@NIRAAKNA
வரம் தரும் வராஹி அம்மன்
Varahi Amman sloka s
வாராஹி காயத்ரி மந்திரம்
------------------------------
ஓம் மஹிஸத்வஜாயை வித்மஹே
தந்தஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹீப் பிரசோதயாத்
Varahi Gayathri Mantram
Om Mahishadhwajayai Vidmahe,
Dandahastayai Dhimahi,
Tanno Varahi Prachodayat
வாராஹி மூல மந்திரம்
--------------------------
ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹ:
Varahi Moola Mantram
Om Kleem Varaha muki hreem sithi swaroopini
Shreem thana vasangari thanam varshaya swaha
வாராஹி மஹா மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி வாராஹி வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்திணி நம: ருந்தே ருந்தினி நம:
ஜம்பே ஜம்பிணி நம: மோஹே மோஹினி நம:
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
ஸர்வ வாக்சித்த சக்ஷீர் முக கதி
ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லெளம்
ட: ட: ட: ட: ஹீம் அஸ்த்ராய பட்
Varahi Maha Mantram
Om Aim Hreem Shreem
Aim Gloum Aim Namo Bhagavathi
Varthali varthali
Varahi varahi
varahamuki varahamuki
Anthe Anthini Namaha
Runthe Runthini Namaha
Jambe jambini namaha
Mohe Mohini Namaha
Sthambe Sthambini Namha
Sarvadushta Pradhushtaanaam Sarveshaam
Sarva Vaak Sidha Sakshur Mukagadhi Jihwa
Sthambanam Kuru Kuru
Seegram Vasyam Aim Kloum
Taha Taha Taha Taha
heem ashthraya phat
_____________ #varahi #varahiamman #வாராஹி #மஹா #மந்திரம் #வாராஹிஅம்மன் #வராஹிஅம்மன் #பூஜை #வழிபாடு #காயத்ரி #மந்திரம்
#வாராகி #வராகி #வாராகிஅம்மன் #வராகிஅம்மன் #varahipooja #varahiammanslokas #tanjavur #tanjore #BrahadeeswaraTemple #periya kovil #tanjoreBigTemple #varanasi #lalithasahasranamam #lalithambigai #ambigai #goddessparvathi #parvathidevi #parvathi #goddess #varahigoddess #enemies
அன்னை லலிதாம்பிகை, ஒவ்வொரு அரக்கனையும் கொல்ல ஒரு சக்தியை உருவாக்கினார். அந்த வகையில் விசுக்ரன் எனும் அசுரனை கொல்ல வாராகி எனும் சக்தியை அன்னை லலிதாம்பிகை படைத்தாள். வாராகியின் சிறப்பு பற்றி லலிதா சகஸ்ரநாமத்தின் 78-வது சுலோகத்தில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும்.
வாராகி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவி யாகவும் விளங்குகிறாள்.
பக்தர்களை சத்ருக்கள் சோதிக்கும் போது கோபம் கொண்டு அசுரனை வதம் செய்ய உக்ர நிலையை அடைகிறாள், ஆதி பராசக்தி வடிவங்களில் உயர்ந்த வடிவம். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி.
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், தபோலோகம் உள்ளிட்ட ஏழு லோகங்களின் காவல் படைத்தலைவி, தன்னை நம்பிய பக்தர்களுக்கு துளிகூட தீவினை அண்டாது காப்பதில் மூங்கில் போன்ற திடமான உடலை கொண்ட வெற்றி தேவதை அவள். எட்டு திசை அதிபர்களின் ஆயுதங்களில் உறைந்திருப்பவள் இந்த வாராகி.
“எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்க வல்லாள்
ஒரு மெல்லியதன் பாதம் விரும்புகவே”
என கூறுகின்றது வாராகி மாலை, அதாவது எத்தனை சேனைகள் கோடியளவில் நின்றாலும் அவள் பாதத்தை பணிந்த பக்தனுக்காக அத்துனை பேரையும் வீழ்த்தி தன் பக்தனை காத்து ரட்சிப்பாள் என்று வாராகி மாலை அவள் வீரத்தை புகழ்கின்றது.
