Chennai - 5 Jeeva Samadhis at one place || சென்னையில் ஐந்து ஜீவ சமாதிகள் || Ponnambala Swamigal

Описание к видео Chennai - 5 Jeeva Samadhis at one place || சென்னையில் ஐந்து ஜீவ சமாதிகள் || Ponnambala Swamigal

#jeevasamathi #jeevasamadhi #siddhargal #sahanathan

Address: P43H+HH7, Sembakkam, Vembedu, Kattur, Tamil Nadu 603108
Map: https://maps.app.goo.gl/timLKv3giUrXN...
தொடர்புக்கு :
திரு. சி.பொன்னம்பலம் - 9840224400
திரு. சி. விவேகானந்தன், 9094498845

தி௫மடாலயம் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 08.00 மணி முதல் பிற்பகல் 01.00 வரை.
மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை. நன்றி.

தீராத நோய்களையும் விபூதியால் தீர்த்த

'விபூதி வள்ளல்' ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின்
186ஆம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா
-------------------------
உற்றார் எனக்கில்லை உன்பதமே - மேவுகின்றேன்
நற்றணையாம் - பொன்னம்பல நாத - சற்குருவே
நின்னடியை நாடுகின்ற நாயேனை காத்தருள்வாய்
துன்னுகின்ற துன்பத்தை தேய்த்து”
-------------------------
"யார் என்னிடம் பக்தி கொண்டு என் சமாதியில் சரணடைந்தாலும் அவர்களை நான் காப்பாற்ற தவறுவதில்லை" - சித்தபுருஷர் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள்.

இறக்கக் கிடந்தானை எழுப்பியதை அறிந்த ஊனமனம் கொண்ட ஈனர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பொன்னம்பல சுவாமிகளின் அருள் அனுபவத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாது, அவரின் மீது ஏதேனும் களங்கம் சுமத்த வேண்டி தன்னில் ஒருவனை இறந்தவனைப்போல மூச்சை அடக்க நடிக்க வைத்து, அவனை வேறொருவன் தோள் மீது சுமந்து வந்து பொன்னம்பல சுவாமிகளின் வீட்டில் கிடத்தி காப்பாற்றும்படி கதறி அழுது பாசாங்கு செய்தனர். அவர்கள் மீது மனமிறங்கி ஆறுதல் சொல்வதைப்போல் சுவாமிகள் திருநீற்றை அள்ளி எடுத்து இறந்தவனைப்போல் பாசாங்கு செய்யும் தீயவன் மீது தூவி இவனுக்கு இனி வரும்காலம் இறந்தகாலம், இவன் இனி பிரயோசனம் அற்றவன் இறந்துவிட்டான் என்று கூறினார்.

தீடீரென்று அழுவதுபோல பாசாங்கு செய்தவர்கள் ஆணவம் தலைக்கேறி சிரித்துக் கொண்டே அவனை எழுப்ப முயற்சி செய்தனர். அவன் கண்விழித்த பாடில்லை; அதில் ஒருவன் நாடி பிடித்துப் பார்த்தான்; வேறொருவன் இதயத்தின் மீது தன் காதை வைத்து இதயத்துடிப்பை அறிய முற்பட்டான்.


ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் திருமடாலயம்
திருப்போரூர் - செங்கல்பட்டு நெடுஞ்சாலை

அமைவிடம் : சென்னையிலிருந்து செம்பாக்கம் 55 கி.மீ. தூரத்திலும் மாமல்லபுரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் பொன்னம்பல சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது.

செம்பாக்கம் கிராமத்தில் வாழ்ந்த ஸ்ரீமத் மகான் பொன்னம்பல சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. சுவாமிகள் வைத்தியத்தால் தீராத நானாவித வியாதிகளுக்கும் ஒரே மருந்தாக எல்லோருக்குமவிபூதியைக் கொடுத்தும் நோய்வாய்பபட்டவர்களின் உடலில் பூசியும் உள்ளுக்குள் சாப்பிட்ட சில தினங்களிலே நோய் நீங்குவதால் இவரை காண செம்பாக்கம் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களும் இவரிடம் வர தொடங்கினர். சுவாமிகளிடம் வந்தால் தீராத நோய்ளும் தீரும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாகவே இருந்து வந்துள்ளது. தண்ணீரில் விளக்கெரித்தும் பல அற்புதங்களை நிகழ்த்தி சிவலிங்க திருமேனியாய் எழுந்தருளியிருக்கும் சித்த புருஷர் ஸ்ரீமத் மகான் பொன்னம்பல சுவாமிக்கு 'விபூதி வள்ளல்' என்ற மற்றொரு பெயரும் சுவாமிகளுக்கு உண்டு.

