Dmk spokesperson theepori arumugam speech about jayalalitha and kalaignar at chidambaram dmk meeting

Описание к видео Dmk spokesperson theepori arumugam speech about jayalalitha and kalaignar at chidambaram dmk meeting

கழக உடன்பிறப்புகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:
நமது ND Pages சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால்,நமது ND Pages சேனலில் வெளியிடப்படும் வீடியோக்கள் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்க,நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்.அதற்கு கீழே உள்ள (Subscribe Link) லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.நன்றி.    / @dmk_pages  


புரிஞ்சா புரிஞ்சுக்க... புரியலைன்னா போங்கப்பா... தீப்பொறி ஆறுமுகம் பேசித் தீர்த்த பொழுதுகள் !

மதுரையைச் சேர்ந்த 'தீப்பொறி' ஆறுமுகம், 8-ம் வகுப்பை தாண்டி படித்து விடவில்லை. வறுமை விரட்ட.. படிப்பை பாதியில் நிறுத்திய ஆறுமுகத்துக்கு பேச்சின் மீது அபார ஆர்வம். பள்ளிப்படிப்பின் போதே பேச்சுப்போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்றிருந்த அவரை, பேச்சின் மீதான ஆர்வம் அரசியல் மேடை நோக்கி ஈர்த்தது. மதுரையில் தெருமுனைகளில் நடக்கும் எந்த அரசியல் கூட்டமாக இருந்தாலும் அதை தவற விடமாட்டார் தீப்பொறி ஆறுமுகம். அடுக்கு மொழி, அணியிலக்கணம் என அத்தனை அலங்காரத்துடனான அண்ணாவின் பேச்சும், அலங்கார நடைகள் துறந்த பெரியாரின் நீண்ட சொல்வீச்சும் ஆறுமுகத்தை ஒரு சேர ஈர்த்தனர். மெல்ல அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டு திராவிடர் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் .
பின்னர் தி.மு.க. கூட்டங்களில் பேசத்துவங்கினார். தனது ஆளுமையான பேச்சால் உடனே உயரத்துக்கும் வந்தார். அண்ணா பங்கேற்கும் மேடைகளில் அவருக்கு முன்னதாக பேச அனுமதியளிக்கும் வகையில், தனது காந்தப் பேச்சால் அனைவரையும் கவர்ந்தார் ஆறுமுகம். 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது , விழுப்புரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அண்ணா பங்கேற்க வேண்டும். ஆனால் அவர் வருவதற்கு தாமதமானது. அண்ணாவுக்காக காத்திருந்த மக்களை, 2 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் தொடர்ந்த தனது பேச்சால் எதையும் யோசிக்க விடாமல் கட்டிப்போட்டிருந்தார் ஆறுமுகம்.
நள்ளிரவு 2 மணிக்கு மேடைக்கு வந்தார் அண்ணா. நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் ஆறுமுகத்தின் பேச்சை முடித்துக்கொள்ள சொன்னபோது, அவர் பேசட்டும் எனச்சொல்லி பேச்சை ரசித்தார் அண்ணா. இன்னுமொரு கூட்டத்தில் 'ஆறுமுகத்தின் பேச்சு தீப்பொறியாக பறந்தது' என அண்ணா பாராட்டிச் சொல்ல... அன்று முதல் தீப்பொறி ஆறுமுகமாக மாறிப்போனார். தனது மேடைப்பேச்சால் பெரியாரையும் கவர்ந்து, அவரது பாராட்டையும் பெற்றிருந்தார் தீப்பொறி ஆறுமுகம்.
