செல்வமும் வெற்றியும் அள்ளித் தரும் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கர் திருக்கோயில். திருச்சி -

Описание к видео செல்வமும் வெற்றியும் அள்ளித் தரும் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கர் திருக்கோயில். திருச்சி -

பிரகலாதனின் தீவிர பக்திக்கும் நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டு அழைத்தவுடனே அஞ்சேல் என அடுத்த கணமே திருமால் எடுத்த அவதாரமே ஸ்ரீ நரசிம்ம அவதாரம் ஆகும். கணத்தில் தோன்றி கணத்தில் அவதாரத்தை பின்பு வந்த பல முனிவர்களும் ரிஷிகளும் தங்களுக்கும் இந்த காட்சி தர வேண்டும் என்று வேண்ட பக்தனின் குறை தீர்க்க அல்லது அவர்களுக்கு அருள் செய்தல் வேண்டி அந்த அந்த தலங்களில் காட்சி தந்தவர் நரசிம்ம மஹா பிரபு. பல்வேறு தலங்களில் பல்வேறு கோலங்களில் கோயில் கொண்டிருக்கும் பலவிடங்களில் ஒன்று நம்பெருமாள் குடி கொண்டுள்ள திருவரங்கம். இத்தலத்துடன் மேட்டழகிய சிங்கர், காட்டழகிய சிங்கர், ஆற்றழகிய சிங்கர் என மூன்று நரசிங்கங்கள் தொடர்புடையன. இவற்றுள் ஆற்றழகிய சிங்கர் கோயில் கொண்ட வரலாற்றினை காண்போம்.

ஆற்றழகிய சிங்கர்

நரசிம்மாவதாரத்தில் தூணிலிருந்து வெளி வந்தார். அதனால் ஆற்றழகிய சிங்கர் பூமிக்கு அடியில் இருந்து வந்தவர். திருச்சி திருவெறும்பூருக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமம். சோழமாதேவி. ராஜ ராஜ சோழன் துணைவி சோழமாதேவி என்றும் அரசி பெருமாள் பெயரில் பக்தி கொண்டு எழுதி வைத்த ஊர் அவ்வூரில் ராஜ ராஜ விண்ணகர் என்ற பெயரில் ஒரு திருமால் கோவிலையும் எடுத்து பல்வகை நிவந்தங்களையும் அளித்திருந்தாள்.

சோழ சாம்ராஜ்யம் மெல்ல வலுவிழந்து போக எதோ காரணங்களால் கோவிலும் சிதைந்து அழிந்து மண்மூடிப் போய் விளை நிலமானது.

நாளடைவில் ஒரு விவசாயி கோவில் இருந்த இடத்தை உழுது கொண்டிருந்த போது ஏர் முனை பட்டு பூமிக்குள் இருந்து வெளியே வந்தார் லட்சுமி நரசிம்மர். ஊரார் அனைவரும் கூடி புதுக்கோவில் அமைப்பது தொடர்பாக பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்திலிருந்து சிங்கத்தின் கர்ஜனை போன்ற ஒரு அசரீரியாக "காவிரியின் வடகரையில் காட்டழகிய சிங்கராக இருந்து விலங்குகளிடமிருந்து மக்களைக் காப்பது போல் துஷ்டர்களிடமிருந்து தென் கரையில் அமர்ந்து மக்களைக் காக்கப் போவதாக கூறியது. அங்கே சிறிய திருவடி தனக்காக காத்துக் கொண்டு இருப்பதாகவும் தன்னை கிழக்கு நோக்கி நிறுவுக" என அசரீரியாய் ஒலித்தது.

அதன்படி மக்கள் மெல்ல நரசிம்ம மூர்த்தியை காவிரி தென்கரையில் அமைந்திருந்த மண்டபத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நரசிம்மர் வரவுக்காக காத்திருப்பது போல நின்றிருந்தார் நெற்றிக்கண் ஆஞ்சனேயர். நரசிம்மரை ப்ரதிஷ்டை செய்த பிறகு மண்டபமே நிறைவானது போல் அமைந்தது. அது முதல் அங்கு தினமும் வழிபாடுகள் குறைவின்றி நடந்தன.ஆற்றங்கரையில் வாராது வந்து அமர்ந்து மாமணி அமர்ந்த பகுதி சிந்தாமணி எனவும் பெயர் பெற்றது.

