"ஒரு Farmல் 300 வகை காய்கறிகள்” - லாபம் தரும் பாரம்பரிய நாட்டு விதைகள்; அசத்தும் Uzhuthu Un சுந்தர்

Описание к видео "ஒரு Farmல் 300 வகை காய்கறிகள்” - லாபம் தரும் பாரம்பரிய நாட்டு விதைகள்; அசத்தும் Uzhuthu Un சுந்தர்

#uzhuthuunsundar #seedbank #freeseedsbysundar #organicseedfarming #tnfarmersundar #agriculture 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சுந்தரின் விவசாய நிலத்தில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் பார்க்காத பலவிதமான பயிர்களை பார்க்க முடியும். தமிழ்நாட்டிற்கே உரித்தான நாட்டு விதைகளை பயன்படுத்தி மட்டுமே இவர் விவசாயம் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் 400 வகையான கத்தரியும், லட்சக்கணக்கான பாரம்பரிய நெல் வகைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சுந்தரின் விவசாய நிலத்தில் இன்றும் பாரம்பரிய காய்கறிகள் மற்றும் நெல் வகைகளை உங்களால் பார்க்க முடியும். லாபநோக்கத்துடன் மற்ற பயிர்களை நோக்கி விவசாயிகள் திரும்பியதால் நாட்டு விதைகளுக்கான முக்கியத்துவம் குறைந்தது.

ஆனால், இந்த விதைகள் லாபத்தை விடவும் மேலானவை என்று சுந்தர் நம்புகிறார். நாட்டு விதைகள் வித்தியாசமான சுவையுடனும், கூடுதல் நூண்ணூட்ட சத்துகளை கொண்டிருக்கலாம். மேலும், இவை மண்ணுக்கேற்ற விதைகள் என்பதால் வறட்சி போன்ற மோசமான தட்ப வெட்ப நிலைகளையும் சமாளித்து வளரக்கூடியவை. நாட்டு விதைகளின் மீது அதிகமான கவனத்தை செலுத்துவது, காலநிலை பிரச்சனைகளை தீர்க்கும் திறவுகோலாக இருக்கும் என்று சுந்தர் நம்புகிறார். மேலும், விவசாயிகளின் கைகளுக்கு நாட்டு விதைகள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதில் சுந்தர் உறுதியுடன் இருக்கிறார்.

அடையாளமிழந்து காணப்பட்ட நாட்டு விதைகள் சுந்தர் மற்றும் அவரது நண்பர்களின் முயற்சியால் தற்போது ஆயிரக்கணக்கானோரை சென்றடைந்துள்ளன. விவசாயிகளை ஒன்றிணைத்து, அவர்களின் தேவைகள் மற்றும் மண்ணுக்கேற்ற விவசாயத்தை முன்னெடுக்கும் இத்தகைய முயற்சிகள் உணவுப் பாதுகாப்பின் எதிர்காலத்தைக் கையாள்வதில் முக்கிய பங்குவகிக்கின்றன.

தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு குறித்து DW Tamil உருவாகியுள்ள பிரத்யேக தொடர் #feedingmillions இன் நான்காம் காணொளியில் இதைப்பற்றி சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

IT Jobஐ விட்டுவிட்டு Organic Farming:    • 'IT Jobல கிடைக்காத நிம்மதி, Organic F...  
மண் இல்லாமல் Hydroponics விவசாயம்:    • ’மண் இல்லாமல் விவசாயம்’ - அசத்தும்  C...  
மரணத்தை தள்ளி போடும் சிறுதானிய உணவுகள்:    • மரணத்தை தள்ளி போடும் சிறுதானிய உணவுகள...  

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке