பிறர் பொருட்களை திருடினால் கருடபுராணம் சொல்லும் தண்டனை GARUDAPURANAM PUNISHMENTS கருடபுராணம்

Описание к видео பிறர் பொருட்களை திருடினால் கருடபுராணம் சொல்லும் தண்டனை GARUDAPURANAM PUNISHMENTS கருடபுராணம்

கருட புராணம் குறிப்பிடும் பாவத்துக்கான பலன்கள்


சொர்க்க, நரகம் பற்றி மற்ற எல்லா நூல்களைவிடவும் கருட புராணத்தில் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டிருக்கின்றன. பதினெட்டுப் புராணங்களில் தொன்மையான கருட புராணம் நீத்தார் வாழ்வு, ஈமச் சடங்குகள், மறுபிறவி, சொர்க்கம், நரகம் மட்டுமன்றி மருத்துவம், வானியல், உடல் இயக்கம், ஆன்மாக்களின் நிலைகள், நவரத்தினப் பலன்கள், சடங்குகள், தானம் உள்ளிட்ட பல விவரங்கள் பத்தொன்பதாயிரம் பாடல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

பாவம், புண்ணியம் எதையும் கண்டுகொள்ளாமல் காசுக்காக எதையும் செய்பவர்கள் `சான்மலி’ நரகத்தை அடைவார்கள். இங்கு முள் தடிகளாலும், முள் செடிகளாலும் குத்தப்பட்டு துன்பப்படுவார்கள். 

கொஞ்சமும் அஞ்சாமல் பிறர் உழைப்பைச் சுரண்டி வாழும் மனிதர்கள் போகும் இடம் `கிருமிபோஜனம்.`இங்கு புழு, பூச்சிகள், கிருமிகள் இவர்களைத் துளைத்துக் கொடுமைக்குள்ளாக்கும்

பொய்ச் சாட்சி சொல்லி நிரபராதிகளைத் துன்பத்துக்குள்ளாக்கும் மனிதர்களுக்கு உண்டான நரகம் `அவீசி.’ இங்கு துர்நாற்றம் கொண்ட நீரில் ஆன்மாக்கள் அழுத்தப்பட்டுத் துன்புறுத்தப்படும்.

Комментарии

Информация по комментариям в разработке