Ratha Saptami 2020 has been covered in detail, along with ratha saptami 2020 date, ratha saptami 2020 timings, the Purana Behind Ratha Saptami Viratham, way to worship, Ratha Saptami Bathing Procedure, Ratha Saptami Kolam.
Ratha Saptami 2020 Date : Saturday, 1 February Ratha Saptami 2020 in India
ரத சப்தமி குளிக்கும் நேரம் - :
Feb 1, 2020 அன்று காலை 6.35 AM சூரியோதயம், அதில் இருந்து 48 நிமிடங்களுக்குள் இந்த பாவங்களை நீக்கும் பரிகார குளியலை செய்ய வேண்டும், அதாவது 6.35 AM முதல் 7.23 AM குள் செய்யவேண்டும்.
ரத சப்தமி பூஜை செய்யும் நேரம்:
Feb 1, 2020, காலை 7.30 AM முதல் 8.00 AM குள் செய்யவேண்டும்.
வேண்டும் முறை:
கிழக்கு நோக்கி நின்றோ /உக்காந்து கொண்டோ வேண்டிக்கொள்ள வேண்டும்.
ஸப்தமி தேவியே என்னால் முன் ஏழு ஜன்மங்களிலும் செய்யப்பட்ட
1,முன்பிறவி,
2,இந்த பிறவி,
3,மனது,
4,உடல்,
5,வாக்கு,
6,அறிந்து செய்தது,
7,அறியாமல்செய்தது
என 7 ஏழுவிதமான பாபங்களால் ஏற்படப்போகும் நோயிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் என்னை விடுவிப்பாயாக.
குளியல் முறை :
பின்னர் 7 இலைகளையும் ஒன்றாக எடுத்து வைத்து குளிக்க செல்ல வேண்டும். மேல் உள்ள இலையில் ஆணுக்கு சிறிதளவு விபூதியும், பெண்ணுக்கு சிறிதளவு மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும்.
இந்த 7 இலை அடுக்கைத் தலைமீது வைத்து கிழக்கு திசை குளிக்க வேண்டும். எருக்கம் இலையின் முன் பகுதி(வழுவழுப்பான பக்கம்) நம் உடலை தொடவேண்டும், நரம்பு உள்ள பின் பகுதி வெளியே தெரிய வேண்டும், இலைகளின் நுனி பகுதி முன் நோக்கி இருக்க வேண்டும்.
குளிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !
இந்த சுலோகம் எல்லாம் சொல்வது கஷ்டம் என்று நினைக்கும் அன்பர்கள், இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தை மனதார சொல்லி வேண்டி குளிக்கவேண்டும், அதன் அர்த்தம்
ஏழு குதிரைகள் பூட்டிய தேருடன் கூடிய ஸூர்யனின் ப்ரியமான தேவியே! ஏழு உலகங்காளாலும் பூஜிக்கப்படுபவளே! ஸப்தமிதேவியே! ஏழு ஜன்மங்களில் நான் ஸேகரித்துள்ள பாபங்களை விரைவாக அபஹரித்துக்கொள்.
ஸப்தமி தேவியே என்னால் முன் ஏழு ஜன்மங்களிலும் செய்யப்பட்ட
1. முன்பிறவி,
2. இந்த பிறவி,
3. மனது,
4. உடல்,
5. வாக்கு,
6. அறிந்து செய்தது,
7. அறியாமல்செய்தது
என 7 ஏழுவிதமான பாபங்களால் ஏற்படப்போகும் நோயிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் என்னை விடுவிப்பாயாக.
ஸப்தமி தேவியே! ஏழுலகங்களுக்கும் தாயாரான உன்னை வணங்குகிறேன். ஏழு எருக்க இலைகளால் நான் செய்யும் குளியலால் எனது பாபத்தை போக்கி அருள் புரிவாயாக.
இப்படி குளிப்பதால் நம் பாவங்கள் பகலவனைக் கண்டு பனி மறைவது போல மறைந்து போகும், புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதிகம்.
ரத சப்தமி பூஜை முறை:
இப்படிக் குளித்தபின் வீட்டில் சூரியஒளி படும் இடத்தை சுத்தம் செய்து சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய- சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரிக்க வேண்டும். ஒரு சொம்பில் சுத்தமான நீரை எடுத்து கோலத்தின் அருகே வைத்து கொள்ள வேண்டும், ஒரு தாம்பாளமும் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து கொள்ள வேண்டும், சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல், இல்லை என்றால் நம்மால் முடிந்த நைவேத்தியம் செய்து வைக்கலாம். அதன்பின் முதலில் கணபதி வணங்கிவிட்டு, சூரிய பகவானை மனதார வணங்க வேண்டும். சூரி பகவான் ஸ்லோகங்கள் தெரியவில்லை என்றாலும் கவலை வேண்டாம், பின் வரும் எளிமையான சக்திவாய்ந்த சூரிய மந்திரம் சொல்லி வணங்கலாம்.
ஓம் ஆதித்யாய நம:
பின்னர், இடது கையினால் நீர் உள்ள சொம்பை வைத்துக்கொண்டு, 3 முறை வலது உள்ளங்கையில் நீரை ஊற்றி, விரல்கள் வழியாக நீரை தாம்பாளத்தில் விடவேண்டும், அப்படி விடும் போது இந்த மந்திரத்தை சொல்லலாம், இல்லை என்றல் அதற்கான பொருளை சொல்லி வேண்டி கொண்டு பூஜையை முடிக்கலாம்.
ஸப்த ஸப்தி ரதாரூட ! ஸப்தலோக ப்ரகாக !
தி3வாகர ! க்ருஹாணார்க்யம் ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே !
தி3வாகராய நம: இதமர்க்யம், இதமர்க்யம்,இதமர்க்யம்.
ஏழுகுதிரை பூட்டிய தேரில் அமர்ந்திருப்பவரே ! ஏழு உலகங்களுக்கும் ஒளியளிப்பவரே ! திவாகரா ! நக்ஷத்ரமண்டலங்களுக்குத்தலைவரே ! ரதஸப்தமியன்று என்னால் தரப்படும் இந்த அர்க்ய (நீரை)த்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
ஸ்ரீமன் நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் எம்பிரான் எழுந்தருள்வார். ரதசப்தமி நாளில் மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கி வழிபட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.
ரத சப்தமி அன்று கோதுமை கலந்த உணவு மற்றும் அன்னம் ஆகியவற்றை அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு, அன்றைய தினம் பசுவுக்கு அகத்திக்கீரை, வெல்லம் வழங்குவது, சந்ததிக்கு பலம் சேர்க்கும்!
ரத சப்தமி அன்று கோதுமை கலந்த உணவு மற்றும் அன்னம் ஆகியவற்றை அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு, அன்றைய தினம் பசுவுக்கு அகத்திக்கீரை, வெல்லம் வழங்குவது, சந்ததிக்கு பலம் சேர்க்கும்!
ரத சப்தமி நன்னாளில் விரதம் இருப்பது பாவங்களை நீக்கி நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர்.அன்றைய நன்னாளில் துவங்குகிற தொழில் மற்றும் பணிகள் எதுவாயினும் தடையின்றி நடந்தேறும். லாபம் சிறந்து விளங்கும். அந்த நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்! முக்கியமாக, நாம் ஆத்மார்த்தமாக வழங்குகிற தானங்களை, சூரிய பகவான் அந்த ரதத்தில் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு வழங்குகிறார். இதனால் பித்ருக்களின் ஆசியும் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
#aalayamselveer #rathasaptami
Информация по комментариям в разработке