Devi manasa puja - Andavan Picchai Ammal

Описание к видео Devi manasa puja - Andavan Picchai Ammal

ஆண்டவன் பிச்சை என்ற அம்மையார் இயற்றிய தேவி மானஸ பூஜை

Sung by Smt Rajeswari Yegnanarayanan
த்யானம் - சங்கராபரணம்
கரும்பு வில்லேந்தி கணையாம் மலர் ஐந்தும் கையிலேந்தி
விரும்பியே இரு கரத்தில் பாசாங்குசத்தை ஏந்தி
அரும்பும் இளநகையும் அன்பு ததும்பும் மலர் விழிகளும்
என் இரும்பு மனம் தன்னை காந்தம் போல் ஈர்ந்ததம்மா
பதமலர் சிலொம்பொலிக்க பக்ஷமுடன் வந்து
அடியேன் இதய மலர் பீடம் தன்னில் இருந்தருள் செய்வாயே
உதய ரவி போன்ற உந்தன் உடல் ஒளியால் என்
மதம் எனும் இருள் அகற்றி மகிழ்ந்தென்னை காப்பாயே
ஆசனம்
சிரசெனும் ஸ்ரீபுரத்தில் சிந்தாமணி க்ரஹத்தில்
அரவிந்த மலர்கள் ஆயிரம் கொண்ட
ஸ்ரீசக்ரமெனும் சிம்மாசனத்தில் அரனுடன் அயிக்யமாய்
அமர்ந்தருள்வாய் தாயே
அர்க்யம் பாத்யம் ஆசமனீயம்
பாவன கங்கை நீரால் பாத்யம் அளித்தேன் அம்மா
தேவரும் விரும்பும் திவ்யமான அர்க்யம் அளித்தேன்
பூவது கொண்டு செய்த பன்னீரால் ஆசமனமும்
நீவந்து ஏற்றுக்கொண்டு என் எதிரில் நிற்பாயே
அபிஷேகம் - தர்பார்
உத்தமமான மந்திர ஜபம் செய்த கலச தீர்த்தம்
சப்த நதிகளின் தீர்த்தம் கங்காபிஷேகம் செய்தேன்
சித்தம் மகிழ பந்னீர் கலந்த சந்தனமும் உத்தமியே
உனக்கு அபிஷேகம் பண்ணிப் பணிந்தேன்
வஸ்த்ரம்
சுத்த வஸ்த்திரங்கள் கொண்டு பக்தியாகத்துடைத்து
புத்தம் புதிய செம்பட்டாடை கொண்டு வந்தேன்
சித்திரவேலை செய்த ரவிக்கை அணிந்து முத்து ரத்ன
பீடம் தன்னில் அம்ர்ந்தருள்வாய் அம்மா
ஆபரணம்
பத்தரை மாற்றுப் பொன்னால் பாக்யசூத்ரம் தரிப்பாய்
பச்சை மாணிக்க கற்கள் பவளம் நல் முத்து வைரம்
உசிதமான நீலம் உயர்வான கோமேதகம்
அணிமணிகள் கொண்டு வந்தேன் அணிந்தருள்வாய் அம்மா நீ
அலங்காரம் - சாமா
கஸ்தூரி திலகமோடு கருவிழிக்கேற்ற மையும்,
பஸ்ம சிந்தூரமிட்டு பரிமள கந்தம் பூசி
அஸ்தமும் பாத மலரும் அழகாக செம்பஞ்சூட்டி
அலங்காரம் பலவும் செய்தேன் அம்மா நீ ஏற்றருள்வாய்
மணமிகும் மலர்கள் கொண்டு மாலைகள் பல புனைந்து
இணக்கமாய் உன் கழுத்தில் சிரசினில் நிறைய சூட்டி
கணக்கிலா மலர்களால் உன் கருணைத்திருநாமம் கூறி
வணக்கமாய் உனக்கு அர்ச்சனை செய்தேன் தாயே
அர்ச்சனை
அரன் இடப்பாகம் அமர்ந்தாய் போற்றி
ஆருயிர் அனைத்தையும் படைத்தாய் போற்றி
இமவான் மகளாய் உதித்தாய் போற்றி
ஈரேழ் உலகம் காப்பாய் போற்றி
உயிருக்கு ஒளி ஊட்டும் உமையே போற்றி
ஊமைக்கருளிய உன்னருள் போற்றி
எந்தாய் கற்பகக் கொடியே போற்றி
ஏகாம்பரன் இல் அரசி போற்றி
ஐந்து மலர்க்கணை கரத்தாய் போற்றி
ஒன்றிய தவத்தால் உயர்ந்தாய் போற்றி
ஓராயிரம் பேர் உடையாய் போற்றி
கந்தனைத்தந்த சுந்தரி போற்றி
தூபதீபம் - பீம்ப்ளாஸ்
பாற்கடலில் பள்ளி கொள்ளும் பத்மனாபன் சோதரியே
பளிங்கு சாம்பிராணி தூபம் பரிவோடளித்தேன் தாயே
பத்மாசனத்தில் அமரும் பரிபூர்ண பேரொளியெ
பசுவின் நெய் தீபம் ஏற்றிப் பாடிப் பணிந்தேன் தாயே
நைவேத்யம்
வகை வகையாய் சித்திரான்னங்கள் இனிய தயிர் நெய் பால்
தேனும் பஞ்ச வித பக்ஷணங்கள் பால் பொங்கல் பாயசமும்
முப்பழம் திராக்ஷயோடு முதிர்ந்த பல கனிகளும்
ஒப்பில்லா சுவை மிகுந்த மணமிகும் பானங்களும்
துப்பிதழ்க்கேற்ற வண்ணம் வாசனை தாம்பூலங்களும்
இப்போது கொண்டு வந்தேன் ஏற்றுக்கொள்வாய் அம்மா
கற்பூரம் - கல்யாணி
ஆலம் கரைத்து வைத்து அலங்கார தீபம் ஏற்றி
கோலங்கள் இட்ட தட்டில் கற்பூரம் ஏற்றி வைத்து
சீலமுடன் உந்தனுக்கு சீராய் ஆரத்தி செய்தேன்
நீலகண்டன் மன மகிழ் நித்ய கல்யாணியே
உபசாரம்
ரதகஜ துரகமோடு ராஜோபசாரம் செய்தேன்
பதம் பணிந்து ஆடிப்பாடி பரிவோடு கவரி வீசி
சதகோடி பிரகாசமான உன் சரணத்தில்
இதயமலரால் உனக்கு அஞ்சலிகள் செய்தேன் தாயே
பிரதக்‌ஷிணம்
பலமுறை வலமாய் வந்து உன் பதமலர் பணிந்து போற்றி
உலகெல்லாம் நிறைந்த உன்னை உள்ளத்தில் பூஜை செய்து
சிலிசிலிர்த்து உள்ளம் பொங்கி சிந்தனை மலர்கள் தூவி
நலமுடன் உனைப் பணிந்தேன் நயந்தென்னைக் காப்பாயே!
மனத்தினால் வாக்கினாலோ மதியற்ற செய்கையாலோ
உனதருள் மறந்து நாயேன் செய்த பிழை பொறுத்து
என்னை ஏற்றுக் கொள்வாய் அம்மா

