ஏர்போர்ட்டில் பரபரப்புச் சம்பவம்

Описание к видео ஏர்போர்ட்டில் பரபரப்புச் சம்பவம்

சென்னை சர்வதேச
விமான நிலையத்திலிருந்து
சார்ஜா செல்லும் இண்டிகோ
ஏர்லைன்ஸ் விமானம்
இன்று புறப்பட தயாரானது.
டிக்கெட் மற்றும்
ஆவணங்களை பரிசோதித்து
விமான நிலையத்தின் உள்பகுதிக்குள்
பயணிகளை மத்திய தொழில்
பாதுகாப்புப்படை
அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த
நவாஸ் ேஷக், சனா என்ற
புதுமணத் தம்பதியரும்
இடிக்கெட்டை காட்டி விட்டு
உள்ளே சென்றனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில்
சனா மட்டும் வெளியே வந்தார்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை
அதிகாரிகள் விசாரித்தபோது,
அவசர வேலை இருப்பதால்
நான் பயணத்தை ரத்து
செய்து விட்டேன்.
என் கணவர் மட்டுமே
சார்ஜா போகிறார் என சொன்னார்.

உள்ளே போகும்போது
கேட்டில் காட்டிவிட்டு சென்ற
இ டிக்கெட்டை சிஐஎஸ்எப்
வீரர்களிடம் காட்டினார்.
அந்த டிக்கெட்டில்
பயணத்தை ரத்து செய்ததற்கான
எந்த முத்திரையும் குத்தப்படவில்லை.
சந்தேகமடைந்த
சிஐஎஸ்எப் வீரர்கள்
இண்டிகோ ஏர்லைன்சில்
விசாரித்தபோது,
சனா என்ற பெயரே
பயணிகள் லிஸ்ட்டில் இல்லை
என்பது தெரிய வந்தது.

சனா வைத்திருந்தது போலி
டிக்கெட் என்பது உறுதியானதும்
ஏர்போர்ட் போலீசிடம்
சிஐஎஸ்எப் வீரர்கள் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில்
சனா உண்மைகளை கக்கினார்.
எங்களுக்கு
சில நாட்களுக்கு முன்தான்
திருமணம் நடந்தது.
உடனே கணவர் வேலைக்காக
வெளிநாடு புறப்பட நினைத்தார்.
அவரை பிரிய எனக்கு மனம்வரவில்லை.
வழியனுப்ப நானும் வந்தேன்.
சென்னை ஏர்போர்ட்டில்
பார்வையாளர்களுக்கு
அனுமதி இல்லை என்பது
எங்ளுக்கு முன்பே தெரியும்.
இன்னும் 2,3 வருஷத்துக்கு
பார்க்கவே முடியாது.
விமானம் புறப்படும் வரையாவது
கணவருடன் ஜாலியாக
பேசிக்கொண்டிருக்க நினைத்தேன்.
கணவரின் உண்மையான
டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்தோம்.
அந்த ஜெராக்ஸ் டிக்கெட்டில்
எனது பெயரை இணைத்து
போலி இ டிக்கெட் தயார் செய்தோம்;
அந்த போலி இ டிக்கெட்டை
காட்டித்தான் விமான நிலையத்திற்குள்
பார்வையாளர்களுக்கு
அனுமதி இல்லாத
சோதனை பகுதி வரைக்கும்
கணவருடன் சென்றேன்.
விமானத்தில் அவர் புறப்பட்டதும்,
அதே டிக்கெட்டை காட்டி
வெளியே வந்தபோதுதான்
மாட்டிக்கொண்டேன்.
கணவருடன் கடைசியாக
சிறிதுநேரம் பேச ஆசைப்பட்டு
போலி டிக்கெட்டை தயாரித்து விட்டேன்;
நான் செய்தது தவறுதான்.
மன்னித்து விடுங்கள் என்று
போலீசாரிடம் சனா கெஞ்சி மன்றாடினார்.
அழுதுப் பார்த்தார்.
சனாவிடம் போலீசார் தொடர்ந்து
விசாரித்து வருகின்றனர்.
போலி இடிக்கெட்டை
தயாரித்துக் கொடுத்த
பிரவுசிங் சென்டர் எது?
சனா மற்றும் கணவரின்
பின்னணி என்ன? என
போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.#FAKETICKET For more videos
Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg

Facebook:   / dinamalardaily  
Twitter:   / dinamalarweb  
Download in Google Play: https://rb.gy/ndt8pa

Комментарии

Информация по комментариям в разработке