நந்தி தேவரை தரிசிக்கும் ரகசிய மந்திரம் அகத்தியர் பெருமான் அருளியது | நந்தி மந்திரம்

Описание к видео நந்தி தேவரை தரிசிக்கும் ரகசிய மந்திரம் அகத்தியர் பெருமான் அருளியது | நந்தி மந்திரம்

Nandi Manthiram in Tamil(நந்தி மந்திரம்)

அகத்தியர் பரிபூரணம் - பாடல் 111

பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு
பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக
ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்
இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து
மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி
மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு
தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்
சிவசிவா மனது பூரணமாய்நில்லே

அகத்தியர் பரிபூரணம் - பாடல் 112

நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா
நிச்பயமாய் லிங்கிலிசிம் மென்று ஓது
சொல்லந்த மான குரு நாதன்றானும்
சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு
நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டால்
நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு
சொல்லந்தச் சோதிதனைக் கண்டால் மைந்தா
தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.

Nandi Manthiram in Tamil(நந்தி மந்திரம்):

ஓம் லிங் கிலி சிம்

OM LING GHILI SIM

இந்த மந்திரத்தை ஜெபிக்கும் முறை என்ன ?

இதை எத்தனை முறை, எதனை நாட்களுக்கு ஜெபிக்க வேண்டும் என்று தனியாக குறிப்புக்கள் இந்த பாடல்களில் இல்லை, எனவே தினமும் சூரிய உதய நேரத்தில் நம் உடலை உடல் தூய்மை செய்து கொண்டு, திருநீறு அணிந்து கொண்டு, கிழக்கு முகமாக சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு, நம் உடலையும் மனதையும் நன்கு தளர்த்திய பின்னர், நம் கண்களை மூடி, நம் மனதை நம் புருவ மத்தியில் ஒருமைப் படுத்தி, தியான நிலையில் இருந்து கொண்டு நந்திதேவரை மனதார வேண்டி 108 முறை இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம், சூர்ய உதய வேளையில் ஜெபிக்க முடியாதவர்கள், ப்ரம்மமுகூர்த்திலோ, அந்தி சந்தி நேரத்திலோ (அதாவது மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM)) , கூட மனதார ஜெபித்து வழிபட்டால் நிச்சயம்நந்திதேவரின் அருளும் ஜோதி ரூப தரிசனமமும் கிட்டும்.

#aalayamselveer #siddhargal #siddhargalugam #manthiram #nandi #sithar #sithargal

Комментарии

Информация по комментариям в разработке