ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி தேவையில்லை' தமிழக அரசு அறிவிப்பு | captain gpm

Описание к видео ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி தேவையில்லை' தமிழக அரசு அறிவிப்பு | captain gpm

'கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி தேவையில்லை' என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.மத்திய மோட்டார் வாகன சட்டப்படி கனரக வாகனங்களை இயக்க விரும்புவோர் 'டிரைவிங் லைசென்ஸ்' பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு கல்வி சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயம். தற்போது கனரக வாகனங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் 8ம் வகுப்பு கூட படிக்காதவர்கள் தான் கனரக வாகனங்களை ஓட்டும் நிலை உள்ளது. இதனால் ஓட்டுனர் பற்றாக்குறை நீடிக்கிறது. எனவே கனரக வாகன உரிமையாளர்கள் 'கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறும் கல்வித்தகுதியை நீக்க வேண்டும்' என மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கனரக வாகன ஓட்டுனருக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் சட்ட விதியை நீக்கி செப். 23ல் அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை கமிஷனர் சமயமூர்த்தியும் 'கனரக வாகன ஓட்டுனர் லைசென்ஸ் பெற கல்வித்தகுதி
சான்றிதழ்களை கேட்க வேண்டாம்' என உத்தரவிட்டுள்ளார். இதை பொது மக்களுக்குத் தெரியும் வகையில் அறிவிப்பு பலகையில் ஒட்டும் படியும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

#heavy_driver #licence

Комментарии

Информация по комментариям в разработке