NEET 2024 Results | J. Manishankar | 7.5% Reservation | Salem | State 8th Rank | MBBS in MMC | Tips

Описание к видео NEET 2024 Results | J. Manishankar | 7.5% Reservation | Salem | State 8th Rank | MBBS in MMC | Tips

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற NEET தேர்வில் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவில் உள்ள மேச்சேரியை அடுத்த நாகூச்சிப்பட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிசங்கர் 658 மதிப்பெண்களுடன் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 8-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மணிசங்கரின் பெற்றோர் இருவரும் விவசாயிகள். அப்பா பெயர் ஜெய்சங்கர் அம்மா பெயர் யசோதா. தனது முதல் முயற்சியில் 217 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றபோதும், மனம் தளர்வடையாமல் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த தொடர் ஊக்கத்தினால் முயன்று மருத்துவக் கல்வி வாய்ப்பை பெற்றுள்ள மணிசங்கர் இதயநோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவராக வேண்டும் என்கிற இலக்கை வைத்துள்ளார்.

மணிசங்கர் தனது மேல்நிலைப் படிப்பை மேச்சேரியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்துள்ளார். எட்டாமிடம் எடுத்து சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்க இருக்கிறார்.

#neet #neet2024 #manishanakar #statetopper #neettopper #governmentschool #nta #nationaltestingagency

In the NEET exam held in 2024, J.Manishankar, a government school student, scored 658 marks and is going to pursue his medical studies in Chennai Medical College under 7.5 % reservation. Mani Shankar completed his higher education from Government Boys Higher Secondary School, Mechery. He is going to study in Chennai Medical College after securing 8th rank among the government school students.

Mani Shankar's parents are farmers. Father's name is Jaishankar and mother's name is Yashoda. Despite scoring only 217 in his first attempt, undeterred, Mani Shankar, who has been given the opportunity to study medicine with the continuous encouragement of his parents and teachers, has set his aim on becoming a cardiologist.

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

Комментарии

Информация по комментариям в разработке