சோரியாசிஸ் மற்றும் தோல் நோய்கள் இயற்கையாக குணமாக Dr. கௌதமன், PCR ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை
உடலில் சிறு தடிப்புகள் ஏற்படும். மென்மையான, வெண்மையான, பளபளப்பான மீன் செதில்கள் போன்று மூடப்பட்டு இருக்கும். செதில்களைப் பிய்த்தால், குண்டூசி முனையளவு ஒத்த ரத்தக்கசிவு ஏற்படும். படை உருவாகும் இடங்களும், வடிவமும் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். உடலெங்கும் படை காணப்பட்டு செதில் உதிரலாம். தலை, காதின் பின்புறம் சிறுசிறு கட்டிகள் உருவாகி செதில் உதிரலாம். நாணயம் போன்ற வடிவமுடைய படைகளும், கிருமித் தொற்று இல்லாத கீழ் கொப்புளங்களும் ஏற்படலாம். அக்குள், தொடைமடிப்பு, தொப்புள் ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நீர்க்கசிவு ஏற்படலாம். உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடிப்பான வெடிப்புகளை உடைய படைகள் ஏற்படலாம்.
நாட்பட்ட நிலையில், முழங்கால்களைப் பாதித்து, வாதம் போன்று நகரவிடாமல் பாதிப்பை ஏற்படுத்தலாம். நகங்களைப் பாதித்து, நகத்தின் குறுக்கே பள்ளம் விழலாம். நகத்தின் நிறம் மாறலாம். அரிப்பு இல்லாமலும், சிலருக்கு மிகுதியான அரிப்பும் காணப்படலாம்.
அரிப்பு ஏற்படாமல் இருக்க கத்தரிக்காய், பாகற்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, சேம்பு, அகத்திக்கீரை, கொய்யாப்பழம், கேழ்வரகு, சோளம், கம்பு, மீன், கருவாடு போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
முன்னரே குறிப்பிட்டது போன்று, நாட்பட்டு குணம் ஆகும் நோய்களுள் ஒன்றாவதால் பொறுமையாக மருந்து அருந்துதல் வேண்டும். ஒரு வருட காலம் வரை கூட, சிலருக்கு மருந்து எடுக்க வேண்டிய சூழல் வரலாம். அதனால் மன அழுத்தம் இல்லாமல் இருக்க தியானம், ஆசனம், மூச்சுப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
#பொதிகைதொலைக்காட்சியில் #திங்கள் #வியாழன் மற்றும் #புதன் காலை 1005 மணி முதல் 1100 மணி வரை #மக்கள்தொலைக்காட்சியில் #திங்கள் மதியம் 330 மணி முதல் 430 மணி வரை
இலவச மருத்துவ ஆலோசனைக்கு அழைக்கவும் 044 - 4609 4900.
ஆயுர்வேத வல்லுநர் Dr.கே.கௌதமன் அவர்களின் “ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்” பிரதி திங்கள் முதல் வெள்ளி வரை மக்கள் தொலைக்காட்சியில் காலை 8.30 முதல் 8.45 மணி வரையிலும், பொதிகை தொலைக்காட்சியில் மதியம் 2.20 முதல் 2.35 மணி வரையிலும் காணத்தவறாதீர்கள்.
Special TV Programs:
Every Monday - Friday - #MakkalTV - 8.30am
Every Monday - Friday - #PothigaiTV - 2.20pm
Every Monday - Friday - #KalaignarTV - 7.10am
Every Monday, Wednesday and Thursday - Live Talk Show - #PothigaiTV - 10.05am
Every Monday - Live Talk Show - #MakkalTV – 3.30pm
Every Friday - Live Talk Show - #SankaraTV - 11.00am
Every Wednesday - Live Talk Show - #CaptainNewTV - 4.00pm #StayTuned
www.drgowthaman.com www.shreevarma.org www.pcrayurveda.com www.varicoseheal.com
Информация по комментариям в разработке