To Support, Kindly Subscribe this Channel.
அருள்மிகு குன்றமுலைநாயகி உடனுறை சண்பகாரணியர்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம் திருமுறை
பண் : திருநேரிசை
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : நாகேச்சரம்
மரம்: செண்பகம்
குளம்: சூரியபுட்கரணி
ஐந்தலை அரவால் பூசிக்கப்பெற்ற கோயிலை உடையது ஆதலின் இப்பெயர்பெற்றது. இச்செய்தி, இக்கோயிலுக்குரிய நாவுக்கரசரது திருக்குறுந்தொகையிலுள்ள (திருப்பாட்டு 4)
``ஐந்தலை யரவின் பணி கொண்டருள்
மைந்தர் போன்மணி நாகேச் சரவரே``
என்ற தேவாரப் பகுதியால் அறியலாகும்.
ஐந்தலை நாகமன்றி, சந்திர சூரியர்களால் பூசிக்கப்பெற்றது. தெய்வப் பாக்கிழாராகிய சேக்கிழார் பெருமானுக்கு மிக்க விருப்பமுள்ள தலம். சேக்கிழார் தமது ஊராகிய குன்றத்தூரில் ஒருகோயில் எடுப்பித்து அதற்குத் திருநாகேச்சரம் என்று பெயர் வைத்துள்ளமை இதை நன்கு புலப்படுத்தும்.
திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, திருநாவுக்கரசு நாயனாரது பதிகம் மூன்று, சுந்தரமூர்த்தி நாயனாரது பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்களைப் பெற்ற பெருமையுடையது. நாளும் வணங்குவார் பிணி தீர்க்கும் பெற்றியுடையது.
``நாளு நாதனமர் கின்ற நாகேச்சுர நண்ணுவார்
கோளு நாளுந் தீயவேனு நன்காங் குறிக்கொண்மினே``
என்னும், இக்கோயில் சம்பந்தர் தேவாரப்பகுதி சிந்திக்கற்பாலது.
பல நூற்றாண்டு கண்ட தலம்:
இராஜேந்திரன் சேனையில் இளங்குஞ்சர மல்லரில் ஒருவனான அடிகள் அச்சான்தந்த நிலத்தின் வருமானத்திலிருந்து இறைவனுக்கு மணியும் முத்தும் கொண்ட ஒரு திருவாபரணம் செய்யப்பட்டது.
தன்மகளின் நலத்திற்காகத் தீரன் சத்திவிடங்கி என்ற அரண்மனைப் பெண்டாட்டி ஒரு விளக்கிற்காக 48 ஆடுகள் தானம் செய்தாள். ஒரு கல்வெட்டில் கோயில் பொன், வெள்ளி, நகைகள், முதலியன கூறப்பட்டுள்ளன. மற்றொன்றின்படி விக்கிரமசிங்க பல்லவராயன் 100 காசுதந்து காவேரி வெள்ளத்தினால் அழிந்த கால்வாய்களைச் செம்மைப்படுத்தினான். வட்டியில் மீதியானது கோயில் வழிபாட்டிற்கும், சிவதருமம் கூறுவதற்கும் பயன்படுத்தப்பட்டது.
அர்த்தநாரீசர் திருவுருவம் இங்குத் தாபிக்கப்பட்டது. கண்டராதித்தியர் இக் கோயில் திருப்பணி செய்திருக்கிறார். வேறொரு கல்வெட்டின்படி மிலாடுடையார் பள்ளியில் குமாரமார்த்தாண்டன் என்ற திருச்சுற்றாலை கட்டப்பட்டதாம்.
பதிகப் பாடலின் பொருளுரை:
1-பொழிப்புரை:
திருநாகேச்சுரத்துப் பெருமான், பாம்புக் கச்சை உடையவராய், நீலகண்டராய், பிச்சை எடுத்து உண்பவராய், பேரருளாளராய், விருப்போடு பூக்களைத் தூவி இரவும் பகலும் தம்மை விரும்பி வழிபடுபவர்களுக்கு இனியராய் உள்ளார்.
