Part-4 - கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986

Описание к видео Part-4 - கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986

கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986
-----
இப்பகுதியில் இடம் பெறும் சில பாடல்கள்:
00:10
( https://kaumaram.com/vaguppu/vgp06.html )
பூத வேதாள வகுப்பு
அருண கணபண புயக சுடிகையின்
அகில புவனமும் உதவு மலைமகள் ...... 1
அமலை யாரியை யந்தரி சுந்தரி
யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி ...... 2
அச்சுதச கோதரிய னைத்துவே தத்தலைவி
யற்புதபு ராதனிவ ரப்ரகா சப்ரக்ருதி ...... 3
அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி
விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி ...... 4
அக்ஷர லக்ஷஜ பத்தர்க்ர மத்திடு
சக்ரத லத்தித்ரி யக்ஷிச டக்ஷரி ...... 5
ஆயிஇ திரு மைந்தன்முகம் ஆயிரம்வி ளங்கியதொர்
ஆறுதர வந்தருளும் ஆறுமுக புண்டரிகன் ...... 6

அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி
அபயமிட அஞ்சலென் றங்கீர னுக்குதவி ...... 7
அரசறிய வாமனமு நிக்கொருத மிழ்த்ரயமும்
அபரிமித மாகவிவ ரித்தகட வுட்புலவன் ...... 8
அநுபவ சித்த பவக்கட லிற்பு காதெனை
வினவியெ டுத்தருள் வைத்த கழற்க்ரு பாகரன் ...... 9
ஆசிலா சார தபோதன ரின்புறும்
வாசகா தீத மனோலய பஞ்சரன் ...... 10

அகரு ம்ருகமத களப பரிமள
விகட முகபட கடின புளகித ...... 11
அமிர்த பூதரி அண்டர்செ ழுங்கொடி
குமுத வாய்மயில் குஞ்சரி மஞ்சரி ...... 12
அக்கமொரு கோடிபெறு வஜ்ரபா ணிக்குமரி
தக்கஅம ராவதிபு ரக்கும்ஆ னைக்கிறைவன் ...... 13
ஐம்பத் தொன்றில்எட் டாறில் மூன்றினில்
ஐந்திற் றங்கும்அப் பாலை வான்பொருள் ...... 14
அப்படி பத்தி பழுத்த மனத்தினர்
அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப்புயன் ...... 15
ஆறுநிலை யென்றுமுத லாகிய பரங்கிரியும்
ஆவின னெடுங்குடியும் ஆரண முடிந்திடமும் ...... 16
அருணையும் இலஞ்சியுஞ் செந்தூர் திருப்பழநி
அடியர்மன பங்கயஞ் செங்கோடி டைக்கழியும் ...... 17
அநவரத நீலமலர் முத்தெறிசு னைப்புனலில்
அருவிகுதி பாய்தருசெ ருத்தணியென் வெற்புமெனும் ...... 18
அலகில் திருப்பதி யிற்பயில் கற்ப காடவி
அநுபவன் அத்தன்நி ருத்தன் அரத்த ஆடையன் ...... 19
ஆறுமா மாதர் பயோதர பந்தியில்
ஆரவே பாலமு தாருநெ டுந்தகை ...... 20

வருண சரவண மடுவில் வருமொரு
மதலை மறைகமழ் குதலை மொழியினன் ...... 21
மதுக ராரவ மந்திர சிந்துர
மணம றாத கடம்பு புனைந்தவன் ...... 22
மட்டொழுகு சாரமது ரித்ததே னைப்பருக
மர்க்கடச மூகமமை தொட்டிறா லெட்டுவரை ...... 23
மன்றற் பைம்புனத் தாள்ப தாம்புயம்
வந்திக் குந்தனிக் காம வாஞ்சையன் ...... 24
மத்தமு டித்தருள் அத்தர்ப்ரி யப்பட
நித்தம றைப்பொரு ளைத்தெளி வித்தவன் ...... 25
மாதிரமு மந்தரமு நீருநில னுங்கனக
மால்வரையு டன்சுழல வாசுகிவி டம்பொழிய ...... 26
மகரசலி லங்கடைந் திந்த்ராதி யர்க்கமுது
பகிர்தரு முகுந்தன்மன் பஞ்சாயு தக்கடவுள் ...... 27
மருகன்மற வாதவர்நி னைப்பவைமு டிக்குமவன்
உருகுமடி யாரிருவி னைத்தொகைய றுக்குமவன் ...... 28
மறவர்பொ ருப்பில் ஒருத்திபொ ருட்ட நாளிள
வடிவமு ழுக்க நரைத்தவி ருத்த வேதியன் ...... 29
மாதரா ரூபன் நிராகுல சிந்தையன்
ஆதிகூ தாள மதாணிய லங்க்ருதன் ...... 30

