குல தெய்வ சாபம் | குலதெய்வ சாபம் நீங்க எளிய பரிகாரம் | Kula Deivam Pariharam | Kula Deivam Sabam

Описание к видео குல தெய்வ சாபம் | குலதெய்வ சாபம் நீங்க எளிய பரிகாரம் | Kula Deivam Pariharam | Kula Deivam Sabam

Kula Deivam Sabam(Kula Deivam Dosham) is one of the 13 sabams. Kula Deivam Pariharam explains the simple steps in overcoming the Kula Deivam Sabam

குலதெய்வ சாபம் நீங்க எளிய பரிகாரம் - குல தெய்வ சாபம் - குல தெய்வ தோஷம்

குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி? நான்கு எளிய வழிமுறைகள் | How to Find Kula Deivam in Tamil -    • குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி?  ...  

உங்கள் குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவைப்பது எப்படி? | 2 நிமிட பரிகாரம்! -    • உங்கள் குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவை...  

சாபங்களில் மொத்தம் 13 வகை உண்டு. அதில் மிகவும் கொடுமையான சாபம் என்றால் அது குலதெய்வ சாபம் என்றே கூற வேண்டும். இந்த குலதெய்வ சாபம் எதனால் ஏற்படுகிறது ? நமது ஜாதகத்தில் குலதெய்வத்தின் சாபம் இருக்கிறதா என்பதை கண்டறிவது எப்படி ? அதற்கு பரிகாரம் உண்டா ? .

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம். குலதெய்வமே எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். இப்படி பல அபூர்வ சக்திகளை கொண்ட குலதெய்வத்தின் சாபம் எதனால் ஏற்படுகிறது ?

ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா பாட்டி, தாய் தந்தையர் போன்றோர்கள் குலதெய்வத்திற்கு செய்யவேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குலதெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்டதெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வ கோயிலிற்கு செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும்.

குலதெய்வ சாபம் இருக்கிறதா என்பதை எப்படி அறிவது ?

1. ஜாதகத்தை வைத்து எப்படி அறிவது

ஒருவருடைய ஜாதகத்தில் குலதெய்வத்தை குறிக்கக்கூடிய கிரகமாக விளங்குகிறார் சனி பகவான். அதன் அடிப்படையில் ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் இருக்கின்ற வீட்டில் இருந்து 6ம் வீட்டில் புதன், சந்திரன், சூரியன் ஆகிய கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகருக்கு குலதெய்வ சாபம் இருக்கிறது என்பதை எளிதாக அறியலாம் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

2. குலதெய்வ சாபத்தால் நமக்கு ஏற்படும் விளைவுகள் வைத்து அறிவது:

குலதெய்வ சாபம் உள்ள ஒருவருக்கு எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், திருமணத்தில் தடை இருக்கும். சிலருக்கு குழந்தை பேரு இருக்காது. பிள்ளைகள் வழியில் தொல்லை, குடும்பத்தில் மகிழ்ச்சி இன்மை . இப்படி குலதெய்வ சாபத்தால் பல துன்பங்கள் வரும். இந்த துன்பமானது நமக்கு மட்டும் இல்லாமல் நமது சந்ததியினருக்கும் தொடரும். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தராது. நம்மோடு இந்த சாபம் முடிந்து நமது சந்ததியினருக்கு இது தொடராமல் இருக்க குலதெய்வ சாப நிவர்த்தி செய்வது அவசியம்.

குலதெய்வ சாபத்திற்கான பரிகாரம்:

நம்முடைய குலதெய்வம் யார் என்பதை அறிந்திருந்தால் குலதெய்வ சாப பரிகாரம் என்பது மிக எளிதாக இருக்கும். குலதெய்வம் பற்றி அறியாதவர்கள் முதலில் குலதெய்வத்தை அறிவது அவசியம். பின் நம் முன்னோர்கள் எப்படி குலதெய்வத்தை வழிபட்டார்களோ அதே போல நாமும் குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

ஒரு சிலருக்கு கிடாய் வெட்டி பொங்கல் வைக்கும் வழக்கம் இருக்கும். சிலர் வெறும் பொங்கல் வைத்து குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்வர். இப்படி நம் முன்னோர்கள் எந்த முறையில் குலதெய்வத்தை வணங்கினார்களோ அதே முறை படி நாம் வணங்கவேண்டும். நாம் இத்தனை நாள் செய்த தவறுக்காக குலதெய்வத்திடம் மன்றாடி வேண்டி நாம் கொடுக்கும் பூசையை ஏற்கும்படி கேட்கவேண்டும். இதனால் குலதெய்வம் மனம் மகிழ்ந்து நிச்சயம் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்.

குலதெய்வத்தை பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ பரிகார வழிபாடு ஆகும்.

சாப நிவர்த்தி பரிகாரம் செய்த பிறகு வருடதிற்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்க வேண்டும்.

#aalayamselveer #kuladeivam

Комментарии

Информация по комментариям в разработке