ஸ்ரீ வள்ளி முருகன் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி

Описание к видео ஸ்ரீ வள்ளி முருகன் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி

கோவை அடுத்த வெள்ளைகிணறு ஸ்ரீ வள்ளி முருகன் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி ஆதி அறக்கட்டளை திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஆடினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருமதி, கீதாலட்சுமி, விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் விஸ்வநாதன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஸ்ரீ வள்ளி முருகன் கலை குழுவினரை பாராட்டி ஏஐடியுசி செயலாளர் சிவசாமி வாழ்த்துரை வழங்கினர்.இது குறித்து சிவசாமி கூறும்போது, "வள்ளி கும்மி நமது கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த கலை கொங்கு மண்டல மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக இந்த கலை அழிவின் விளிம்பில் இருந்தது. தற்போது இதை மீட்டெடுத்து வருகிறோம். ஆசிரியர்கள் பழனிசாமி மற்றும் ரங்கநாதன் ஆகியோர் பயிற்சி கொடுத்தார்கள். 500க்கும் மேற்பட்டோர பயிற்சி எடுத்துள்ளனர், என்றும் கூறினார்.

Комментарии

Информация по комментариям в разработке