தனது பேச்சின் மூலம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர் தீப்பொறி ஆறுமுகம். சாலைகளில், மைதானங்களில் கூட்டம் போட்டு பேச தடை விதிக்கப்பட்டிருந்த மிசா காலம் அது. அப்போது தான் ஸ்டாலினுடன் மிசா சட்டத்தில், கைதாகி 9 மாதங்கள் சிறையில் இருந்து விடுதலை ஆகி இருந்தார் தீப்பொறி ஆறுமுகம். மணப்பாறையில் திரையரங்கு ஒன்றில் உள் அரங்க கூட்டமாக நடந்த கூட்டத்தில் பேசினார் தீப்பொறி ஆறுமுகம். எழுத்துரிமை, பேச்சுரிமையை அடக்க முடியாது என கொந்தளித்தவர், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை கடுமையாக தாக்கிப்பேசினார். சிறையில் இருந்து வெளி வந்த ஒரு சில தினங்களில் மீண்டும் சிறை சென்று மீண்டும் 6 மாத சிறை தண்டனையை அனுபவித்தார்.
தீப்பொறி ஆறுமுகம் பேச்சுக்கு தமிழகத்தின் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 'தீப்பொறி பேசுனா அவருக்கே தனிக்கூட்டம் கூடுமே' என சொல்லும் தலைவர்களே உண்டு. மிக சீரியஸாகவே தனது பேச்சை துவங்கி அரசியல் விமர்சனத்தை முன்வைத்தார். விமர்சனத்துக்காக மேடையிலேயே கல்வீச்சுகளையும், தாக்குதல்களையும் சந்தித்தவர் தீப்பொறி ஆறுமுகம். 1980களில் தனது பேச்சை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற விரும்பினார் தீப்பொறி ஆறுமுகம். நகைச்சுவையாக பேச்சை மாற்றியவர், பின்னாளில் இரட்டை அர்த்தங்களில் பேசவும் செய்தார். பெரிய விமர்சனங்களுக்குள்ளான போதும், இதுவும் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
இவரது பேச்சை கேட்க கூட்டம் துவங்கும் முன்னரே ஆயிரக்கணக்கானோர் கூடியிருப்பார்கள். பொதுக்கூட்டம் நடக்குமிடத்தில் இருக்கும் கடைகளை முன்கூட்டியே அடைத்து விட்டு பொதுக்கூட்டத்தை கேட்க தயாராக இருப்பார்கள்.
சில நேரங்களில் கூட்டத்தில் இருக்கும் பெண்களை இவரே போகச்சொல்வது கூட நடந்திருக்கிறது.
சில விஷயங்களை ஜாடை மாடையாக சொல்லும் தீப்பொறி ஆறுமுகம், 'நான் சொல்றதை சொல்லிட்டேன். புரிஞ்சா புரிஞ்சுக்க. புரியலைன்னா போப்பா. உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓய்ஞ்சிருவேன்' போலிருக்கே' என சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஆனால் பேச்சைக் கேட்டு முடித்த பின்னால், 'எப்படி பேசுறான் மனுஷன். எல்லோரையும் பின்னி எடுக்கிறானே' எனச்சொல்லும் அளவுக்கு இரட்டை அர்த்த பேச்சுகளை எல்லாம் கடந்து இவரது பேச்சில் கடுமையான அரசியல் விமர்சனங்கள் நிரம்பி இருக்கும்.
தனது 15-வது வயதில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவுடன் மேடைகளில் பேசத்துவங்கி, பேச்சாளராக வாழ்வைத் துவக்கியவர்,50 ஆண்டுகளுக்கு மேலாக மேலாக பேச்சாளராகவே தொடர்ந்தவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார்.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தீப்பொறி ஆறுமுகத்தின் உரை வெறும் கதறலாக மட்டும் முடிந்து விடவில்லை. கேட்போர் இதயங்களை அடையும் முழுமையான பேச்சாகவே இருந்திருக்கிறது.
#TheeporiArumugamspeech #TheepporiArumugamspeech #தீப்பொறிஆறுமுகம் #kalaignaroldspeech #vetrikondanspeech #வெற்றிகொண்டான் #கலைஞர் #mkstalin #dmk #திமுக #vetrikondandmk #jayalalitha #mgr #kalaignar #tamilspeech

Комментарии

Информация по комментариям в разработке