கோடநாடு வழக்கு திமுக தாமதம் செய்வது ஏன்?- சசிகலா

Описание к видео கோடநாடு வழக்கு திமுக தாமதம் செய்வது ஏன்?- சசிகலா

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலா தொண்டர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் இந்தியாவில் 3 வது பெரிய இயக்கமாக இருந்த அதிமுக ஒரு சில சுயநலவாதிகளால் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் அவர்களிடம் கற்று கொண்டேன்.

அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்து இருப்பது தவறானது. அதிமுக முடிந்துவிட்டது என நினைப்பவர்களுக்கு என்னுடைய என்டிரி ஆரம்பம் ஆகிவிட்டது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது.
திமுக மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது.புதிய பேருந்துகள் வாங்கமல் உள்ளதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கொடாநாடு வழக்கை தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுகிறார்கள். கொடாநாடு விசாரணையை ஏன் இவ்வளவு பொறுமையாக நடத்த வேண்டும்.திமுக அரசால் கொடாநாடு விசாரணைகூட வேகமாக நடத்த முடியவில்லை என என்றார்.
அதிமுக முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது.’’ என்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, ‘‘எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவும் நானும் பல இன்னல்களை சந்தித்து, மிகப்பெரிய இயக்கமாக அதிமுகவை கட்டமைத்தோம்.இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய இயக்கமாக உருவாக்கினோம். ஆனால் இன்று அதிமுக தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், ஒருசில சுயநலவாதிகள் கட்சியை இந்த அளவிற்கு எடுத்துச்சென்றுள்ளனர். இதை எல்லாவற்றையும் நான் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தேன். அதிமுக முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது. என் பின்னால் தொண்டர்களும், மக்களும் இருக்கிறார்கள். அதனால் 2026ல் அதிமுக ஆட்சியை தனிப்பெரும்பான்மையுடன் அமைப்போம்.
திமுக ஆட்சி நான்காவது ஆண்டு நடத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை பள்ளி மாணவர்களுக்கு மடி கணினி வழங்கவில்லை. இரவு 9:30 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் இதைக் கேட்காவிட்டாலும் நான் எதிர்க்கட்சி தான். நான் கேட்பேன். மடியில் கனமில்லா, வழியில் பயமில்லை. அதை கேட்கும் துணிச்சல் எனக்கு இருக்கிறது. கோடநாடு வழக்கு ஏன் ஆமை வேகத்தில் செல்கிறது. அதை ஏன் இந்த அரசால் வேகமாக விசாரிக்க முடியவில்லை. ஒரு பொறுப்புள்ள முதல்வர் ஏன் தேர்தல் வரும் போது மட்டும் கோடநாடு குறித்து பேசுகிறார். விசாரணை நடத்தி யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. இதற்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்ததற்கு திமுக தான் காரணம்.’’ என்று தெரிவித்தார்

Комментарии

Информация по комментариям в разработке