வரத விதரண விரத அநுபவ
மவுன குருபரன் நிபுண குணதரன் ...... 31
வனஜ ஜாதனை யன்றுமு னிந்தற
வலிய பாரவி லங்கிடு புங்கவன் ...... 32
மட்டிலிரு நாலுதிசை கட்டுநெ மிக்கிரியும்
உத்தரகு ணாதிகுட தக்ஷிணா திக்கிரியும் ...... 33
மங்கத் துங்கவிட் டேறு வாங்கிய
செங்கைப் பங்கயச் சோதி காங்கேயன் ...... 34
மத்தம லத்ரய மித்தைத விர்த்தருள்
சுத்தப வித்ரநி வர்த்திய ளிப்பவன் ...... 35
வாரணமு கன்தனது தாதையைவ லஞ்சுழல
வாகைமயில் கொண்டுலகு சூழ்நொடிவ ருங்குமரன் ...... 36
மயமுறு ப்ரபஞ்சமுஞ் சங்கேத ஷட்சமய
வழியுமன முங்கடந் தெங்கேனு நிற்குமவன் ...... 37
மதுரமொழி யால்உலக னைத்தையும் உணர்த்துமவன்
வடஅனல நேர்கொடிய குக்குடம் உயர்த்தகுகன் ...... 38
மரகத பக்ஷ குலத்துர கத்தி வாகரர்
வடிவையு ருக்கி வடித்த திருக்கை வேல்கொடு ...... 39
வாரிகோ கோஎன வாய்விட வந்தெதிர்
சூரமா சேனையை மோதுக ளந்தனில் ...... 40

(சூர சம்மார போர்க் களத்தில் பூத வேதாள வர்ணணை)

உருவம் இருளெழ எயிறு நிலவெழ
உலகு வெருவர அசைய வருவன ...... 41
உடைய நாயகி கண்டும கிழ்ந்திட
நடைவி நோதவி தம்புரி பந்திய ...... 42
ஒக்கலைவி டாதழுத ரற்றுபா லர்க்குமிக
உச்சிவெடி யாதுநிண மெத்தவே தப்புவன ...... 43
உங்குக் கிங்குவிட் டாழி நான்கினும்
ஒன்றுக் கொன்றடி பாய்தல் காண்பன ...... 44
யுத்தக ளத்தினில் ரத்நம ணிக்குவை
ஒட்டமொ டொற்றைஇ ரட்டைபி டிப்பன ...... 45
யோகினிக ளும்பெரிய சாகினிக ளும்புதிய
மோகினிக ளும்பழைய டாகினிக ளும்புகழ ...... 46
உவணநிரை கொண்டிடுஞ் செங்காவ ணத்திடையில்
உறவுகொள வந்துதம் பெண்காறை கட்டுவன ...... 47
உமிழ்குருதி யாறடைப டக்குறட டுக்கியதில்
உபவனமொர் ஏழையுமு றித்தருகொ ழுக்குவன ...... 48
உடுபட லத்தை மறைத்த குறைக்கு வாலுடல்
உதிரச முத்திர முற்று நிலைப்ப டாதன ...... 49
ஓடைமால் வாரண யூகம் அடங்கலும்
ஓரொர்பேய் நீள்கடை வாயி லடங்குவ ...... 50

.... for remaining lines - please see: https://kaumaram.com/vaguppu/vgp06.html
-----

Комментарии

Информация по комментариям в разработке