சரணாகதம் || Saranakatham || Trivandrum Sisters || Ulundurpettai Shanmugam || Vijay Musicals

Описание к видео சரணாகதம் || Saranakatham || Trivandrum Sisters || Ulundurpettai Shanmugam || Vijay Musicals

பாடல் : சரணாகதம் || ஆல்பம் : தேவி தரிசனம் || பாடியவர்கள் : திருவனந்தபுரம் சகோதரிகள் || இயற்றியவர் : உளுந்தூர்பேட்டை சண்முகம் || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் பக்தி பாடல்கள் || கடவுள் : அம்மன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || Song : Saranakatham || Album : Devi Dharisanam || Singers : Trivandrum Sisters || Lyrics : Ulundhoorpettai Sanmugam || Music : Sivapuranam D V Ramani || Tamil Devotional Songs || Goddess : Amman || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals || Ulundurpettai Shanmugam

பாடல்வரிகள் || LYRICS :

உன்னை சரணடைந்தேன் நீயேகதி சிவசக்தி எனையாதரி
உன்னால் நான் என உருகாகிய பின்னர் என்னாலே ஒன்றேதடி

அன்னை நீதரும் அமுதம் போதுமடி வேறென்ன வேண்டுமடி
கண்ணில் ஒளிநீ ஓயாத ஓம் ஒலி பண்ணாக ஒலிக்குதடி

நான் யார் என்றதும் நீதான் நானென்றே ஓடோடி வந்தாயடி
நீ யார் என்பதும் நெஞ்சில் நின்றதும் கண்டேன் கருணாகரி

தேன்போல் இனித்தது தேவி நின் குரலது வான்வழி வந்ததடி
தேன்தானோ அது என்னுள் புகுந்ததடி ஏழை என் பாக்யமடி

தாயும் நீயடி தந்தை நீயடி சொந்தங்கள் நீ தானடி
காயும் நீயடி பழமும் நீயடி விதைதானே மரம்தானடி

நீயே காற்றாடி நிலமும் நீயடி நிலம் சூழ் நீருமடி
ஆகாயம் நீ அக்னியதும் நீ ஐம்பூதம் ஆனாயடி

எலும்பும் நீயடி நரம்புகள் நீயடி ரத்தம் தசை நீயடி
உடலும் நீயடி உடலுக்குள் உறை உயிரும் நீ உண்மையடி

தோற்றம் வாழ்வு முடிவு எனும் மூன்றுமே தொடர்ந்தே நடக்குதடி
ஏற்றம் இறக்கம் எல்லாம் உன் கையிலடி அம்மானை ஆட்டமடி

காலை நன்பகல் மாலை இரவு என்று காலங்கள் தோற்றமடி
கோடை இளவேனில் வாடை மழை என்று பருவங்கள் மாற்றமடி

மாசம் வருஷமென ஓடும் சக்கரந்தான் ஓய்வது எப்போதடி
நீயும் நானும் ஒன்றாகச் சேர்ந்த பின் சுற்றுவது நின்றதடி

கேள்வி நீயடி பதிலும் நீயடி கேட்டாவது என்னடி
வேள்வி நீயடி தீயும் நெய்யதன் நீதானடி சொல்லடி

மந்தரம் யந்தரம் தந்தரம் எல்லாமே மாயாஜாலமடி
உன் தயவில்லாது ஒரு செயலும் ஏது உள்ளதை மறைக்காதேடி

ஆணொன்று பெண்ணொன்று படைத்தது எதற்கு சொல் வேடிக்கைதானோடி
ஏனோ வீணான விளையாட்டு தானடி வித்தைக்கு பெயரென்னடி

எப்போது இதைவிட்டு தப்பித்துச் செல்வது எப்படி எனச் சொல்லடி
இக்கரைக் கடந்து அக்கரைக்குச் செல்லவே உபாயமதைக் கூறடி

பாவமென்ன செய்தோம் சொல்லடி தாயே பருவத்தை வர்தினி
கோவம் கொள்ளாதே குணவதி நீயடி குதர்க்கங்கள் வேண்டாமடி

வேகம் போதுமடி அம்மா கௌரி வேதனைத் தீர்த்திடடி
மோகம் அகற்றிடு தாகத்தைத் தனித்திடடி இளைப்பாற வேண்டுமடி

கற்பகமாம் தரு காமதேனு உந்தன் கைகாட்ட வந்திடுமே
கானல் நீரிலே மானலைவது போலே ஏனலைய விட்டாயடி

இந்திராதிதேவர் இருக்குமிடம் காட்ட இன்னும் மனம் இல்லையோடி
இருக்கும் இடமே போதும் போதுமடி என்னுடனே இருந்திடடி

காலடி நிழல்படும் ஓரிடம் போதுமே அம்மாவின் முகம் பார்க்கவே
காணக் காண ஒரு ஆனந்த பரவசம் கணக்கிலே அடங்காதடி

நான் பேச நீ பேச நாளேது பொழுதேது நமக்குள்ளே நடக்கட்டுமே
மோனமும் மொழிதான் முற்றும் தெளிந்த பின்னே இக்கணமே சொர்க்கமடி

நீயும் நானும் ஏகபோகம் நம்மிடையே ஏது பேதம்
தாயும் சேயும் வேறு வேறாய் தோன்றினாலும் ஒன்றுதானே

சக்தி வேறு சிவனும் வேறு என்று சொல்வார் தவறு செய்வார்
சக்தி இன்றேல் சிவனும் இல்லை சக்தி வாழ்க வாழ்க வாழ்க

சக்தி இன்றேல் சிவனும் இல்லை சக்தி வாழ்க வாழ்க வாழ்கவே

Комментарии

Информация по комментариям в разработке