Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть DAY 02 NOVENA TO ST MICHAEL THE ARCHANGEL in tamil

  • நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope
  • 2025-09-21
  • 146
DAY 02 NOVENA TO ST MICHAEL THE ARCHANGEL in tamil
  • ok logo

Скачать DAY 02 NOVENA TO ST MICHAEL THE ARCHANGEL in tamil бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно DAY 02 NOVENA TO ST MICHAEL THE ARCHANGEL in tamil или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку DAY 02 NOVENA TO ST MICHAEL THE ARCHANGEL in tamil бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео DAY 02 NOVENA TO ST MICHAEL THE ARCHANGEL in tamil

St Michael the Archangel Prayer (long version) - Full Prayer | Pope Leo XIII, after mass one day, experienced a vision of the evil spirits attacking and seeking to the destroy the Church. In the midst of the attack was St. Michael the Archangel battling with the evil spirits, casting Satan and his legions into the abyss of Hell.


🛡️ தூய மிக்கேல் அதிதூதர் நவநாள்

நாள் - 02

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமென்.

தொடக்க செபம்:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! தூய மிக்கேல் அதிதூதருடைய நவநாள் செபத்தை ஏறெடுக்க உமது திருமுன் வந்திருக்கிறேன். இச்செபத்திலே நான் பராக்கில்லாமல் செபித்து உமது அருளைப் பெற்றிட எனது சிந்தனைகளையும் மனத்தினையும் நெறிப்படுத்தியருளும். திரு அவையின் இளவரசராம் புனித மிக்கேல் அதிதூதர் வழியாக நாங்கள் ஏறெடுக்கும் மன்றாட்டுக்களை பரிவன்போடு நிறைவேற்றித் தருவீராக! ஆமென்.

சிந்தனை:

அதிதூதரின் அறிவுரையில் தலைமைக்குரு யோசுவாவின் பொறுப்புணர்வு

தந்தையர்களுக்கு முன்மாதிரி தூய மிக்கேல்

வாசகம்:

செக்கரியா 3:1-10

பின்பு அவர் தலைமைக் குருவாகிய யோசுவாவை எனக்குக் காட்டினார். அவர் ஆண்டவரின் தூதர் முன்னிலையில் நின்றுகொண்டிருந்தார். அவர்மேல் குற்றம் சாட்டுவதற்கு அவரது வலப்பக்கத்தில் சாத்தானும் நின்று கொண்டிருந்தான்.அப்பொழுது ஆண்டவரின் தூதர் சாத்தானை நோக்கி, “சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக! எருசலேமைத் தெரிந்தெடுத்த ஆண்டவர் உன்னை அதட்டுவாராக! அடுப்பிலிருந்து எடுத்த கொள்ளியல்லவா இவர்?” என்றார்.யோசுவாவோ அழுக்கு உடைகளை உடுத்தியவராய் தூதர்முன் நின்று கொண்டிருந்தார். தூதர் தம்முன் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி,“அழுக்கு உடைகளை இவரிடமிருந்து களைந்துவிடுங்கள்” என்றார். பின்பு அவரிடம், “உன்னிடமிருந்து உன் தீச்செயல்களை அகற்றி விட்டேன்; நீ உடுத்திக் கொள்வதற்குப் பட்டாடைகளை அளிப்பேன்” என்றார்.மேலும், “தூய்மையான தலைப்பாகை ஒன்றை அவருக்கு அணிவியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் தூய்மையான தலைப்பாகையை அணிவித்துப் பட்டாடைகளை உடுத்தினர். ஆண்டவரின் தூதர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.ஆண்டவரின் தூதர் யோசுவாவுக்கு விடுத்த உறுதிமொழி இதுவே:“நீ என் வழிகளில் நடந்து, என் திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகினால், நீ என் இல்லத்தை ஆள்வாய்; என் திருமுற்றங்களுக்கும் பொறுப்பாளி ஆவாய்; இங்கே நிற்கும் தூதர்கள் இடையே சென்று வரும் உரிமையை உனக்குத் தருவேன்” என்று படைகளின் ஆண்டவர் கூறுகிறார்.தலைமைக் குரு யோசுவாவே! நீயும் உன் முன்னே அமர்ந்திருக்கும் உன் தோழரும் கேளுங்கள். அவர்கள் நல்லடையாளமான மனிதர்கள்; இதோ நான் தளிர் எனப்படும் என் ஊழியன் தோன்றுமாறு செய்வேன்;யோசுவாவின் முன்னிலையில் நான் வைத்த கல்லைப்பார்; இந்த ஒரே கல்லில் ஏழு பட்டைகள்; அதில் நான் எழுத்துகளைப் பொறித்திடுவேன், என்கிறார் படைகளின் ஆண்டவர்.ஒரே நாளில் இந்த நாட்டின் தீச்செயலை அகற்றுவேன். படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாளில் ஒவ்வொருவரும் தம் அடுத்திருப்பவரைத் தம் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் தங்கி இளைப்பாற அழைப்பார்.

நவநாள் செபம்:

வானுலக சேனைத் தளங்களின் அதிபதியே / சதா ஜீவ அரூபிகளில் மகிமைப் பிரதாபம் நிறைந்த சம்மனசானவரே / அவர்களிலும் உத்தமமானவரே / உன்னத கடவுளின் மந்திராலோசனை நிர்ணயப் பெட்டகமே / தேவ கட்டளைப்படியே பரலோக வாசலைத் திறக்கவும் பூட்டவும் அதிகாரம் உள்ள வானவரே / தேவநீதி சிம்மாசனத்தண்டையில் எங்கள் ஆத்துமாக்களைச் சேர்ப்பிக்கும் தூதாதி தூதரே / மரண அவஸ்தப்பைடுகிறவர்களுக்கு உதவி செய்ய தீவிரித்தோடிவரும் உபகாரியே / மரித்தவர்களின் ஆத்துமங்களை அழைத்துக் கொண்டு போய் திவ்ய கர்த்தரின் சந்நிதியில் சேர்ப்பிக்கும் காவலரே / பலவீனனும் நிர்ப்பாக்கி யனுமாகிய அடியேனைக் கிருபாகடாட்சமாய் பார்த்து என் ஜீவிய காலம் முற்றிலும் விஷேசமாய் மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச உதவி புரிந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறேன். ஆமென்..

இறுதி செபம்:

அதி தூதரான தூய மிக்கலே! தீய உலகில் வாழும் எங்களை ஆசாபாசப் புயல் கெளவில் கொள்ளாதவாறு காத்தருளும். பாவத்திற்கு அஞ்சி வாழும் மன வலிமையை எங்களுக்கு தாரும். எங்கள் பாவத்தால் உமது தராசு கீழே தாழாமல் புண்ணியத்தால் மேலெழும்பி, நாங்கள் முடிவில்லா இன்ப வாழ்வடைய வழி காட்டும்படி உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைத் தயவாய்க் கேட்டு அருள் பாலியும். - ஆமென்.

புனித மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமென்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]