பணிப்பெண்ணாக வந்த சிறுமிக்கு நடந்த சோக சம்பவம்! | Chennai Crime | Chennai Police | Investigation

Описание к видео பணிப்பெண்ணாக வந்த சிறுமிக்கு நடந்த சோக சம்பவம்! | Chennai Crime | Chennai Police | Investigation

#Partnership சென்னை அமைந்தகரையை சேர்ந்த தம்பதிகள் முகமது நிஷாத் வயது 36, நாசியா, 30

நிஷாத் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்தார்.

ஆறு வயதில் ஒரு மகன் உள்ளான்.

மகனை பார்த்துக்கொள்ள தஞ்சாவூரை சேர்ந்த 15 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தி இருந்தனர்.

அந்த சிறுமி குளிக்க சென்றபோது மயங்கி விழுந்து இறந்ததாக அமைந்தகரை போலீசில் இரு தினங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையில் நாசியா, நிஷாத், நிஷாத் நண்பர் லோகேஷ், அவரின் மனைவி ஜெயசக்தி.

மற்றொரு வேலைக்கார பெண் மகேஸ்வரி, நிஷாத் சகோதரி சீமா பேகம் ஆகியோர் சிறுமியை சித்ரவதை செய்து கொலை செய்தது தெரிய வந்தது.

கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவானது.

ஆறு பேரும் கோர்ட் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் பின்னணி பற்றி போலீசிடம் நாசியா அளித்துள்ள வாக்குமூலம்:

கோவை தென்னம்பாளையத்தில், எங்கள் உறவினர் வீட்டுக்கு சென்ற போது சிறுமியின் தாயை சந்தித்தோம்.

சிறுமிக்கு தந்தை இல்லை. ஒரு மகனுடன், அவரது தாயும் ஏழ்மை நிலையில் உள்ளார்.

அவரிடம் பேசி எங்கள் குழந்தையை கவனித்து கொள்ள சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்தோம்.

ஆனால் சிறுமியை அடிமை போல நடத்தினோம். போதிய சம்பளமும் தரவில்லை.

அவரது தாயை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. 4 மாதத்திற்கு முன்தான் சிறுமி பூப்பெய்தினார்.

அவர் சொந்த ஊருக்கு சென்றால் மீண்டும் வர மாட்டார் என்பதால் நாங்கள் அனுப்பவில்லை.

என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இதனால் எங்களுக்குள் தினமும் தகராறு வரும்.

என் கணவரின் பார்வை சிறுமியின் பக்கமும் திரும்பியது. அதில் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

ஏதாவது காரணத்தை சொல்லி சிறுமியை சித்ரவதை செய்ய துவங்கினேன்.

திருட்டு பட்டமும் கட்டி என் கணவருக்கு வெறுப்பு ஏற்பட செய்தேன்.

என் கணவரின் நண்பர் லோகேஷ். இவர் மீது கொலை மற்றும் ஆயுதம் வைத்திருந்த வழக்கு உள்ளது.#ChennaiCrime #ChennaiPolice #Investigation #dinamalar

Комментарии

Информация по комментариям в разработке