Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருவையாறு - பணிந்தவர் அருவினை பற்று அறுத்து - திருஞானசம்பந்தர் தேவாரம்

  • Thiruneriya Thamizhosai
  • 2025-05-29
  • 1094
திருவையாறு - பணிந்தவர் அருவினை பற்று அறுத்து - திருஞானசம்பந்தர் தேவாரம்
ThevaaramThirumuraiDeiva ThamizhPanniru ThirumuraiPanniru ThirumuraigalThirugnanasambanthar PathigamThirunavukarasar PathigamSundaramurthy PathigamManikkavasagarThiruvasagamThiruneriya Thamizhosaiபன்னிரு திருமுறைகள்தேவாரம்திருவாசகம்திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரமூர்த்திமாணிக்கவாசகர்தெய்வத் தமிழ்Devara Paadal Petra Sthalamதிருநெறிய தமிழோசைSri Aiyaarappar TempleThiruvaiyaruதிருவையாறு
  • ok logo

Скачать திருவையாறு - பணிந்தவர் அருவினை பற்று அறுத்து - திருஞானசம்பந்தர் தேவாரம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருவையாறு - பணிந்தவர் அருவினை பற்று அறுத்து - திருஞானசம்பந்தர் தேவாரம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருவையாறு - பணிந்தவர் அருவினை பற்று அறுத்து - திருஞானசம்பந்தர் தேவாரம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருவையாறு - பணிந்தவர் அருவினை பற்று அறுத்து - திருஞானசம்பந்தர் தேவாரம்

01.120 திருவையாறு | பணிந்தவர் அருவினை பற்று அறுத்து திருஞானசம்பந்தர் தேவாரம்

#SriAiyaarapparTemple | #Thiruvaiyaru | #ThiruneriyaThamizhosai | #PanniruThirumurai | #Devaram | #Thiruvasagam | #Thevaaram | #Thirugnanasambanthar | #Thirunavukarasar | #Sundarar | #திருஞானசம்பந்தர் | #திருநாவுக்கரசர் | #சுந்தரர் | #மாணிக்கவாசகர் | #திருமுறை | #தேவாரம் | #திருவாசகம்

அறம் வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் ஆறு சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். மற்ற சிவஸ்தலங்கள் திருவெண்காடு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர் மற்றும் திருவாஞ்சியம். அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.

சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் "ஓலமிட்ட விநாயகர்" என்று அழைக்கப்படுகிறார்.

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஐயாற்றீசர், ஸ்ரீ ஐயாரப்பர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி

திருமுறை : முதல் திருமுறை 120 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்

நாவுக்கரசர் இக்கோவிலைப்பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார். கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.

இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய "மாதர்பிறைக் கண்ணியானை' என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலை நாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில், இங்கு கோவில் பிராகாரத்தில் "ஐயாறப்பா" என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் கேட்கலாம். இவ்வாறு அப்பர் பிரான் கண்ட கயிலாயக் காட்சியினை தன் பதிகத்தில் மிகவும் விவரித்துக் கூறுகிறார்.

00:15 பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல் துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழில் ஆமை கொண்டு
அணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. ..... (01)

01:49 கீர்த்தி மிக்கவன் நகர் கிளரொளி உடன் அடப்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்து
போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. ..... (02)

03:10 வரிந்த வெஞ்சிலை பிடித்து அவுணர்தம் வளநகர்
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. ..... (03)

04:21 வாய்ந்த வல் அவுணர் தம் வளநகர் எரியிடை
மாய்ந்து அற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்து எழு சடையினன் தொன்மறை ஆறு அங்கம்
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. ..... (04)

05:13 வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே. ..... (05)

05:54 முன்பனை முனிவரொடு அமரர்கள் தொழுது எழும்
இன்பனை இணையில இறைவனை எழில் திகழ்
என்பொனை ஏதமில் வேதியர் தாம் தொழும்
அன்பன வளநகர் அந்தண் ஐயாறே. ..... (06)

06:42 வன்திறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகமது ஆகி தன்
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே. ..... (07)

07:46 விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும்
அடித்தலத்தால் இறை ஊன்றி மற்று அவனது
முடித்தலை தோள் அவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. ..... (08)

08:57 விண்ணவர் தம்மொடு வெங்கதிரோன் அனல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
கண்ணனும் பிரமனும் காண்பரிது ஆகிய
அண்ணல் தன் வளநகர் அந்தண் ஐயாறே. ..... (09)

10:07 மருளுடை மனத்து வன் சமணர்கள் மாசு அறா
இருளுடை இணைத்துவர்ப் போர்வையினார்களும்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை அடிகள் அந்தண் ஐயாறே. ..... (10)

11:09 நலமலி ஞானசம்பந்தனது இன்தமிழ்
அலைமலி புனல் மல்கும் அந்தண் ஐயாற்றினைக்
கலைமலி தமிழ் இவை கற்று வல்லார் மிக
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே. ..... (11)

பதிகப் பலன் : அலைகள் வீசும் ஆறு குளம் முதலிய நீர் நிலைகளால் சூழப்பட்ட ஐயாற்று இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இன்தமிழால் இயன்ற கலை நலம் நிறைந்த இத்திருப்பதிகத்தைக் கற்று வல்லவராயினார் நன்மை மிக்க புகழாகிய நலத்தைப் பெறுவர்.

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

Subscribe Us :    / thiruneriyathamizhosai  

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]