அம்மா எனதன் உன் அரும் சேய் கதறி அலறிடவும்
சும்மா இருந்திடும் தாயும் இங்குகுண்டோ
துதித்து உம்மயே எம்மால் இயன்ற அளவும் ஏற்றினோம்
இன்னும் இரங்கவில்லயோ
பெம்மான் சிவனிடம் பெண் போல்
அமர்ந்திடும் பெருந்தகையே
இன்னும் இரங்கவில்லயோ
அம்மா இன்னும் இரங்கவில்லயோ அம்மா
இன்னும் இரங்கவில்லயோ
மெய்யது உன் அருட்பணிக்கே அர்ப்பணித்து
என்னாளும் வாழ வேண்டும்
துய்ய நின் திருப்புகழ் பாடியும் பேசியும் வாய்க்கு நல்
உணர்ச்சி ஊட்டவேண்டும்
துய்ய நின் திருவடிகள் உள்ளன்புடன் கண்டு
கண்கள் களிக்க வேண்டும்
பைய்ய வந்து உன் பங்கயத்தாள் பரிமளத்தை
என் நாசி பரிந்துணர்ந்து மகிழவேண்டும்
வையகத்து வம்பெல்லாம் நுழையாது என் செவிகள்
நின் புகழயே கேட்கவேண்டும்
மையல் உந்தன் மேலன்றி மற்றெதிலும் கொள்ளாத
மனம் எனக்கருள வேண்டும் அய்யம்
எல்லாம் அகற்றி உன் அடி மலர்கள் பற்றி
அமைதியுடன் வாழ வேண்டும்
சர்வமங்களயே போற்றி
சர்வமங்களயே போற்றி
சர்வமங்களயே போற்றி.

Комментарии

Информация по комментариям в разработке