பெண் டாக்டர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு kolkata woman doctor case | CJI on CBI report

Описание к видео பெண் டாக்டர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு kolkata woman doctor case | CJI on CBI report

#Partnership கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

கொல்கத்தா போலீஸ் விசாரித்த இந்த வழக்கு பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

கொடூர காரியத்தை செய்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டான்.

வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுத்தியது, தடயங்களை அழிக்க முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சந்தீப் கோஷ், தலா போலீஸ் ஸ்டேஷ் அதிகாரி அபிஜித் மோண்டல் சில நாட்களுக்கு முன்பு கைதாகினர்.

இன்னொரு பக்கம் பெண் டாக்டர் சம்பவம் பற்றி சுப்ரீம் கோர்ட் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மேற்கு வங்க அரசு சார்பில் மூத்த நீதிபதி கபில் சிபல் ஆஜரானார். சிபிஐ அதிகாரிகள், டாக்டர் சங்க நிர்வாகிகளும் ஆஜர் ஆகினர்.

பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் டாக்டர்களுக்கு இரவு பணி ஒதுக்க வேண்டாம் என்று சமீபத்தில் மேற்கு வங்க அரசு உத்தரவை போட்டது.

அந்த உத்தரவை கடுமையாக சாடிய தலைமை நீதிபதி, மேற்கு வங்க அரசை வெளுத்து வாங்கினார்.

'பெண்கள் இரவில் பணி செய்ய கூடாது என்று எப்படி கட்டுப்பாடு விதிக்க முடியும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டு விட்டு அவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதை எப்படி ஏற்க முடியும்?' என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

பின்னர் சிபலுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.

'சிபல், மேற்கு வங்க அரசிடம் பேசி இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மேற்கு வங்க அரசின் உத்தரவை திருத்த வேண்டும். இரவில் பெண்கள் வேலை செய்வதை தடுக்க முடியாது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தான் அரசின் கடமை. பைலட், ராணுவ வீரர்கள் மற்றும் பலர் இரவு நேரத்தில் வேலை செய்கிறார்கள்' என்று நீதிபதி கூறினார்.

முன்னதாக, இதுவரை விசாரணையில் என்னென்ன நடந்து இருக்கிறது என்பது பற்றிய அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது.

விசாரணை அறிக்கையை படித்த நீதிபதிகள் நடந்த சம்பவம் மோசமானது என்றும் மிகவும் கவலை அளிக்கிறது என்றும் மீண்டும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

பெண் டாக்டர் பெயரை விக்கிப்பீடியோ பயன்படுத்தி இருப்பது பற்றியும், அவரது சிகை அலங்காரத்தை வைத்து கிராபிக் போட்டோ சுற்றி வருவதை பற்றியும் சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கவலை தெரிவித்தார்.

உடனே பெண் டாக்டர் பெயரை நீக்க வேண்டும் என்று விக்கிப்பீடியோவுக்கு நீதிபதிகள் உத்தரவு போட்டனர்.

அதே போல் சிபிஐ விசாரணை சம்மந்தப்பட்ட ஆவணங்களை வெளிவருவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 'விசாரணையில் இருக்கும் தடயங்கள், ஆதாரங்கள் வெளியில் வருவது நியாயமானது அல்ல. இப்போது ஆதாரங்களை வெளியிடுவது விசாரணையை பாதிக்கும்' என்றும் அறிவுறுத்தினர்.

போஸ்ட்மார்ட்டத்துக்கான நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகத்தினர், கொல்கத்தா போலீசார் சட்டப்பூர்வமாக எடுத்தனரா? சம்பவ இடத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட விஷயங்கள் பற்றி சிபிஐ ஆய்வு செய்து வருகிறது.# #SupremeCourt
#KolkataDoctorCase
#CJI
#CBIReport
#JusticeForDoctors

Комментарии

Информация по комментариям в разработке