Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть *தினம் ஒரு திருக்குறள்* |திருக்குறள் 71 - 80|திருவள்ளுவர்|Saara spot|thirukural|

  • Saara Spot
  • 2024-10-08
  • 45
*தினம் ஒரு திருக்குறள்* |திருக்குறள் 71 - 80|திருவள்ளுவர்|Saara spot|thirukural|
thinam oru thirukuralvjsidhuvlogsdhian oru kuralvijaytvserial promothinam oru thirukural in tamilthirukural story in tamilthinam kotti thirkavaathinam thinam unai ninaikirenthinam oru gkthinam oru thagavalthinam oru thalaivarthinam thinam deepavalithinam oru thagaval in tamilthinam oru kulambuthinam oru thirupugazthinam oru taf academythinam oru quran verasethinam oru mandhiramthirukural vilakkamthirukkural porulmean in engtamileng
  • ok logo

Скачать *தினம் ஒரு திருக்குறள்* |திருக்குறள் 71 - 80|திருவள்ளுவர்|Saara spot|thirukural| бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно *தினம் ஒரு திருக்குறள்* |திருக்குறள் 71 - 80|திருவள்ளுவர்|Saara spot|thirukural| или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку *தினம் ஒரு திருக்குறள்* |திருக்குறள் 71 - 80|திருவள்ளுவர்|Saara spot|thirukural| бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео *தினம் ஒரு திருக்குறள்* |திருக்குறள் 71 - 80|திருவள்ளுவர்|Saara spot|thirukural|

தினம் ஒரு திருக்குறள்

குறள் 71-80 அன்புடைமை.
The Possession of Love
குறள் 71:.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

Tamil meaning
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

Translation:.
And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover's secret plain.

குறள் 72:.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

Tamil meaning
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

Translation:.
The loveless to themselves belong alone;
The loving men are others' to the very bone.

குறள் 73:.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

Tamil meaning
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

Translation:.
Of precious soul with body's flesh and bone,
The union yields one fruit, the life of love alone.

குறள் 74:
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும்நாடாச் சிறப்பு.

Tamil meaning
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.

Translation:.
From love fond yearning springs for union sweet of minds;
And that the bond of rare excelling friendship binds.

குறள் 75:.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

Tamil meaning
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

Translation:.
Sweetness on earth and rarest bliss above,
These are the fruits of tranquil life of love.

குறள் 76:.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

Tamil meaning
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.

Translation:.
The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.

குறள் 77:.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

Tamil meaning
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.

Translation:.
As sun's fierce ray dries up the boneless things,
So loveless beings virtue's power to nothing brings.

குறள் 78:.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

Tamil meaning
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

Translation:.
The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.

குறள் 79:.
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

Tamil meaning
அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?

Translation:.
Though every outward part complete, the body's fitly framed;
What good, when soul within, of love devoid, lies halt and maimed?

குறள் 80:.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

Tamil meaning
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.

Translation:.
Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within.

இதில் தவறுகள் இருந்தால் comment- இல் சொல்லவும்.... இதை பார்த்து படிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்...

உங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.....

இதை அடுத்து எட்டுத்தொகை பதிணென்கீழ்கணக்கு, பதிணென்மேற்கணக்கு இது போன்ற
நூல்களின் பாடல்கள், விளக்கத்துடன் வர இருக்கின்றன....

இதற்கு உங்களின் ஆதரவு எதிர்பார்கின்றோம்....

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]