நாகர்கோயில் நாகராஜா திருக்கோவில் | Nagercoil Nagaraja Swami Temple History and Vlog

Описание к видео நாகர்கோயில் நாகராஜா திருக்கோவில் | Nagercoil Nagaraja Swami Temple History and Vlog

நாகர்கோயில் நாகராஜா திருக்கோவில் | Nagercoil Nagaraja Swami Temple History and Vlog

#Nagercoil
#Nagarajakovil
#அருள்மிகுநாகராஜாதிருக்கோயில்
நாகதோஷம் நீங்கும் குடும்பம் நலமாக இருக்க வேண்டி வழிபடுதல். மகப்பேறு வேண்டியும், பிரசவம் இடையூறு இன்றி நடைபெற வேண்டியும் வழிபடுகின்றனர். கேது திசை நடப்பவர்கள் புற்று வழிபாடு செய்து நோய் வராமல் தடுக்க வேண்டுவார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் அத்தோஷம் நீங்கப் புற்று வழிபாடு செய்வார்கள். தொழு நோய் நீங்கவும் புற்று வழிபாடு செய்யப்படுகிறது. குழந்தைகள் தோஷங்கள் காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் நலமுடன் வாழவும் புற்று வழிபாடு நடைபெறுகிறது. சருமவியதிகள் தீரும் பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது. ஆவணி மாத ஞாயிறு நாக வழிபாட்டுக்கு மிகவும் சிறப்பானது. ஆவணி ஞாயிறு விரதமிருந்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டால் நாகதோஷம் நீங்கும், சருமவியாதிகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


For more video,
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Join Lavan's kitchen and craft.
& support us:
Facebook:   / lavanskitchencrafts  
Youtube:    / lavanskitchencrafts  
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறைவன் - அனந்தகிருஷ்ணன்
மூலவர் : நாகராஜர்
தல விருட்சம் : ஓடவள்ளி கொடி

தீர்த்தம் : நாகதீர்த்தம்
ஆகமம்/பூஜை : சைவம், வைணவம், தாந்திரீகம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
திருவிழா: தை மாதத்தில் பிரம்மோற்ஸவம், ஆவணி ஞாயிறு, ஆவணி ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விசேஷ பூஜை, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை.

ஓலைக்கூரை சன்னதி: மூலஸ்தானத்தில் நாகராஜர், ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். சிவன் கோயில்களில் சண்டி,
முண்டி என்பவர்களும், பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் என்பவர்களும் துவாரபாலகர்களாக இருப்பர். ஆனால், இக்கோயிலில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்னும் பெண் நாகமும் துவாரபாலகர்களாக உள்ளன. நாகராஜாவிற்காக அமைந்த தலம் என்பதால், நாகங்களையே துவாரபாலர்களாக அமைத்துள்ளனர். நாகராஜர் சன்னதி எதிரிலுள்ள தூணில், நாககன்னி சிற்ப வடிவில் இருக்கிறாள். தற்போதும் இங்கு நாகங்கள் வசிப்பதாகவும், இவையே இக்கோயிலைப் பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள்.

நாகங்கள் வசிப்பதற்கேற்ப மூலஸ்தானத்தை ஓலைக்கூரையால் வேய்ந்துள்ளனர். ஆடி மாதத்தில் இதைப் பிரித்து,
புதிய கூரை வேய்கின்றனர். நாகராஜருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களே கூரை கட்டும் பணியைச் செய்கின்றனர்.
தோஷ நிவர்த்தி:
மனிதர்களுக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தை பிறப்பதில் தடை ஏற்படுகிறது. எனவேதான் ஜோதிடர்கள் நாகதோஷம் நீங்க பரிகாரம் கூறுவார்கள். நாகதோஷம் சருமவியாதியைத் தருகிறது. நாகரை நினைத்து வழிபட்டால் சருமவியாதி தீரும் என்பது நம்பிக்கை

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷன், அவர் ராமனாக அவதாரம்
எடுத்தபோது தம்பி லட்சுமணராக பிறந்தார். எனவே, லட்சுமணரின் நட்சத்திரமான ஆயில்யத்தன்று நாகராஜாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் நாகராஜாவிற்கு பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
இதுதவிர, தினமும் காலை 10 மணிக்கு பாலபிஷேகம் நடக்கும். நாகராஜரிடம் வேண்டி கோரிக்கை நிறைவேறியவர்கள் பால்
பாயாசம் படைத்தும் வழிபடுகிறார்கள். கோயில் வளாகத்திலுள்ள அரச மரத்தடியில் நாகர் சிலைகளை வைத்தும் நேர்த்திக்கடன்
செலுத்துவதுண்டு.

நிறம் மாறும் மணல்: மூலஸ்தானத்தில் நாகராஜர் இருக்குமிடம் மணல் திட்டாக இருக்கிறது. வயல் இருந்த இடம் என்பதால், இவ்விடத்தில் நீர் ஊறிக் கொண்டிருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே பிரசாதமாகத் தருகிறார்கள். தட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி முதல் மார்கழி மாதம் வரை) இந்த மணல் கருப்பு நிறத்திலும், உத்தராயண புண்ணிய காலத்தில் (தை முதல் ஆனி வரை)
வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்பு.
கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இது இன்றும் காணக் கூடிய ஒரு அதிசய நிகழ்வாகும். இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மண் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.

சிறப்பம்சம் : இங்கு நாகராஜசுவாமிகள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள்.

Комментарии

Информация по комментариям в разработке