அன்பர்களின் கேள்விகளும் அருள்தந்தையின் பதில்களும்
❓ கேள்வி: சுவாமிஜி! தற்கால விஞ்ஞானிகளால் இன்று கண்டுபிடிக்கப்படும் இயற்கை இரகசியங்களை, அன்று கருவி, ஆராய்ச்சிக்கூடம் இன்றி சித்தர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள்?
✅ பதில்: இன்றுவரை கண்ட விஞ்ஞானம் அனைத்தும் மனித உடலுக்குள் நடைபெறும் அதிசயங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. சுத்த வெளியிலிருந்து பரமாணுக்கள் தோன்றின. பரமாணுக்களின் சேர்க்கையால் பஞ்சபூதங்கள் ஏற்பட்டன. நீர், நெருப்பு, காற்று என்ற நான்கு பூதங்களுடன் விண் என்ற ஐந்தாவது பூதமான உயிர்ச்சக்தி சுழலும் பொழுது, அதன் தடை உணர்தலாக உணர்ச்சி நிலை பெற்று, ஓரறிவு முதற்கொண்டு தொடங்கிய பரிணாமத்தின் உச்சமாக வந்த ஆற்றிவு பெற்றவன்தான் மனிதன்.
இந்த மனித உடலிலே உடல், உயிர், ஜீவகாந்தம், மனம் என்ற நான்கும் சேர்ந்து இயங்கும் போது ஏற்படக் கூடிய இரசாயன இயக்கம், மின்சார இயக்கம், காந்த இயக்கம் இவற்றைக் கடந்து இப்பிரபஞ்சம் முழுவதும் நடைபெறக் கூடிய இயக்கங்கள் வேறெதுவும் இல்லை.
இந்த உடலில் நடைபெறாத இரகசியத்தை இதுவரை எந்த விஞ்ஞானமும் கண்டுபிடிக்கவில்லை. கண்டுபிடிக்கவும் இயலாது.
அத்தகையமுறையில் பரிணாமத்தின் உச்சமாக உள்ள மனித உடலின் அற்புதமான அமைப்பையும், இயக்கத்தையும் அகத்தவச் சாதனையால் அறிந்தவர்கள் சித்தர்கள். “இந்த உடலிலுள்ள அணுக்கள், பேரணுக்கள், செல்கள், இவைகள் எவ்வாறு அடுக்கப்பட்டும், சேர்த்துப் பிடித்துக் கொள்ளப்பட்டும் இருக்கின்றன” என்பதையெல்லாம் உணர்ந்தவர்கள் சித்தர்கள்.
அப்படிச் செல்களாலான கட்டிடமாகிய உடலின் கட்டுமானத்திற்கும், கட்டுக்கோப்புக்கும், உறுதிக்கும், நீடிப்புக்கும் வேண்டிய காந்த சக்தியை எவ்வாறு பெற்று, எவ்வாறு அதை மின்சக்தியாக மாற்றி, ஆங்காங்கே பல இரசாயணங்களைத் தோற்றுவித்து இயக்க நியதியோடு உடல் என்ற அற்புதமான நிலையம் இயங்குகின்றது என்பதையெல்லாம் உணர்ந்தவர்கள் சித்தர்கள்.
“மனித உடலின் இயக்கங்களையெல்லாம் உணர்ந்து கொள்வதோடு, பிற உயிரில் ஏற்படும் இன்ப துன்பங்களையும் பிற பொருட்களின் இயக்கங்களையும் கூட அறிவு எவ்வாறு உள்நுழைந்து அறிந்து வருகிறது” என்றும் சிந்தித்துப் பார்த்தார்கள்
ஒவ்வொரு பொருளிலிருந்தும் வருகின்ற அலைகள் மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், இரண்டினிடையே முன்பின்னாக ஓடுதல் என்ற ஐந்து தன்மைகளைப் பெறுகின்றன என்பதைச் சித்தர்கள் உணர்ந்தார்கள்.
இந்த அலைகள் பஞ்சபூதங்களாலான பருப்பொருட்களில் மோதும்போது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் அத்துடன் மனித உடலிலே புலன் கடந்த நிலையில் மனமாகவும் மலர்ச்சி பெறுகின்றன என்பதையும் தங்கள் தவ வலிமையால் உணர்ந்து கொண்டார்கள்.
அந்த விரிந்த மனநிலையிலே பிரபஞ்ச உற்பத்தி இரகசியங்கள் எல்லாம் அவர்கள் உள்ளத்திலே நிறைந்திருக்கும்.
