காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே பாடல் | Kalamithu Kalamithu song | பத்மினி சோக இனிமையான பாடல் .

Описание к видео காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே பாடல் | Kalamithu Kalamithu song | பத்மினி சோக இனிமையான பாடல் .

#theanisai #Kannadasansongs #msvhitsongs #susheelahits
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே பாடல் | Kalamithu Kalamithu song | பத்மினி சோக இனிமையான பாடல் . Tamil Lyrics in description .
Movie : Chithi
Music by : M. S. Viswanathan
Song : Kalamithu Kalamithu
Singers : P. Susheela
Lyrics : Kannadasan
பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

பெண் : ஆரிராரிரி ஆரிர ராரோ
ஆரி ராரிராரோ…
ஆரிராரிரி ஆரிரி ஆரோ
ஆரி ராரிரிரோ…

பெண் : காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

பெண் : நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுத் தமிழ் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி தீராத தொல்லையடி

பெண் : காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

பெண் : மாறும் கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது
தூக்கமென்பதேது
தான் நினைத்த காதலனை
சேர வரும் போது
தான் நினைத்த காதலனை
சேர வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது

பெண் : மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது

பெண் : காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

பெண் : ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும் போதும்
அன்னை என்று வந்த பின்னும்
கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கி கண் மறைந்து
காலம் வந்து தேடும்
கை நடுங்கி கண் மறைந்து
காலம் வந்து தேடும்
காணாத தூக்கம் எல்லாம்
தானாக சேரும் தானாக சேரும்

பெண் : காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

பெண் : ஆரிராரிரி ஆரிர ராரோ
ஆரி ராரிராரோ…
ஆரிராரிரி ஆரிரி ஆரோ
ஆரி ராரிரிரோ……ஆரி ராரிரிரோ…

Комментарии

Информация по комментариям в разработке