எளிய உவமைகள் மூலம் ஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய அறிவுரைகள்-7

Описание к видео எளிய உவமைகள் மூலம் ஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய அறிவுரைகள்-7

ஸ்ரீராமகிருஷ்ணர்-(வைத்தியநாத்திடம்)-
நீ பார்ப்பவை எல்லாம் இறைவனுடைய சக்தி. அவருடைய சக்தி இல்லாவிட்டால் யாராலும் எதையும் செய்ய முடியாது. ஆனால் ஒன்று. கடவுளின் சக்தி எல்லா இடங்களிலும் சமமாக வெளிப்படுவதில்லை. கடவுள் ஒரு சிலருக்கு அதிக சக்தியைக் கொடுத்திருக்கிறாரா? என்று வித்யாசாகர் என்னைக்கேட்டார். அதற்கு நான், அப்படி குறைவாகவும் அதிகமாகவும் சக்தியை க் கொடுக்காமலிருந்தால் உங்களைப் பார்ப்பதற்கு நாங்கள் ஏன் வர வேண்டும்? உங்களுக்கு என்ன இரண்டு கொம்புகளா முளைத்திருக்கின்றன.? என்று கேட்டேன். கடவுள் எங்கும் நிறைந்தவர் என்ற நிலையில் எல்லா உயிர்களிலும் இருக்கிறார், ஆனால் சக்தி வெளிப்படுவதில் வேறு பாடு இருக்கவே செய்கிறது.

வைத்தியநாத்-
சுவாமி, எனக்கு ஒரு சந்தேகம். மனித னுக்கு free will அதாவது சுயேச்சை இருப்பதாகச்சொல்கிறார்கள். மனம் வைத்தால் நல்ல காரியமும் செய்யலாம். கெட்ட காரியமும் செய்யலாம் என்பது உண்மை தானா? உண்மையாகவே நமக்கு சுதந்திரம் இருக்கிறதா?

ஸ்ரீராமகிருஷ்ணர்-
எல்லாம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. எல்லாம் அவரது திருவிளையாடல். சிறியது பெரியது, பலசாலி பலவீனன், நல்லது கெட்டது, நல்லர்கெட்டவர் என்று அனைத்தையும் படைத்தவர் அவரே. இது எல்லாமே அவருடைய மாயை. அவருடைய விளையாட்டு. பாருங்களேன், ஒரு தோட்டத்திலுள்ள எல்லா மரங்களும் கூட ஒன்றுபோல் இருப்பதில்லை.
இறையனு பூதி பெறாத வரையில் நமக்கு சுதந்திரம் இருப்பதாகத்தான் தோன்றும். இந்த மயக்கத்தையும் மனிதனிடம் இறைவனே வைத்திருக்கிறான். இல்லா விட்டால் பாவம் அதிகரித்து விடும். பாவத்தைப் பற்றியபயம் இல்லாமல் போய்விடும். பாவத்திற்கு த் தண்டனையும் இருக்காது.
ஆனால் இறையனுபூதி பெற்றவனின் மனநிலை என்ன தெரியுமா? நான் எந்திரம், நீ எந்திரத்தை இயக்குபவன், நான் வீடு, நீ வீட்டில் குடியிருப்பவன். நான்தேர், நீ தேரோட்டி, நீ எப்படி இயக்குகிறாயோ அப்படி நான் பேசுகிறேன்.
(வைத்தியநாத்திடம்)-
விவாதிப்பது நல்லதல்ல. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

வைத்தியநாத்—
ஆம், சுவாமி. ஞானம் உதித்தால் விவாதிப்பதற்கான விருப்பம் மறைந்துவிடும்.

