ஸ்ரீ காக புஜண்டர் சித்தர் அற்புத மகிமை! | Kaagapujandar

Описание к видео ஸ்ரீ காக புஜண்டர் சித்தர் அற்புத மகிமை! | Kaagapujandar

Join this channel to get access to perks:
   / @pentvtamil  
இவர் ரோமச முனிவரின் தந்தை ஆவார்.காகபுஜண்டர் மயிலாடுதுறையில் ( மாயவரம் எனப்படும் மயூரத்தில் ) பிறந்தவர் ஆவார். மயூர நாதரின் திருவருளால் சாகா வரம் பெற்று காக்கை வடிவத்தில் பல்லாயிர நூற்றாண்டுகள் வாழ்ந்தவர்

காக்கை உருவில் பல இடங்களில் சுற்றி திரிந்து பல விஷயங்களை கண்டறிந்ததால் காக புஜண்டர் என்று அழைக்கப் பட்டார். இவர் வரரிஷியின் சாபத்தால் சந்திர குலத்தில் பிறந்தார். இவர் அறிவில் மிகச் சிறந்தவர். பெரும் தவசி. பிரளய காலங்களில் அவிட்டம் நட்சத்திர பதவியில் வாழ்வார்.

ஒரு சமயம் கயிலையில் தேவர்கள், சித்தர்கள் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர். ஸ்ரீ. சிவ பெருமான் அங்கிருந்தவர்களிடம் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை

அங்கு கூடி இருந்தவர்களிடம் தெரிவித்தார். இந்த உலகமெல்லாம் பிரளய காலத்தில் அழிந்து விட்ட பிறகு எல்லோரும் எங்கு இருப்போம் என்றார். மேலும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவம் ஆகிய ஐவர்களும் எங்கே இருப்பார்கள் என்று கேட்டார்.

எல்லோரும் அமைதி காத்தனர் மார்க்கண்டேயன் இதற்கு திருமாலே பதில் தருவார் என்றார். அவரும் முன்பு பிரளயம் ஏற்பட்ட போது பிரளயத்தில் எல்லாம் அழிந்து போயின ஆழிலை மேல் பள்ளி கொண்டிருந்த என்னிடத்தில் சித்துகள் யாவும் ஒடுங்கின. நானும் துயிலில் ஆழ்ந்திருந்தேன். என் சார்பாக என்னுடைய சுதர்சன சக்கரம் யாராலும் தடுக்க முடியாத வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது.
அந்த அங்கு வந்த புஜண்டர் எப்படியோ அதை ஓட விடாமல் செய்து விட்டு அந்த சக்கரத்தை தாண்டி சென்றார். அவர் மிகவும் வல்லவர். வசிட்டரை அழைத்து அவரை அழைத்து வந்தால் அவரால்மட்டுமே உங்களின் கேள்விக்கு பதில் தர முடியும் என்றார்.

ஸ்ரீ. சிவபெருமானும் வசிட்டரை அழைத்து புஜண்டரை அழைத்து வருமாறு கூறினார். புஜண்டரும் அங்கு வந்தார். தாம் எத்தனையோ பிரளயங்களை கண்டதையும், எத்தனையோ மும் மூர்த்திகள் அழிந்து போனதையும் உலகம் மீண்டும் சிருஷ்டிக்க பட்டதையும் கண்டதாக கூறினார். காக வடிவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல் ஆலமரத்தில் வீற்றிருந்து இந்த அதிசயங்களை கண்டதாக கூறினார். இந்த விளக்கமானது காக புஜண்டர் துணைக் காவியத்தில் விளக்கமாக உள்ளது.

காக புஜண்டர் பெயரில் வைத்திய நூல்கள் பல உண்டு. காக புஜண்டர் நாடி எண் என்ற ஜோதிட நூலும் உண்டு இது தவிர காக புஜண்டர் ஞானம் 80 காக புஜண்டர் உபநிடதம் 31 காக புஜண்டர் காவியம் 33 காக புஜண்டர் குறள் 16 என்ற நூல்கள் ஆழ்ந்த ஞான கருத்துகளை விளக்குகின்றன.

காணாத காட்சியெல்லாம் கண்ணிற்கண்ட காக புஜண்டர் யோக ஞான சமாதி முறை காரிய சித்திகள் பெரும் வழிகள், இரசவாதம், நோய் தீர்க்கும் மருந்து வகை , பிறர் கண்ணில் படாமல் மறைந்திருக்கும் மருந்து, பகைவர்களை அழிக்கும் வழி போன்றவைகளைப் பற்றி இவருடைய நூலில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

இல்லறமாயினும் துறவரமாயினும் மனதில் மாசின்றி ஒழுக வேண்டும் அப்படி ஒழுகா விடில் செய்யும் பிற செயல் வீண் பகட்டாக கருதப்படும் என்கின்றார். காக புஜண்டர் திருச்சியில் வாழ்ந்ததாகவும் அங்கேயே சமாதி நிலை கொண்டதாகவும் சித்தர்கள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். பூலோக இந்திரன் என்று தேவர்களால், ரிஷிகளால் என்றும் போற்றப்படும் மகா முனிவர் ஸ்ரீ காகபுஜண்டர். அவரும் அவரைப் போன்ற மகா முனிவர்களான ,ஸ்ரீ காலாங்கி, ஸ்ரீ புலிப்பாணி, ஸ்ரீ கொங்கணர், ஸ்ரீ கோரக்கர் போன்ற பலநூறு சித்தர்கள் வாசம் செய்யும் மலை பிரும்மரிஷி மலை.

Комментарии

Информация по комментариям в разработке