தொ.மு.சி.ரகுநாதனின் “இலக்கிய விமர்சனம்” - உரை: பேராசிரியர் க.பஞ்சாங்கம் | Ilakkiyaveli TV

Описание к видео தொ.மு.சி.ரகுநாதனின் “இலக்கிய விமர்சனம்” - உரை: பேராசிரியர் க.பஞ்சாங்கம் | Ilakkiyaveli TV

தொ.மு.சி.ரகுநாதனின் “இலக்கிய விமர்சனம்” - உரை: பேராசிரியர் க.பஞ்சாங்கம்

subscribe :    / @ilakkiyavelitv  
Facebook :   / ilakkiyaveli  
Website : https://www.ilakkiyaveli.com


தொ. மு. சி. ரகுநாதன்

தொ.மு.சிதம்பர ரகுநாதன்: சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமர்சனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.

எழுதிய நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்:

நீயும் நானும்
க்ஷணப்பித்தம்
சேற்றிலே மலர்ந்த செந்தாமரை
ரகுநாதன் கதைகள்
சுதர்மம்

கவிதை தொகுப்புகள்:

ரகுநாதன் கவிதைகள்
கவியரங்கக் கவிதைகள்
காவியப் பரிசு

நெடுங்கவிதை:

'க. கட்டபொம்மன்’ (விடுதலை வீரர்கள் ஐவர்)

நாவல்கள்:

புயல்
முதலிரவு
பஞ்சும் பசியும்
கன்னிகா

நாடகங்கள்:

சிலை பேசிற்று
மருது பாண்டியன்

வாழ்க்கை வரலாறு

புதுமைப்பித்தன் வரலாறு

ஆய்வு நூல்:

இளங்கோ அடிகள் யார்?

விமர்சன நூல்கள்:

இலக்கிய விமர்சனம்
அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்
கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்)
சமுதாய இலக்கியம்
பாஞ்சாலி சபதம் - உறைபொருளும் மறைபொருளும்
பாரதி: சில பார்வைகள்
பாரதியும் ஷெல்லியும்
பாரதி - காலமும் கருத்தும்
புதுமைப்பித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும்
சோவியத் ஜனநாயகம் 60 ஆண்டுகள்
புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதன் (தொகுப்பாசிரியர்: இளசை மணியன்)

மொழிபெயர்ப்பு நூல்கள்:

இதயத்தின் கட்டளை - (M. Sholokhov - At the Bidding of the Heart )
சந்திப்பு - (மாக்ஸிம் கார்க்கி)
சோவியத் நாட்டுக் கவிதைகள் - (85 கவிதைகள்)
தந்தையின் காதலி - (மாக்சிம் கார்க்கி)
தாய் - (மாக்ஸிம் கார்க்கியின் 'தி மதர்’)
நான் இருவர் (ஆர். எல். ஸ்டீவென்ஸன்)
லெனின் கவிதாஞ்சலி (Vladimir Mayakosky - Vladimir Ilyich Lenin )
வசந்தமே வருக - (Ilya Ehrenburg - The Thaw)

பதிப்பித்த நூல்:

அழகிய சொக்கநாத பிள்ளை எழுதிய 'திருநெல்வேலி காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி’

இணைந்து எழுதிய நூல்:

இவர், 'முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்’ (1994) என்ற புத்தகத்தைப் பொன்னீலனுடன் இணைந்து எழுதியிருக்கிறார். அதில் 'வழிகாட்டி உரை’ என்ற தலைப்பில் முதல் 70 பக்கங்களை எழுதியுள்ளார்.

விருதுகள்

• சாகித்திய அகாதமி விருது
• சோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக)
• தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு
• பாரதி விருது


..............

#தொமுசி
#ரகுநாதன்
#பஞ்சாங்கம்
#இலக்கியவெளிடிவி
#ilakkiyavelitv

இலக்கிய வெளி
ilakkiya veli

Комментарии

Информация по комментариям в разработке