காவிரிக்கரை ஆற்றழகிய சிங்கர்

விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் திருவரங்கன் பால் மிக்க ஈடுபாடு கொண்டு பல திருப்பணிகளையும் செய்யும் போது ஆற்றங்கரையில் அமர்ந்து பல நலன்களை செய்து கொடிருந்த ஓடைக்கரை நரசிம்மர் மீதும் அவர்கள் கவனம் திரும்பியது. வீர பூபதி உடையார் என்பவர் அந்த சிறிய மண்டபத்தை எடுத்து பிரித்து அழகிய கருவறை அமைத்து பெரியதாக்கினார். ஓடத்தில் செல்வோர் நரசிம்மரையும் நெற்றிக்கண் அனுமனையும் வணங்கி விட்டு இக்கறை அல்லது அக்கறையில் சென்று தரிசனம் செய்வது என்பது நடைமுறையாகிப் போனது.

கருவறையும் மூர்த்தியும்

கருவறையில் மூலவர் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் தன் மடியினில் லட்சுமியை அமர்த்திக்கொண்டு லக்ஷமி நரசிம்மராக ஆற்றழகிய சிங்கர் என்ற திரு நாமத்தோடு கிழக்கு நோக்கி சேவை அருளுகிறார். உற்சவர்க்கு அழகிய மணவாளன் என்பது பெயராகும். மூலவர் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் சந்நதிக்கு எதிர் புறம் மேற்கு நோக்கியபடி கருடாழ்வார் அமர்ந்திருக்கின்றார் கருடாழ்வார் தவிர ஸ்ரீ நம்மாழ்வார், பெருமாள் ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ இரமானுஜர் மற்றும் மணவாள மாமுனி சந்நதிகள் அமைந்து உள்ளன. மூலவரை பிரதக்ஷணமாகச் சுற்றி வரும் பாதையில் பல்வேறு ஊர்களில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் படங்கள் பெரிது பெரிதாக ஒரு சேர தரிசனம் செய்ய மாட்டப்பட்டுள்ளன.

ஆலயம் செல்லுவதற்கு...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் தான் இந்தக் கோயில் உள்ளது. திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்கா நோக்கி வண்டிகளில் பயணம் செய்வோர், காவிரி புதுப்பாலத்தின் மேல் ஏறாமல் அதற்கு சற்று முன்பே, வலது புறமாக கீழிறங்கி திரும்பிச் செல்லும் தனிவழிபாதையில் 200 அடிகள் சென்றால் உடனடியாக இந்தக்கோயில் வந்துவிடும்.

கரை சேர்க்கும் கடவுள்

எப்பொழுதிலும் எவ்வகை வெள்ளம் வந்தாலும் காப்பாற்றி கரை சேர்க்கும் ஒரே தெய்வமாக இருந்தது. ஆதலால் அவற்றைக் கடந்து செல்பவர்களும் வருபவர்களும் அதனை வணங்கி விட்டுச் செல்லுவதும் பலன் பெறுவதும் பழக்கத்தில் இருந்தது. எதிரில் அனுமன் காட்சி தருவதால் கஷ்டங்கள் அனைத்தையும் தாண்டி கரை சேர்க்கும் தெய்வமாக விளங்குகிறார்.

பூஜையும் பிரார்த்தனையும்

தினமும் இருகால பூஜை நடைபெறும் இத்திருக்கோவில் பக்தர்கள் தரிசனத்திற்கென காலை 7.30 முதல் 9.30 வரையும் மாலை 5.30 முதல் 7.30 வரையும் திறந்து இருக்கும்.

இது ஒரு சிறந்த பிரார்த்தனை தலமாக அமைந்து உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாகவும் உள்ளது. திருமணத்தடை நீங்க சனிக்கிழமை 5 வாரம் ஜாதகத்தை வைத்து பூஜையும், வேலை, லட்சுமிகடாட்சம் கிட்டவும், கடன்சுமை நீங்க, குடும்ப ஒற்றுமை, மக்கட்பேறு, வியாபார அபிவிருத்தி போன்றவற்றிற்காக சிறப்பு வழிபாடுகளும், வார நாட்கள் தவிர மாதா மாத ஸ்வாதி, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களும் பிரார்த்தனை தினங்களாகக் கொண்டு வழிபடப்படுகிறது.

சித்ரா பவுர்ணமி, வைகாசி சுவாதியில் நரசிம்ம ஜயந்தி, ஆனி ஸ்வாதி, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, திருவாடிப்பூரம், ஆவணியில் பவித்ரோத்சவம், புரட்டாசியில் நவராத்திரி விஜயதசமி குதிரை வாகனம் என ஒவ்வொரு மாதமும் பெருமாள் கோவில்களில் நடைபெறும் அனைத்துவித உற்சவங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன.

மேலும் விவரங்கள் அறிய 8526279530, 9942052558 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Комментарии

Информация по комментариям в разработке