ஸ்ரீராமகிருஷ்ணர்-
தேங்க்யூ. (எல்லோரும் சிரித்தனர்) உனக்கு அந்த ஞானம் உண்டாகும்.
கடவுளைப்பற்றி யாராவது சொன்னால் மக்கள் நம்புவதில்லை.நான் இறைவனைத் தரிசித்திருக்கிறேன்” என்று மகான் சொன்னால் கூட சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவர் உண்மையில் பகவானைத் தரிசித்தவராக இருந்தால் எங்களுக்கு காட்டட்டுமே! என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நாடி பிடித்துப் பார்ப்பதை ஒரே நாளில் கற்றுக் கொள்ள முடியுமா? வைத்தியருடன் பல நாள் அலைய வேண்டும். அப்போது தான் எது கப நாடி, எது வாயு நாடி, எது பித்த நாடி என்று தெரிந்து கொள்ள முடியும். நாடி பார்ப்பதைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து பழக வேண்டும். (எல்லோரும் சிரித்தனர்)
இது இன்ன நம்பர் நூல் என்று எல்லோராலும் சொல்லி விட முடியுமா? நூல் தொழில் செய். அவர்களில் கடையில் சில தங்கியிரு. அப்போது தான் எது நாற்பதாம் நம்பர் நூல், எது நாற்பத்தொன்றாம் நம்பர் என்று சட்டென்று பிரித்துச் சொல்ல முடியும்.
சங்கீர்த்தனம் தொடங்க இருந்தது. மிருதங்க நாதம் எழுந்தது. இன்னும் பாட்டு ஆரம்பமாகவில்லை. மிருதங்கத்தின் இனிய நாதம் சைதன்யரின் பக்தர் கூட்டத்தையும், அவர்களுடைய நாம சங்கீர்த்தனத்தையும் நினைவு படுத்திற்று. குருதேவர் பரவச நிலையில் ஆழ்ந்தார். இடையிடையே மிருதங்கம் வாசித்தவரின் பக்கம் பார்த்து, ஆகா,ஆகா, எனக்கு மெய் சிலிர்க்கிறது” என்று கூறினார்.


சங்கீர்த்தனம் நிறைவுற்றது. பாகவதம்- பக்தன்- பகவான் என்ற மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே குருதேவர் தரையில் வீழ்ந்து வணங்கினார். பின்னர் சுற்றிலும் அமர்ந்திருந்த பக்தர்களைப் பார்த்து வணங்கினார். இவ்வளவு நேரம் சங்கீர்த்தனம் நடைபெற்ற அந்த இடத்தின் தூசியை எடுத்துத் தமது தலையில் தரித்துக் கொண்டார்.
இரவு சுமார் ஒன்பதரை மணி. அன்னபூரணி தேவி பொலிவுடன் அங்கு வீற்றிருந்தாள்.தேவியின் முன்பு குருதேவர் பக்தர்களுடன் நின்று கொண்டிருந்தார். சுரேந்திரர், ராக்கால், கேதார், ம, ராம், மனமோகன், ஆகியவர்களும் மற்றும் பல பக்தர்களும் இருந்தனர். அனைவரும் குருதேவருடன் பிரசாதம் சாப்பிட்டனர். எல்லோருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் சுரேந்திரர் விருந்து அளித்தார்.

குருதேவர் தட்சிணேசுவரம் திரும்பலானார். பக்தர்களும் வீடு திரும்பத்தயாராயினர். எல்லோரும் பூஜையறையில் கூடினர்.

சுரேந்திரர்- (குருதேவரிடம்)-
இன்று தேவியைப் பற்றி ஒரு பாட்டு கூடபாடவில்லை.

ஸ்ரீராமகிருஷ்ணர்-(தேவியின் திருவுருவைக்காட்டி)-
ஆகா! இந்த இடம் எவ்வளவு அழகாக இருக்கிறது! தேவி இந்த இடம் முழுவதையும் பிரகாசப்படுத்திக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. இத்தகைய தரிசனம் எவ்வளவு ஆனந்தம்! சுகபோக நாட்டமும் சோகங்களும் எல்லாம் ஓடி விடுகின்றன.
அப்படியானால் அருவக் கடவுளைத் தரிசிக்க இயலாதா? அப்படியல்ல. ஆனால் உலகியல் எண்ணத்தின் நிழல் இருந்தால் கூட அ து முடியாது. ரிஷிகள் அனைத்தையும் துறந்து, அகண்ட சச்சிதானந்தத்தைத் தியானித்தனர்.
இப்போது பிரம்ம சமாஜத்தினர் இறைவனை அசையாத பொருளே! உணர்வுப்பொருளே! என்றெல்லாம் பாடுகிறார்கள்.ஆனால் எனக்குஅது வறண்டதாகப் படுகிறது. பாடுபவர்கள் அதன் இனிமையை அனுபவிக்கவில்லை. வெல்லப் பானகத்தில் திருப்தி அடைந்தவன் கற்கண்டுப் பானகத்தைத்தேட மாட்டான்.
நீங்களே பாருங்கள். இங்கே துறவி தரிசனத்தால் எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகிறது. ஆனால் ” அருவம்” அருவம் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எதையுமே பெறுவதில்லை. அவர்களுக்கு வெளியேயும் இல்லை, உள்ளேயும் இல்லை.

Комментарии

Информация по комментариям в разработке