வாராகியின் வடிவம்
வாராகி=வாராகம் என்பது பன்றியை குறிக்க கூடிய சொல், அன்னையவள் எதிரிகளை தவிடு பொடியாக்கி உலகை காக்க இந்த அவதாரம் எடுத்தாள்.
மனித உடலும் மிருகத்தலையும் கொண்ட வர்கள் அதர்வண வேத தெய் வங்கள். இவர் களுக்கு நூறு மடங்கு சக்தி அதிகம்.
அதில் அன்னையாகப்பட்டவள் உலக நன்மைக்காக அழகிய பெண்ணின் உட லும் வராகி முகமும் (காட்டு பன்றி முகம்) கொண்டு ஆவேச வடிவாய் எதிரியை வெல்லும் பேராற்றலாய் காட்சியளிக்கிறாள்.
இவள் உறுகொண்டு உருவான காரணமே மானிட பிறப்புக்கும், அரசாள் பவர்களுக்கும் வெற்றியை, வாக்கு வலிமையை தருவதற்கே. அதைவிட ஒரு பக்தனை பக்குவப்படுத்தி ஞானத்தை தந்து வெற்றி உருவாக வடிவெடுக்க செய்வதில் வாராகி அன்னையே முதலிடம் வகிக்கின்றாள்.
வாராகியின் இரு செவிகளும் மாணிக்க ஒளியுடையதாம், இரண்டு பாதங்களும் புஷ்பராகம் போன்று மலர்கிறதாம். அந்த அழகிய இரு விழிகளும் நீலக்கல் போன்றதாம். அவள் நகம் வைரம் போன்று மின்னுகிறதாம். அவள் புன்னகையோ முத்தை போன்று உள்ளதாம். அவள் செவ்வாய் பவள நிறத்தில் அமைந்து ஆர்ப்பரிக்கின்றதாம். இடையோ மரகதம், உடலோ பச்சை நிற ஒளி ரும் திருமேனி என அவள் அம்சத்தை விவரிக்கின்றது.
வாராகி என்பவள் புவனேஸ்வரியின் படைத்தலைவி. அவளின் எதிரிகளை பொடிபொடியாக்கும் பைரவியும் வாராகியே.
அசுரர்கள்தான் மானிட பிறப்பு களில் உள்ள அசுர குணம், காமம், குரோதம், தான் எனும் அகந்தை இவற்றை எல்லாம் அழித்து தவிடுபொடியாக்கி நலமுற செய்யவே அவதரித் திருக்கிறாள் வாராகி.
“ஸ்ரீசக்ர வடிவில் திகழும் அன்னை புவனேஸ்வரிக்கு எட்டு திக்கிலும் அமர்ந்து எட்டு நாமங்களை கொண்டு வாராகி திகழ்கின்றாள்.
அவை 1. ஆதி வாராகி, 2.லகு வாராகி, 3. பஞ்சமி, 4. அஸ்வாரூடா வாராகி, 5.தண்டநாத வாராகி, 6. தூம்ர வாராகி, 7.பரூகத் வாராகி, 8. ஸ்வப்ந வாராகி.
வாராகி அன்னை கரிய நிறம் உடையவள். கையில் “உலக்கையும்”, “கலப்பையும்” ஏந்தியவள். வேதவடிவாகி பூமியை நோக்கும் வடிவம் கொண்டு கூரிய இரு பற்களை உடையவள் இந்த வாராகி.
வாராகிக்கு உகந்த மலர் :- நீல சங்கு பூ, கருந்துளசி, வில்வம்
வாராகிக்கு வலிமை கூடும் நாள்:- பவுர்ணமி, தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி, தசமி திதி சிறப்பு
வாராகி வந்து நம்மோடு பேசும் நேரம்:- இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் பூஜை செய்ய சிறப்பு
பிடித்த அமுது:- சர்க்கரை வள்ளிகிழங்கு, எருமை தயிர், பயிர் வகை கள், மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை.
Other Videos:
@Athma Gnana Maiyam @Temples Guide
Информация по комментариям в разработке