இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம் | அகத்தியர் அருளிய திருமகள் துதி

Описание к видео இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம் | அகத்தியர் அருளிய திருமகள் துதி

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அகத்தியர் திருமகள் துதி - அகத்தியரின் திருமகள் துதி,

Agathiyar Thirumagal Thuthi - Tirumagal Thuthi

சக்திவாய்ந்த அகத்தியர் அருளிய திருமகள் துதி பாடல்கள் இதோ உங்களுக்காக!!

1. மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும் விளங்கும் புகழ்க்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சு கின்றான்

2. கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென் பொகுட்டிலுறை கொள்கைபோல
மழையுறழுத் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே…
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்
கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர அருள்கொழிக்குங் கமலக்கண்ணாய்…

3. கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலோன் தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க் கரத்தாய் பார்கடலுள் அவதரித்தோய் அன்பர் செஞ்சத்
திமிரமகன் றிட வொளிருஞ் செஞ்சுடரே எனவணக்கஞ் செய்வான் மன்னோ…..

4. மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருங் கீர்த்தி எம்மனோ ரால் எடுத்துச் சொல்லார் பாற்றோ…..

5. மல்லல்நெடும் புவியனைத்தும் பொது நீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சி யோடும்….
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில் வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே…..

6. செங்மலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில்மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய் வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளைநீ அவணன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்ப தம்மா…..

7. என்று தமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும் இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய் இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவோர் ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு தவ்வை அவண் மருவல் செய்யாள்

திருமகள் துதி வணங்கும் முறை:

திருமகள் துதியை தினமும் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பாடி வந்தால் செல்வம் பெருகி கடன் தொல்லை தீர்ந்து நம் இல்லத்தில் சுபிட்சம் பொங்கும். இந்த திருமகள் துதி பாடல் எழுதிய ஏடுகள் வீட்டில் இருந்தாலே செல்வம் பெருகும்.

தினமும் காலை பிரம்மமுகூர்த்தத்திலோ அல்லது அந்தி சந்தி வேளையிலோ பூஜை அறையில் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபமேற்றி, முழுமுதல் கடவுளான விநாயகப்பெருமானை வணங்கி விட்டு, அகத்திய பெருமானுக்கு குரு வணக்கம் செய்து வணங்கி விட்டு, இந்த திருமகள் துதி பாடலைப் 9 முறை பாடி வழிபடவேண்டும்.

(பிரம்மமுகூர்த்ததம் பற்றி விளக்கமான நமது பதிவை பார்க்கவும் பிரம்ம முகூர்த்தம் சிறப்பு என்ன? -    • பிரம்ம முகூர்த்தம் பிரமாத முகூர்த்தம்...   )/ அந்தி சந்தி வேளை என்றால் மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM))

நல்ல மனதுடன் திடமான நம்பிக்கையுடன் மனமார இப்பாடலை பக்தியுடன் பாடி வந்தால் திருமகள் கட்டாயம் கண் திறப்பாள்.

#aalayamselveer #thirumagalthuthi

Комментарии

Информация по комментариям в разработке