5000 முதலீட்டில் - அரசின் POST OFFICE மூலம் உங்கள் ஊரிலே சுயதொழில் தொடங்கலாம் -

Описание к видео 5000 முதலீட்டில் - அரசின் POST OFFICE மூலம் உங்கள் ஊரிலே சுயதொழில் தொடங்கலாம் -

free alert job 5ஆயிரம் மூதலீட்டில், அஞ்சலகம் (போஸ்ட் ஆபீஸ்) தொடங்கலாம்

Franchise Application Link - https://www.indiapost.gov.in/VAS/DOP_...

5ஆயிரம் மூதலீட்டில், அஞ்சலகம் (போஸ்ட் ஆபீஸ்) தொடங்கலாம்

மற்றவர்களுக்கு பயன்படும் வகையில், சுயமாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என நினைக்கும் இளைஞரா நீங்கள்? உங்களுக்கான வேலைவாய்ப்பை அளிக்கிறது அஞ்சலகங்கள். முதலீடாக 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும்.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இதில், 89 சதவீத அஞ்சலகங்கள் கிராமப்புறங்களில் உள்ளன. எனினும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அஞ்சலகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.

இந்தியாவில் இன்றும் ஒரு அஞ்சலகம் கூட இல்லாத, சில பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய இடங்களில் அஞ்சலகங்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, அஞ்சலக முகவர்களை உருவாக்குவதுடன், மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.
இதன்படி அஞ்சல முகவர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்தை யார் வேண்டுமானலும் பயன்படுத்தி பயனடையலாம்.

இதில் இரண்டுவகையான முகவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

1.அஞ்சலகங்கள் திறக்க இயலாத இடங்களில், விற்பனை பிரதிநிதிகள் மூலம் அஞ்சலக சேவை (Counter services ) வழங்கப்படும்.

2. கிராமப்புற மற்றும் சிறுநகரங்களில், வீடுகளுக்குச் சென்று தபால் தலைகள் மற்றும் அஞ்சலகப் பொருட்களை விற்பனை செய்யும் முகவர்கள் (Postal Agents)

முகவராவது எப்படி? (How to apply)

விண்ணப்பதார்கள், இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முகவர்களுடன், அஞ்சகலத்துறை ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும். அதில் விற்பனைக்கு வழங்கப்படும் கமிஷன் குறித்த விபரங்கள் இடம்பெறும்.

பொதுமக்களின் தேவை அறிந்து, அஞ்சலகப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்யும் திறமை படைத்தவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும்.

வயது வரம்பு (Age Limit)

18 வயது பூர்த்தியான அனைவரும் தகுதியுடையவர்கள். எனினும், உச்சபட்ச வயது வரம்பு கிடையாது
கல்வித்தகுதி (Education Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன்னுரிமை (Preference)

ஓய்வு பெற்ற தபால் அலுவலர்கள்
கனினி வசதியுடையவர்கள்

மேலும் விபரங்களுக்கு https://www.indiapost.gov.in/VAS/DOP_... என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

வழங்கப்படும் கமிஷன் (Commission Offered)

தேர்வு செய்யப்படும் முகவர்களுக்கு பின்வரும் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும்.

தலா ஒரு ரெஜிஸ்டர் போஸ்ட் – ரூ.3

தலா ஒரு ஸ்பீட் போஸ்ட் – ரூ.3

ரூ.100 முதல் ரூ.200 வரையிலான மனி ஆர்டர் – ரூ.3.50

ரூ.200க்கும் மேற்பட்ட மனி ஆர்டர் – ரூ.5

அஞ்சலக தபால்தலைகள், மனி ஆர்டர் விண்ணப்பம்- 5% கமிஷன்

தேர்வு செய்யப்படும் முகவர்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியது கட்டாயம்.





VALLALAR VELAI VAAIPU SEVAI IYAKKAM
EMPLOYMENT SERVICE JOB NOTIFICATION SOCIAL SERVICE

WE ARE PROVIDING JOB NOTIFICATION THROUGH WHATSAPP, FACEBOOK AND YOUTUBE This Video Posted By Vallalar Velai Velai Vaaipu Sevai Iyakkam (Employment Social Service NGO) this also called as VVVSI CAREER GUIDELINES

#vvvsi
#jobs2022
#tamil
#tamilnadujobs2022
#latestjobsnotification2022
We are posting the Job Vacancies 2022 in youtube Platform, what we get from the Organization Recruiters as mail or WhatsApp messages.

Our Website - https://www.vvvsi.com/home

Комментарии

Информация по комментариям в разработке