Do Nothing Farming-ல் சாதனைப் படைக்கும் பெண் சரோஜா - சிறந்த பெண் விவசாயி

Описание к видео Do Nothing Farming-ல் சாதனைப் படைக்கும் பெண் சரோஜா - சிறந்த பெண் விவசாயி

#UzhavarAwards2022 #ActorKarthi #UzhavanFoundation #Karthi #Suriya #Actorsuriya #Organicfarming #Farming #DirectorVetrimaaran #DoctorKSivaraman #UzhavarAwardswithEnglishSubtitle

#DoNothingFarming #traditionalfarming

Do Nothing Farming மூலம் கிடைக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தி பல ஆயிரம் விவசாயிகளுக்கு முன்னுதாரனமாய் திகழுவதோடு, தான் கற்ற அனுபவத்தை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து அவர்கள் வாழ்விலும் வெளிச்சம் வர செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளபட்டி சரோஜா அவர்களைப் பாராட்டி உழவர் விருதுகள் 2022 விழாவில் சிறந்த பெண் விவசாயிக்கான உழவர் விருதும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

About Uzhavan Foundation
உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பானது நடிகர் கார்த்தி அவர்களால் உழவர்களுக்கு துணை நிற்கவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களை கெளரவப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டதாகும்.

இந்த வகையில் வேளாண்மையின் பல்வேறு தளங்களில் சிறப்பாக இயங்கி வருபவர்களைப் கண்டறிந்து பாராட்டி ஒவ்வொரு வருடமும் விருதளித்து கெளரவப்படுத்தி வருகிறது.

பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்தல், சிறந்த வேளாண் விற்பனை, சிறந்த வேளாண் பங்களிப்பு, சிறந்த பெண் விவசாயி, சிறந்த வேளாண் கருவிகள் வடிவமைப்பு போன்றவற்றிற்கு 2019 ஆம் ஆண்டிலிருந்து உழவர் விருதுகள் வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது.

உழவர் விருதுகள் 2022 க்கான விழா தி. நகரில் உள்ள சர். பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் 05.03.2022 அன்று நடைப் பெற்றது. இவ்விழாவில் பாரம்பரிய விதைகள் மீட்டெடுத்தல் மற்றும் பரவலாக்கத்திற்கான உழவர் விருதை திருமிகு. பரமேஸ்வரனுக்கும் , சிறந்த பெண் விவசாயிக்கான விருதை திருமிகு சரோஜா அவர்களுக்கும், சிறந்த வேளாண் கூட்டுறவுக்கான விருதை கோத்தகிரி நம் சந்தை அமைப்பும், நீர் நிலைகளை மீட்டெடுத்தலுக்கான விருதை திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நம் அனுமன் நதி அமைப்புக்கும், சிறந்த விவசாயப் பெண்கள் கூட்டமைப்புக்கான விருதை சங்கனாப்பேரி களஞ்சியம் விவசாயப் பெண்கள் சங்கத்திற்கும், வேளாண் சிறப்பு பரிசு திண்டிவனம் சிருஷ்டி ஃபவுண்டேஷனுக்கும் வழங்கப்பட்டது..

இந்த விழாவில் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி, திரைப்பட நடிகரும், அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனருமான சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன், திரைப்பட நடிகரும் ஓவியருமான சிவகுமார், சித்த மருத்துவர் கு. சிவராமன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், பாமயன் மற்றும் அனந்து ஆகியோர் கலந்துக் கொண்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உழவர் விருதுகளயும் தலா 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவித்தனர்.


Uzhavan Foundation's prestigious Uzhavar Awards 2022 happened last week. The event held at the Sir. Pitti Theagaraya Auditorium, T.Nagar, Chennai. In the ceremony, the awards were presented to Proficient farmers and other agriculture-based groups for incorporating innovations in the field of Agriculture. The proficiency included water reclamation, traditional seed recovery, organic farming and others. A total of 6 awards were presented to individuals and groups.

Farmers adopting modern technologies, implementing unique marketing strategies, successful women farmers are rewarded with citations and cash prize of Rs. 1 lakh by the Uzhavan foundation. Farmers with visual impairments, schools taking agriculture to students, people strongly passionate about agriculture were also awarded in the past years. Students passionate about agriculture are also identified and awarded.

Apart from this, the foundation has also devised various creative ways to encourage agriculture. The Uzhavan Foundation also conducts various competitions related to agriculture.

Visit Our
Website: https://uzhavanfoundation.in/

Follow us on
Facebook page:   / uzhavanfdn  
Twitter :   / uzhavanfdn  
Instagram:   / uzhavanfdn  

Комментарии

Информация по комментариям в разработке