பட்டுப்புழு வளர்ப்பு லாபம் பெறுவது எப்படி? | How is sericulture profitable?

Описание к видео பட்டுப்புழு வளர்ப்பு லாபம் பெறுவது எப்படி? | How is sericulture profitable?

பட்டுப்புழு வளர்ப்பு லாபம் பெறுவது எப்படி?

வளர்ப்பு முறை
பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் முழுவதிலும் மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் 5-10 முறை அறுவடை செய்யலாம். இதன் இடைவுளி 70-80 நாட்கள் ஆகும்.

வி-1 (V-1) ரகம்

இந்த ரகம் 1997ல் மைசூரில் உள்ள பட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது ஒரு பிரபலமான ரகம் ஆகும்.

இலைகள் நீள்வட்ட வடிவமாகவும், அகலமாகவும், அடர்பச்சையாகவும் சதைப்பற்றாகவும் இருக்கும்.

ஒரு ஏக்கருக்கு, ஒரு வருடத்தில் 20,000 - 24,000 கிலோ இலை உற்பத்தி கிடைக்கும்.

மல்பரி நடவு முறை

இணை வரிசை நடவு முறையைப் பின்பற்றினால், தற்பொழுது உள்ள முறையைவிட நல்ல பலன் கிடைக்கும். இம்முறையில் தற்பொழுது உள்ள 90 செ.மீ X 90 செ.மீ மற்றும் 60 செ.மீ X 60 செ.மீ என்ற இடைவெளியை காட்டிலும், (90 + 150) செ.மீ X 60 செ.மீ இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது.

இம்முறையில் இடைவெளி அதிகமாக இருப்பதால், விசைக்கருவி கொண்டு இடைஉழவு செய்வதற்கும், அறுவடை செய்த இலைகளை எடுத்துச் செல்வதற்கும், சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதற்கும் ஏற்றதாக இருக்கும்.

ஒரு ஏக்கரில் அதிகமான செடிகளை நடவு செய்யலாம்.

சுலபமாகவும், வேகமாகவும் இலைகளை எடுத்துச் செல்ல முடிவதால், ஈரப்பதம் குறைவதைத் தடுக்கமுடியும்

தண்டு அறுவடை செய்யப்படுவதால் 40% வேலையாட்கள் குறையும்.

Комментарии

Информация по комментариям в разработке