"எங்கள் இறைவா" - அல்லா உந்தன் ஆற்றல் எல்லாம் யாரறிவார்..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | E.M.HANIFA.

Описание к видео "எங்கள் இறைவா" - அல்லா உந்தன் ஆற்றல் எல்லாம் யாரறிவார்..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | E.M.HANIFA.

அல்லா உந்தன் ஆற்றல் எல்லாம் யாரறிவார்
நீ இல்லாமல் இந்த உலகம் ஏது எங்கள் இறைவா
நெஞ்சில் வாழும் மறையோனே
நீதி தவறாத ரஹ்மானே
--------------------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் ஸாயிர் அப்துர் ரஹீம் (மதிதாசன்) அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய, நபிமார்களுக்கு இறைவன் அருளிய நற்கிருபைகளை குறிப்பிடும், "அல்லா உந்தன் ஆற்றல் எல்லாம் யாரறிவார்" என்ற பாடல்.
-------------------------------------------------------------------------------------------------------------------
LYRICS
அல்லா உந்தன் ஆற்றல் எல்லாம் யாரறிவார்
நீ இல்லாமல் இந்த உலகம் ஏது எங்கள் இறைவா
நெஞ்சில் வாழும் மறையோனே
நீதி தவறாத ரஹ்மானே

சரணம் 1
ஆதம் நபியை மண்ணினாலே அழகுடன் படைத்தாய்
அவர் எலும்பினாலே துணைவியாக ஹவ்வாவை படைத்தாய்
நீதம் பொங்க மாந்தர்களை உலகினில் படைத்தாய்
நல்ல நேர்த்தியான வானம் பூமி யாவையும் படைத்தாய்
அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
நெஞ்சில் வாழும் மறையோனே
நீதி தவறாத ரஹ்மானே

சரணம் 2
பாசமோங்கும் வேந்தரான மூஸா நபியை
கெட்ட பாவியான ஃபிரவுன் செய்த கொடுமையிலிருந்தே
நேசத்தோடு நேர்மையாக காத்தவன் நீயே
பெரும் நீலக்கடலில் ஃபிரவுனை மூழ்கடித்தாயே
அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
நெஞ்சில் வாழும் மறையோனே
நீதி தவறாத ரஹ்மானே

சரணம் 3
நேர்மை நிறைந்த நாதரான நூஹு நபியை
எங்கும் நிறையும் வெள்ளப் பிரளயத்தின் தீமையிலிருந்தே
பேருயர்ந்த கப்பல் மூலம் காத்தவன் நீயே
உயர் பாந்தம் மேவும் சிறந்த வாழ்வை அவர்க்களித்தாயே
அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
நெஞ்சில் வாழும் மறையோனே
நீதி தவறாத ரஹ்மானே

சரணம் 4
நீதி மேவும் சீலர் இபுறாகீம் நபியை
கொடும் நம்ரூதின் பெரும் நெருப்பில் வெந்திடாமேலே
சாதகமாய் சோலை அமைத்து காத்தவன் நீயே
தூய சான்றோனாம் கருணை மிகும் இறையவன் நீயே
அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
நெஞ்சில் வாழும் மறையோனே
நீதி தவறாத ரஹ்மானே

சரணம் 5
மேதையான போதகராம் யூனூஸ் நபியை
பெரும் மீன் வயிற்றில் நாற்பது நாள் இருந்திடச் செய்தாய்
நீதம் பொங்க யூனூஸ் நபி பாவங்கள் பொறுத்தாய்
இந்த பூமியிலே மீண்டும் அவரை வாழ்ந்திடச் செய்தாய்
அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
நெஞ்சில் வாழும் மறையோனே
நீதி தவறாத ரஹ்மானே

சரணம் 6
இனிமையான இசையின் மூலம் உலகத்தை கவர்ந்த
சிறந்த ஏந்தலான தூதுவராம் தாவூத் நபிக்கே
கனிவுடனே ஜபூர் என்னும் வேதத்தை கொடுத்தே
பெரும் கண்ணியமாய் வாழவைத்த இறையவன் நீயே
அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
நெஞ்சில் வாழும் மறையோனே
நீதி தவறாத ரஹ்மானே

சரணம் 7
உலகம் எல்லாம் ஆளுகின்ற ஆற்றல் தன்னையே
மிக உன்னதமாய் நன்னயமாய் உயர்வு காணவே
இலங்கிடும் சுலைமான் நபிக்கு நீ அளித்தாயே
நிதமும் இதமுடனே வாழ வைத்த இறையவன் நீயே
அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
நெஞ்சில் வாழும் மறையோனே
நீதி தவறாத ரஹ்மானே

சரணம் 8
பெரும் கொடிய நோயினாலே துடித்திட்ட போதும்
தூய கருணையாளன் உன்னை நிதமும் தொழுது வணங்கினார்
பொறுமையாளர் நற்குணாளர் ஐயூப் நபிக்கே
ஓங்கும் அருமையான வாழ்வளித்த இறையவன் நீயே
அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
நெஞ்சில் வாழும் மறையோனே
நீதி தவறாத ரஹ்மானே

சரணம் 9
உலகம் தன்னில் அழகில் சிறந்த மேதையாகவே
வாழ்ந்த உயர்வு மேவும் திறமையான யூசுப் நபியை
நலம் நிறைந்த மிக உயர்ந்த அரசராக்கியே
இந்த நானிலத்தில் வாழ வைத்த இறையவன் நீயே
அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
நெஞ்சில் வாழும் மறையோனே
நீதி தவறாத ரஹ்மானே

சரணம் 10
இறுதியான உலக தூதர் முஹம்மது நபிக்கே
என்றும் இணையில்லாத புனிதமான குர்ஆனை ஈந்தே
அறம் தழைக்க வெற்றி யாவும் கொடுத்து மகிழ்ந்தே
மெய் அருளுடனே வாழ வைத்த இறையவன் நீயே
அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
நெஞ்சில் வாழும் மறையோனே
நேர்மை தவறாத ரஹ்மானே
நெஞ்சில் வாழும் மறையோனே
நீதி தவறாத ரஹ்மானே

அல்லா உந்தன் ஆற்றல் எல்லாம் யாரறிவார்
நீ இல்லாமல் இந்த உலகம் ஏது எங்கள் இறைவா
எங்கள் இறைவா
எங்கள் இறைவா
எங்கள் இறைவா
எங்கள் இறைவா..
*********************************************************************

Комментарии

Информация по комментариям в разработке