உகந்தை மலை முருகன் கோவில் | வள்ளி மலையில் குட்டி ஈணும் சிறுத்தைகள்? | மஞ்சள் குளித்த மலை

Описание к видео உகந்தை மலை முருகன் கோவில் | வள்ளி மலையில் குட்டி ஈணும் சிறுத்தைகள்? | மஞ்சள் குளித்த மலை

அனைவருக்கும் சாரலின் இனிய வணக்கங்கள் 🙏🙏🙏
இன்றைய காணொளியில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உகந்தை மலை முருகன் ஆலயத்தை தரிசிக்க உள்ளீர்கள்.அதில் முருகப் பெருமாள் விரும்பி உறையும் வள்ளிமலை, மஞ்சள் குளித்த மலை ஆகியவற்றைக் கண்டுகளிக்க உள்ளீர்கள்.எங்கள் தமிழ்க் கடவுள் முருகனைத் தரிசித்து உள்ளம் குளிருங்கள்.
உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் இலங்கையில் உள்ள முருகன் கோவில்களில் மிகப் பிரசித்தமானது.

குன்றம் எறிந்த குமரவேள், அவுணர்குல மன்னனை அழித்த பின்னர் எறிந்த வேலானது ஆறு பொறிகளாகியது. அவற்றுள் முதன்மையானது இம்மலையில் தங்கிற்று என்பது மூதிகம். முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங்கியிருந்தமையினால் இப்பெயர் பெற்றது எனலாம். ஈழத்து ஆறுபடைவீடுகளான திருப்படைகோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.

புராணக்கதை குறிப்பிடும் முருகனும் வள்ளியும் வந்த பொன் படகு பாறையாக மாறியதாக நம்பப்படும் பாறை உகந்தைக் கடற்கரையிளில் காணப்படுகிறது.

கொத்துப்பந்தரின் கீழ் முத்துக்குமரன் வீற்றிருந்த இத்தலத்தில், யாழ்ப்பாணத்து மார்க்கண்டு என்னும் வணிகர் 1885ஆம் ஆண்டு புதிய கோயில் ஒன்றை நிர்மாணித்ததாக வரலாறு கூறுகின்றது.

அந்நேரம் இத்திருத்தலத்தின் வண்ணக்கராக சேகர ஸ்ரீ வர்ணதிசாநாயக்கா என்றும் முதியன்சே பண்டார மகாத்மியா என்றும் அழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். இவர் தமிழ் மொழியை நன்கு அறிந்த பாணமையைச் சேர்ந்தவராவார். இவர்தான் இக்கோயிலின் முதலாவது வண்ணக்கர் என்ற இடத்தை வகித்தார். பின்னர் இவருடைய பரம்பரையினரே இன்றுவரை வண்ணக்கராகக் கடமை புரிகின்றனர் என்றும் கூறலாம்.

கதிர்காம விழாக் காலத்தையொட்டியே இங்கும் திருவிழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கதிர்காமம் செல்லும் பக்தர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம் ஆகும்.

உகந்தை திருமுருகன் ஆலயத்தின் விருட்சம் வெள்ளை நாவல் மரமாகும். ஆலயம் அருகேயுள்ள இருகுன்றுகளில் வள்ளியம்மனும், வேற்சாமியும் கோயில் கொண்டுள்ளனர். இவ்விரு குன்றங்களிலும் அமைந்துள்ள ஏழு நீர்ச்சுனைகளில் மூழ்கி நீராடினால் புண்ணியம் என நம்பப்படுகிறது.மலையடிவாரத்தில், தலவிருட்சமருகே பிள்ளையாருக்கு ஒரு திருமுன் உண்டு. திருவிழாக்காலங்களில், இரவு திருவீதியுலாவைத் தொடர்ந்து, முருகப்பெருமான் திருட்டுத்தனமாக வள்ளியம்மனைச் சந்திக்கும் "மலைத்திருவிழா" நடப்பதும், குன்றிலிருந்து இறங்கும்போது, அண்ணனுக்கு வெட்கப்பட்டு தன் ஆலயம் நோக்கி ஓடுவதும், இங்குள்ள சுவாரசியம்.

ஈழத்தைப் பொறுத்தவரை சிங்களவரும் தமிழரும் முருகப் பெருமானைத் தரிசிக்க ஒன்றுகூடும் இடங்களுள் கதிர்காமத்திற்கு அடுத்ததாக உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.புராணக்கதை குறிப்பிடும் முருகனும் வள்ளியும் வந்த பொன் படகு பாறையாக மாறியதாக நம்பப்படும் பாறை உகந்தைக் கடற்கரையில் காணப்படுகிறது.


► Facebook:   / charaltamizhi  
► Instagram:   / charaltamizhi  
► Web: http://www.charaltamizhi.com

#ukanthaimalaimurugankovil #ukanthaimurugankovil #okandadevalaya

Комментарии

Информация по комментариям в разработке