சிவன்மலை உத்தரவு பொருள் தீடீர் மாற்றம்!! சிவன்மலை உத்தரவு பெட்டி இன்று 2022 | sivanmalai

Описание к видео சிவன்மலை உத்தரவு பொருள் தீடீர் மாற்றம்!! சிவன்மலை உத்தரவு பெட்டி இன்று 2022 | sivanmalai

சிவன்மலை உத்தரவு பொருள் தீடீர் மாற்றம்!! சிவன்மலை உத்தரவு பெட்டி இன்று 2022 | sivanmalai





காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை செய்யப்படுவதால் நாட்டில் போலி ஆன்மீக வாதிகள், அதிகார பலத்தால் தவறாக செயல்படுபவர்கள், அதர்மம் அழிந்து நன்மை பெருகும் என பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. சிவன்மலை கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது.

பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது.

இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு,நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இருப்பு சங்கிலி, ருத்தரட்சம் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி முதல் நிறைப்படி கம்பு வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருப்பூர், குமரன் நகர் பகுதியை சேர்ந்த கே.ஆர்.கார்த்திகேயன் என்ற பக்தரின் கனவில் வேல் உத்திரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இதுபற்றி கோவில் சிவாச்சியர் ஒருவர் கூறியதாவது: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதே அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். வேல் வைக்கப்பட்டுள்ளது, முருகனிடம்உள்ள வேல் அதர்மத்தையும், தீமையும் அழிக்கும் சக்தி கொண்டது. இப்போது வேல் வைக்கப்பட்டதால், நாட்டில் அதர்மமும், தீமையும் அழிக்கப்படும். சமுதாயத்தில் இதன் தாக்கம் போக போக தான் தெரியவரும், என்றார்.

3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வேல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த 2019ம் ஆண்டு வேல் வைத்து பூஜை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.


#சிவன்மலை, சிவன்மலை கோயில், #சிவன்மலைஉத்தரவுபெட்டிஇன்று2022, சிவன்மலை வரலாறு, சிவன்மலை முருகன் பாடல், சிவன்மலை ஆண்டவர், சிவன்மலை உத்தரவு பெட்டி இன்று, சிவன்மலை உத்தரவு பெட்டி 2022, சிவன்மலை ஆண்டவர் உத்தரவு 2022, சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி, #sivanmalai murugan kovil, #sivanmalaiutharavupetti, #sivanmalaitemple, sivanmalai murugan songs, sivanmalai murugan temple, sivanmalai tirupur, sivanmalai murugan, sivanmalai andavar, sivanmalai muruganukku santhana kappu song, #sivanmalaiutharavupetti2022today

Комментарии

Информация по комментариям в разработке