எல்லா வினாக்களுக்குமான விடைகளும் அவரவர்களுக்குள்ளாகவே இருக்கின்றன. எனவே அங்கிருந்தே தங்கள் உள் நோக்கால் எடுத்துக் கொண்டார்கள். சித்தர்களுக்குத் தனியாக ஆராய்ச்சி சாலை எதுவும் தேவையில்லை.
ஆராய்ச்சி சாலை என்று வைத்தால் ஏதாவது ஒரு பொருளைப் பற்றித்தான் ஆராய இடமிருக்கிறது. இந்த உடலையே எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா இரகசியங்களையும் பற்றி ஆராய முடியும்.
அந்த முறையில் உடல் விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் சித்தர்கள். நீங்களும் முயன்றால் ஒரு சித்தராகச் சிறப்புறலாம். அத்தகைய ஆற்றல் மனிதனாகப் பிறந்த எல்லாரிடத்திலுமே அடங்கியுள்ளது.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
எளியமுறை,உடற்பயிற்சி,காயகல்பபயிற்சி,குண்டலினியோகம்,அகத்தாய்வுபயிற்சி,பிரம்மஞானம்,குருவணக்கம்,இறைவணக்கம்,பஞ்சபூததவம்,நவக்கிரகதவம்,பஞ்சேந்திரியதவம்,கைப்பயிற்சி,கால்பயிற்சி,மூச்சுமற்றும்தசையநார்பயிற்சி,நரம்பூக்கம்,அஸ்வினிமுத்திரை,மூலபந்தம்,மகராசனம்,கண்பயிற்சி,கபாலபதி,அக்குபிரஷர்,உடல்தளர்வு,மௌனம்,தொடர்மௌனம்,எண்ணம்ஆராய்தல்,கவலைஒழித்தல்,சினந்தவிர்த்தல்,ஆசைசீரமைத்தல்,அறுகுறுசீரமைப்பு,வாழ்த்தும்பயனும்,வாழகவைகம்,வாழகவளமுடன்,மனவளக்கலை மன்றம்,அறிவுத்திருக்கோவில்,ஆன்மிக உள்ளுணர்வு கல்வி மையம்,அறக்கட்டளை
#வேதாத்திரிமகரிஷி #எளியமுறை #உடற்பயிற்சி #காயகல்பபயிற்சி #குண்டலினியோகம் #அகத்தாய்வுபயிற்சி #பிரம்மஞானம் #ஞானஆசிரியர் #குருவணக்கம் #இறைவணக்கம் #பஞ்சபூததவம் #நவக்கிரகதவம் #பஞ்சேந்திரியதவம் #கைப்பயிற்சி #கால்பயிற்சி #மூச்சுமற்றும்தசையநார்பயிற்சி #நரம்பூக்கம் #அஸ்வினிமுத்திரை #மூலபந்தம் #மகராசனம் #கண்பயிற்சி #கால்பயிற்சி #கபாலபதி #அக்குபிரஷர் #உடல்தளர்வு #மௌனம் #தொடர்மௌனம் #எண்ணம்ஆராய்தல் #கவலைஒழித்தல் #சினந்தவிர்த்தல் #ஆசைசீரமைத்தல் #அறுகுறுசீரமைப்பு #வாழ்த்தும்பயனும் #வாழகவைகம் #வாழகவளமுடன்  
#SIMPLIFIEDYOGA
#skyvethathiri 
#tamilspiritual 
#tamilmotivation 
#tamilmotivational 
#tamilmotivationalspeech 
#vethathirikundaliniyoga 
#vethathirimaharishispeech 
#vethathiriya 
#vethathiriyachannel 
#கால்பயிற்சி 
#skyyogaaliyar 
#manavalakalai 
#mandram 
#vazhgavalamudan 
#vazhgavaiyagam 
#tamilyoga 
#tamilyogi 
#அக்குபிரஷர் 
#தொடர்மௌனம் மிழ், வேதாத்திரி மஹரிஷி,, வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்,குரு வாழ்க,குருவே துணை,இந்த நாள்,இனிய நாளாக அமையட்டும்,அருட்தந்தை,வேதாத்திரி,மகரிஷி,இனிய காலை வணக்கம்.,வாழ்க வளமுடன்!,வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள்,தினம் ஒருசிந்தனை,எல்லோரும் நல்லவரே,இதுவும் கடந்து போகும்., அறிவுத்திருகோயில்,மனவளக்கலை,ஆன்மீகச் சிந்தனை,ஆன்மீகச்கல்வி,வேதாத்திரியம்
                         
                    
Информация по комментариям в разработке