சுவாமிகள் வேத பாடங்களும், வேதாந்த பாடங்களும் பல கற்று சிறுவயதிலேயே ஆன்மீக பணியில் தன்னை அற்பணித்து கொண்டு வாழ்ந்து வந்தார். காணவரும் பக்தர்களுக்கு சுவாமிகள் சிவவழிபாட்டையும் ஆன்மீக சிந்தனையும் நீதியையும் தருமத்தையும் போதித்தார். சுவாமிகளின் பார்வையில் பறவைகளும், தாவரங்களும், மரங்களும், விலங்குகளும் மனிதர்களும் ஒன்றுதான். உயிர்களிடத்தில் இவர் வைத்த நேசம் ஒப்பற்றது. தாம் எந்த மாதிரி உணவு உண்பாரோ அதே உணவை தன்னிடம் வரும் பக்தர்களுக்கு பரிமாற வேண்டும் என்பார். சுவாமிகள் எத்தகைய மக்களின் பிணி தீர்க்கும் சித்தராக 186 ஆண்டுகள் இறை தொண்டாற்றி வந்தார்.

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் திருஅவதாரம்:

காஞ்சிபுரம் மாவட்டம், தற்போதைய திருப்போரூர் வட்டம், செம்பாக்கம் எனும் கிராமத்தில் திருச்சீற்றம்பல முதலியார் - சொக்கம்மாள் ஆகிய இருவரும் இல்லறத்தில் நல்லறம் புரிந்து வாழ்ந்து வந்தனர்.

திருச்சிற்றம்பல முதலியார் வேளாண்மையோடு நெசவுத் தொழில் மேற்கொண்டு நித்யதவ ஒழுக்கத்தோடு சிவசிந்தனையுடன் வாழ்க்கை நடத்திவரும் காலத்தில் திருமணமாகி பல வருடங்கள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவருத்தத்துடன் இருந்தனர்.

தம்பதிகள் இருவரும் எல்லாம் வல்ல அழகாம்பிகை உடனமர் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலை வலம் வந்து ப்ரார்த்தனை செய்து வணங்கி வரும் காலத்தில், திருப்போரூர் திருகிருத்திகை தினத்தையட்டி பல்வேறு பகுதியில் இருந்து சந்நியாசிகளும், சித்தர்களும் பாதயாத்திரையாக நடந்து வந்து செம்பாக்கத்தில் வீடுதோறும் 'பவதி பிச்சாந்தேகி' என்று பிச்சை எடுத்து உண்டு திண்ணையில் படுத்துறங்கி செல்வது வழக்கம். அதுபோல ஒரு மாத கிருத்திகை தினத்தன்று ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் வலம் வந்து வணங்கிவரும்போது ஒரு அதி தீவிர சிவசந்தியாசி ஒருவர் கோயிலில் அமர்ந்து தியானத்தில் இருந்தார்.

அவரைப் பார்த்த சிற்றம்பல முதலியாருக்கு மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உண்டானது. அவர் தியானத்தில் இருந்து விழித்ததும் அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு படைத்து அருள்பெற வேண்டும் என நினைத்து காத்திருந்தார்.

தியானத்தில் இருந்து விழித்த சந்நியாசியிடம் சாஷ்டாங்காக நமஸ்கரித்து தாங்கள் உணவு உண்ணவில்லை என நினைக்கிறேன். தாங்கள் என் வீட்டிற்கு எழுந்தருளினால் உணவு படைத்து தங்களின் பசியாற்றிய பெரும் சிவபுண்ணியம் செய்த பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் என வேண்டினார். அதற்கு அந்த சன்னியாசி அப்பா நான் தினம் உணவு அருந்தும் பழக்கம் அற்றவன். வாரத்தில் ஒருநாள் ஒருவேளை உணவு மட்டுமே அருந்துவேன். அதுவும் மற்றவர்கள் சமைத்து கொடுத்த உணவை உண்பது வழக்கமல்ல. நானே சமைத்து உண்பதுதான் என் வழக்கம். ஆகையால் உனக்கு சிவ புண்ணிய பலனை அளிப்பது என்னால் முடியாது என்று கூறி எழுந்து புறப்பட, சிற்றம்பல முதலியார் காந்தத்திடம் ஈர்த்த ஈரும்பை போல மனம் அவரின் பின் தொடர்ந்தது.

Комментарии

Информация по комментариям в разработке