தவில் அடிடா தவில் அடிடா பாடல் | Thavil Adida song | S. P. Balasubrahmanyam | Vaali | Deva .

Описание к видео தவில் அடிடா தவில் அடிடா பாடல் | Thavil Adida song | S. P. Balasubrahmanyam | Vaali | Deva .

#devasongs #vaalihits #vairamuthusong #tamilsongs #4ksongs
தவில் அடிடா தவில் அடிடா பாடல் | Thavil Adida song | S. P. Balasubrahmanyam | Vaali | Deva . Tamil Lyrics in Description .
Movie : Kaalam Maari Pochu
Music : Deva
Song : Thavil Adida
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Vaali
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்…
ஆண் : போடு…

ஆண் : ஹேய் ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹே

ஆண் : தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்
ஹான் விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும்

ஆண் : ஹேய்….மச்சினி கல்யாணம்
மாமனுங்க கும்மாளம்
மல்லிப்பூ கார் மேலே மாலையில் ஊர்கோலம்
நல்வாழ்த்து சொல்லிப் பாடுங்கடா
ஹே ரங்காமுத்தா

ஆண் : தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்
ஹேய் விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும்….ஆ….ஹே….ஹே…..ஹோய்..

ஆண் : ஒரு தாய் வயித்து பொட்டப் புள்ளைங்க
தன் தங்கச்சியின் திருமணத்த நடத்த வந்தாங்க
அட பேருக்கொரு அண்ணன் இருக்கான்
அவ தங்கச்சிக்கு சீர் கொடுக்க இங்கே வர்லேங்க

ஆண் : ஒரு பொண்ணு மட்டும் மனசு வச்சாலே
இந்த பூமியத்தான் பொரட்டி வைப்பாளே
இத நாங்க இப்ப தெரிஞ்சிக்கிட்டாச்சு
எங்க பொஞ்சாதியை புரிஞ்சுக்கிட்டாச்சு

ஆண் : இந்த ஊர் மதிக்கிற கல்யாணம்
இது யார் நடத்துற கல்யாணம்
மூணு தாய்க்குலங்களின் அன்பாலே
தங்கப் பூ முடிக்கிற கல்யாணம்
கந்தா முனியா கையத் தட்டி பாடுங்கடோய்

ஆண் : தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்….
ஹோய்…..ஹோய்…..ஹோய்
விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும் சலசலக்கணும்…

ஆண் : வண்ண பூ முடிச்சி பொட்டு வைப்பாளே
நம்ம மச்சினிதான் புருஷனோட கைப்பிடிப்பாளே
பட்டுப் பாய் விரிச்சி பாலும் வைப்பாளே
வந்த மாப்பிள்ளைய
முந்தானையில் முடிச்சு வைப்பாளே

ஆண் : பூங்கட்டிலத்தான் போட்டு வைப்பாளே
சேவல் கூவும் வரை பாட்டு வைப்பாளே
ஒரு பெண் பிள்ளையப் பெத்தெடுப்பாளே
அதை ஆண் பிள்ளையாய் வளர்த்திடுவாளே

ஆண் : இது ஏழை மக்களின் கல்யாணம்
பொண்ண வாழ வைக்கிற கல்யாணம்
இது எங்க வீட்டு கல்யாணம்
இல்ல உங்க வீட்டு கல்யாணம்
எடுடா அடிடா எட்டுத் திக்கும் முழங்கட்டும்

ஆண் : தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்……
ஆண் : தினக்கிட தினக்கிட தினக்கிட அஹான் ஹான்
விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும்……

விசில் : ………………

ஆண் : மச்சினி கல்யாணம் மாமனுங்க கும்மாளம்
மல்லிப்பூ கார் மேலே மாலையில் ஊர்கோலம்
நல் வாழ்த்து சொல்லிப் பாடுங்கடா
ஹே ரங்காமுத்தா

ஆண் : தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்…போடு….
விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும்…..
ஹாஹ் ஹாஹ் ஹாஹா….’

Комментарии

Информация по комментариям в разработке