqvaUfkNijf...
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 8973521507
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
if you want to support our channel via UPI Id
nava2904@cnrb
Join Our Channel WhatsApp Group
https://chat.whatsapp.com/LRPxBQMNHRA...
Join this channel to get access to perks:
/ @mathina
தமிழ்
Информация по комментариям в разработке