2. பொழிப்புரை:
திருநாகேச்சுரத்துப் பெருமான் வேடன் உருவில் வந்து அருச்சுனனோடு அம்பு எய்து பொருதவராய், சுடுகாட்டை இருப்பிடமாகக் கொண்டவராய், நறுமணம் கமழும் கங்கையாகிய நங்கையை, பெருமையை வெளிப்படுத்தும் சடையில் அடக்கியவராய், தீவினையைத் தீர்க்க வல்லவராய், அதனால் உலகறிந்த புகழை உடையவராய் உள்ளார்.
3. திருநாகேச்சுரத்துப் பெருமான் மலையையே தமக்குத் துணையான வில்லாகக் கொண்டு காவல் அமைந்த முப்புரங்களை அம்பு எய்து அழித்தவராய், பொன்னுக்கு ஒப்பான திருவடிகளை உடையவராய், புலித்தோல் ஆடையராய், வேதத்துக்குச் சமமான பாமாலைகளைக் கொண்டு தொழுது வழிபடுபவர்க் கெல்லாம் மேம்பட்ட துணைவராவார்.
4. பார்வதி பாகராய், காளை எழுதிய கொடியினராய், செம்பொன்போன்ற நிறத்தினராய், விளங்கும் திருநீற்றினராய், எம் பெருமானே! எம்மை அடிமை கொள்ளும் இறைவனே! என்று தம்மை விரும்பும் அடியார்களுக்கு அன்பராய் உள்ளார்.
5. யானைத்தோலைப் போர்த்தவராய், கனல் வீசும் மழுப்படையை ஏந்தியவராய், படம் எடுக்கும் பாம்பினை இடையில் கட்டியவராய், பூதங்கள் பலவும் கூடிக் குடமுழாவை ஒலிப்பப் பேய்கள் பாட நாடோறும் கூத்து நிகழ்த்தும் தலைவராய் உள்ளார் திருநாகேச்சுரப் பெருமான்.
6. திருநாகேச்சுரப் பெருமான் பிறைதங்கும் சடையினராய்ப் பார்வதிபாகராய், வேதங்களை ஓதுபவராய், திருமாலோடும் பிரமனோடும் தேவர்கள் முறையாகக் கூடித் தம் தலைகளால் வணங்கும் தேனைப்போல விரும்பத்தக்க திருவடிகளை உடையவராய் உள்ளார்.
7. திருநாகேச்சுரத்துப் பெருமான் வஞ்சகர்களுக்கு அரியராய், தம்மை விரும்பிய அடியவர்களுக்கு எளியராய், யானைத்தோலைப் போர்த்தவராய், கூற்றுவனை ஒறுத்தவராய், தேவர்கள் அஞ்சி ஓடுமாறு கடலில் தோன்றிப் பரவிய விடம் அணி கண்டராய் உள்ளார்.
8. திருநாகேச்சுரத்துப் பெருமான் இன்பம் நிறைந்த காளியின் கொங்கைகளைத் தழுவும் புனிதராய், விரைந்து செல்லும் காளையை உடையவராய், வெண்ணீறணிந்த திருமேனியின் ஒருபாகமாகத் திருமாலை உடையவராய், மேருமலையாகிய வில்லையும், பாம்பாகிய நாணையும் உடையவராய் உள்ளார்.
9. திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளையராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.
10. திருநாகேச்சுரத்துப் பெருமான் தம் வில்லாற்றலால் மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவராய், தம் பண்பினாலே தேவர்களுடைய தலைவர்களுக்கும் தலைவராய், தன் உடல் வலிமையாலே கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனது வலிமையைப் போக்கி அவ்விடத்திலேயே அவனுக்கு நன்மை ஏற்படும் வகையில் அருள் செய்தவராவார்.
Информация по комментариям в разработке